Google search engine
என்னுடைய வெற்றியின் மூலம் வெறுப்பாளர்களுக்கு நான் பதில் தர விரும்பவில்லை. என் வெற்றி அவர்களுக்கானது அல்ல. என் வெற்றி என்னுடன் சேர்ந்து 100 சதவீத உழைப்பை போடும் என்னுடைய குழுவினருக்கானது என்று நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். ஆங்கில யூடியூப் சேனல் ஒன்றுக்கு சிவகார்த்திகேயன் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: “இந்த துறையில் என்னை போன்ற சாதாரண ஆட்கள் வருவதை சிலர் மட்டுமே வரவேற்கின்றனர். சில குழுக்கள் அதில் மகிழ்ச்சி அடையவில்லை. இந்த...
விஜய் சேதுபதியின் 50-வது படம் ‘மகாராஜா’. இதை நித்திலன் சாமிநாதன் இயக்கியுள்ளார். கடந்த வருடம் ஜூன் மாதம் வெளியாகி வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் ரூ.100 கோடியை தாண்டி வசூலித்தது. இந்தப் படம் சீன மொழியில் டப் செய்யப்பட்டு கடந்த நவம்பர் மாதம் அங்கு வெளியானது. அங்குள்ள ரசிகர்களையும் கவர்ந்த மகாராஜா, 2018-ம் வருடத்துக்குப் பிறகு அதிக வசூலை ஈட்டிய இந்தியப் படமாக மாறியிருக்கிறது. ரூ.91.55 கோடியை இந்தப் படம்...
நயன்தாராவின் ஆவணப்படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் கடந்த நவம்பரில் வெளியானது. அதில், தனது தனிப்பட்ட வாழ்க்கை முதல் திருமணம் வரையிலான விஷயங்கள் பற்றி நயன்தாரா கூறியுள்ளார். அதில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அவர் நடித்த ‘நானும் ரவுடிதான்’ படத்தின் படப்பிடிப்பு தள வீடியோ பயன்படுத்தப்பட்டு இருந்தது. தனது அனுமதி இல்லாமல் அதை பயன்படுத்தியதாக அந்தப் படத்தின் தயாரிப்பாளர் தனுஷ், ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு...
மும்பையை சேர்ந்த பாயல் கபாடியா இயக்கிய படம், ‘ஆல் வி இமேஜின் அஸ் லைட்’. இதில் கனி குஸ்ருதி, திவ்யா பிரபா, சாயா கதம், ஹ்ருது ஹாரூண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படம் 77-வது கேன்ஸ் திரைப்பட விழாவில் கிராண்ட் பிரி விருதைப் பெற்று சாதனைப் படைத்தது. இதைத் தொடர்ந்து கோல்டன் குளோப் விருதுக்கு, சிறந்த இயக்குநர், சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம் ஆகிய பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டது. இந்திய இயக்குநர் ஒருவர், கோல்டன்...
நடிகை ஹனி ரோஸ், தொழிலதிபர் ஒருவர் தன்னை இழிவுபடுத்தும் விதமாக நடந்து கொள்வதாகவும் அது தொடர்ந்தால் சட்ட நடவடிக்கை எடுப்பேன் என்றும் அவர் பெயரைக் குறிப்பிடாமல் எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “அந்த தொழிலதிபரின் வணிக நிறுவன திறப்பு மற்றும் சில நிகழ்ச்சிகளுக்கு மற்ற நடிகைகளைப் போல நானும் சென்றுள்ளேன். அவர் பொது நிகழ்ச்சியில், எனக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் பேசியதை அடுத்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் அதைத் தெளிவாகத் தெரிவித்தேன்....
‘திருநெல்வேலி' படம் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகர் உதயாவுக்கு இது 25-வது ஆண்டு. இப்போது அவர் நடிக்கும் படத்துக்கு ‘அக்யூஸ்ட்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இதில் அஜ்மல், யோகிபாபு ஆகியோரும் நடிக்கின்றனர். ஜேசன் ஸ்டுடியோஸ், ஸ்ரீ தயாகாரன் சினி புரொடக்‌ஷன் மற்றும் எம் ஐ ஒய் ஸ்டூடியோஸ் சார்பில் ஏ.எல்.உதயா, தயா என்.பன்னீர்செல்வம், எம். தங்கவேல் தயாரிக்கும் இப்படத்தைப் பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்குகிறார். கன்னட நடிகை ஜான்விகா நாயகியாக நடிக்கிறார். குற்றம்...
ஜெயம்யம் ரவி, நித்யாமேனன், யோகி பாபு, வினய், ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம், ‘காதலிக்க நேரமில்லை’. ரெட் ஜெயன்ட் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். வரும் 14-ம் தேதி வெளியாகிறது. படத்தை இயக்கியுள்ள கிருத்திகா உதயநிதி கூறும்போது, “இது ரொமான்ஸ் கதைதான். இன்றைய இளைஞர்களின் காதலைப் பேசும் படம் இது. காதலில் இருக்கும் எமோஷன், புரிந்து கொள்ளாத தன்மை, சண்டை, பிரேக் அப் எல்லாமே...
தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார், பூஜா ஹெக்டே. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா ஜோடியாக ‘ரெட்ரோ’ படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கும் அவர், விஜய்யின் 69-வது படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் ரோஷன் ஆண்ட்ரூ இயக்கத்தில் ஷாகித் கபூருடன் அவர் நடித்துள்ள ‘தேவா’ என்ற இந்திப் படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. இந்நிலையில் பூஜா ஹெக்டே கூறும்போது, “என்னைப் பொறுத்தவரை நடிப்பு என்பது எப்போதும் மாறிக் கொண்டிருப்பது. நான்...
இந்தியாவின் முதல் விடுதலைப் போராட்ட வீராங்கனை வேலுநாச்சியாரின் வரலாற்றை மையமாக வைத்து ‘வீரமங்கை வேலுநாச்சியார்’ என்ற திரைப்படம் உருவாகிறது. டிரண்ட்ஸ் சினிமாஸ் சார்பில் ஜெ.எம்.பஷீர் தயாரிக்கும் இந்தப்படத்தை ஆர்.அரவிந்தராஜ் இயக்குகிறார். வேலுநாச்சியாராக அறிமுக நடிகை ஆயிஷா நடிக்கிறார். முக்கிய பாத்திரமான பெரிய மருதாக ஜெ.எம்.பஷீர் நடிக்கிறார். இப்படத்தின் மோஷன் பிக்சர் டீஸர், வேலுநாச்சியாரின் பிறந்த நாளை முன்னிட்டு சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதன் படப்பிடிப்பு லண்டனில் அடுத்த மாதம் தொடங்குகிறது. அடுத்த...
அஜித்குமார் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ படம் பொங்கலுக்கு வெளிவருவதாக இருந்தது. இதனால் மீடியம் மற்றும் சிறு பட்ஜெட் படங்கள் தங்கள் ரிலீஸை தள்ளி வைத்திருந்தன. இந்நிலையில் ‘விடாமுயற்சி’ ரிலீஸ் தள்ளிப் போனதால் பொங்கலுக்கு பல்வேறு படங்கள் வெளியாக இருப்பதாக அறிவிப்புகள் வெளியாகி இருக்கின்றன. அதன்படி பெரிய பட்ஜெட் படங்களில், ஷங்கரின் ‘கேம்சேஞ்சர்’ 10-ம் தேதி வெளியாகிறது. அதே நாளில் பாலாவின் ‘வணங்கான்’, ஷேன் நிகம் நடிக்கும் ‘மெட்ராஸ்காரன்’ ஆகிய படங்களும் ரிலீஸ்...