‘சதி லீலாவதி’ மூலம் நடிகராக அறிமுகமான எம்.ஜி.ஆர், ‘ராஜகுமாரி’யில் ஹீரோ ஆவதற்கு முன், சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருக்கிறார். அப்படி நடித்த படங்களில் ஒன்று, ‘பிரகலாதா’. இது அவருக்கு 6-வது படம்.
அந்தக் காலகட்டங்களில் புராணக் கதையை மையப்படுத்தி படங்கள் உருவாக்குவது வழக்கமாக இருந்தது. அதனடிப்படையில் பிரகலாதனின் கதையை படமாக்கினார்கள். திருமால், நரசிம்ம அவதாரம் எடுத்து இரணியனை வதம் செய்வதுதான் கதை.
‘காளிதாஸ்’ (1931) படத்தை இயக்கிய ஹெச்.எம்.ரெட்டி,...
“வணங்கான்’ படத்தின் ஆடியோ வெளியீட்டையும், இயக்குநர் பாலாவின் இருபத்தைந்தாம் ஆண்டு கலைப்பயணத்தையும் இணைத்து இரட்டை விழாவாக டிசம்பர் 18 ஆம் தேதி நடத்த உள்ளோம்” என ‘வணங்கான்’ படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: “கலையுலகம் உறவுகளாலும் உணர்ச்சிகளாலும் நிரம்பிய உலகம் மட்டுமல்ல, மகத்தான திறமையாளர்களை உறவுகளாக இணைத்துக் கொண்டு இயங்கும் ஒரு குடும்பம். அனைவரின் சுக துக்கங்களிலும், பாராட்டுதலிலும், தோள்...
லோகேஷ் கனகராஜ் ரஜினியின் ‘கூலி’ படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு, ஜெய்ப்பூரில் நடந்து வருகிறது. இதற்கிடையே லோகேஷ் கனகராஜ் கதையில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கும் படம், ‘பென்ஸ்’. இதில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். ‘லோகேஷ் கனகராஜ் சினிமாட்டிக் யுனிவர்ஸி’ன் ஒரு பகுதியாக இந்தப் படம் உருவாகிறது.
சுதன் சுந்தரம், ஜெகதீஷ் பழனிச்சாமியுடன் இணைந்து லோகேஷ் கனகராஜும் இதைத் தயாரிக்கிறார். அதிரடி ஆக்ஷன் திரைப் படமாக உருவாகும் இதில்...
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ், தற்போது ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். அடுத்து, ‘இட்லி கடை’ படத்தை இயக்கி, நடித்து வருகிறார். இதில் அவர் ஜோடியாக நித்யா மேனன் நடிக்கிறார். அடுத்து சேகர் கம்முலா இயக்கத்தில் ‘குபேரா’ படத்திலும் நடித்து வருகிறார். இவர் 2018-ம் ஆண்டு ‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் தி ஃபகிர்’ என்ற படம் மூலம் ஹாலிவுட்டில்...
மலையாள நடிகையான ஹனி ரோஸ் தமிழில், ‘முதல் கனவே’, ‘சிங்கம்புலி’, ‘கந்தர்வன்’ உட்பட சில படங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் நடித்து வரும் அவர், இப்போது ‘ரேச்சல்’ என்ற மலையாளப் படத்தில்நடித்துள்ளார். இது தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட மொழியிலும் வெளியாக இருக்கிறது. இவர் மலையாள நடிகர் சங்கத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: என் அழகு பற்றியும் திருமணம் பற்றியும் கேட்கிறார்கள். நான் நல்ல எண்ணத்துடன்...
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விக்ரமின் நடிப்பில் உருவாகி உள்ள ‘வீர தீர சூரன்’ படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண்குமார், இந்தப் படத்தை இயக்கி உள்ளார். விக்ரமுடன் இந்தப் படத்தில் துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, மலையாள நடிகர் சூரஜ் வெஞ்சரமுடு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
ஷிபு தமீன்ஸ் தயாரிப்பில் படம் உருவாகி உள்ளது....
‘முருகா' அசோக் குமார், அஜய், சோனியா, மாறன் உட்பட பலர் நடிக்கும் படம், ‘சதுரங்க ஆட்டம் ஆரம்பம்’. டேனியல் ஜே வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு பாலசுப்ரமணியம் இசை அமைக்கிறார். எம்.வி.ராமச்சந்திரன் இயக்குகிறார். வி.வி.எஸ். சுப்ரீம் பிலிம்ஸ் சார்பில் வினோத் வி சர்மா தயாரிக்கும் இந்தப் படத்தின் தொடக்க விழா சென்னையில் நடந்தது. இயக்குநர் பேரரசு, இயக்குநரும் நடிகருமான ஆர்.அரவிந்தராஜ், நடிகர் சக்திகுமார், இயக்குநர் பாரதி கணேஷ்...
அனைத்து பிரச்சினைகளும் முடிவுற்று, ஓடிடியில் வெளியாகியுள்ளது ‘தங்கலான்’ திரைப்படம்.
ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியான படம் ‘தங்கலான்’. விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்ட படம், வசூல் ரீதியாக எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. ஆனால், இதன் ஓடிடி வெளியீடு தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. இதற்கு காரணமாக சரியான தருணத்தில் ஓடிடி நிறுவனத்துக்கு படத்தைக் கொடுக்கவில்லை என்று கூறப்பட்டது.
தற்போது அனைத்து பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகண்டு ‘தங்கலான்’ திரைப்படம் ஃநெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில்...
இந்தி திரைப்பட இயக்குநர் நிதேஷ் திவாரி, ராமாயண கதையை படமாக்கி வருகிறார். பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படத்தில் ராமராக, ரன்பீர் கபூரும் சீதையாக சாய் பல்லவியும் ராவணனாக ‘கே.ஜி.எஃப்’ யாஷும் நடிக்கின்றனர்.
நமித் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோக்கஸ் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து நடிகர் யாஷின், மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.
இந்நிலையில் ஜெட்டாவில் நடந்த செங்கடல் திரைப்பட விழாவில் கலந்துகொண்ட ரன்பீர் கபூரிடம் ‘ராமாயணம்’ படம் பற்றிக் கேட்கப்பட்டது....
‘மாநகரம்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ், அதன் பின் ‘கைதி’, ’மாஸ்டர்’, ‘விக்ரம்’, ‘லியோ’ படங்களை இயக்கினார். இப்போது ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ படத்தை இயக்கி வருகிறார். இதில் சத்யராஜ், ஆமிர்கான், நாகார்ஜுனா, உபேந்திரா உட்பட பலர் நடிக்கின்றனர். இந்நிலையில், ‘கூலி’ படத்தை முடித்ததும் அவர் ‘கைதி 2’ படத்தை இயக்குவார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் சமீபத்தில் நடந்த விழா ஒன்றில் கலந்து கொண்ட லோகேஷ் கனகராஜ்,...










