அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய படம் ‘குட் பேட் அக்லி. த்ரிஷா, அர்ஜுன் தாஸ்,பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப்படம் வரவேற்பைப் பெற்றுள்ளதை அடுத்து இதன் ‘சக்சஸ் மீட்’ சென்னையில் நடந்தது.
அப்போது இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூறும்போது, “ஏழாவது படிக்கும் ஒரு பையன், ஒரு நடிகரைப் பார்த்து உத்வேகம் அடைந்து, இயக்குநராக வேண்டும் என ஆசைப்பட்டு இன்று இந்த இடத்தில் நிற்கிறான். நான் அஜித் சார் ரசிகனாக...
பிரபல மலையாள நடிகர், ஷைன் டாம் சாக்கோ. இவர் தமிழில் விஜய்யின் ‘பீஸ்ட்’, ‘ஜிகர்தண்டா 2’, அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படங்களில் நடித்துள்ளார். இவர் அவ்வப்போது சர்ச்சையில் சிக்குவது வழக்கம். கொச்சியில் ஒரு ஓட்டலில் போதைப் பொருள் விற்பதாகக் கூறி போலீஸார் சோதனை நடத்த இருந்தனர். இந்த விஷயம் தெரிந்த ஷைன் டாம் சாக்கோ அங்கிருந்து தப்பியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகளை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.
இந்நிலையில்...
கபாலி, பரியேறும் பெருமாள் படங்களில் துணை கதாபாத்திரங்களிலும், ‘காலேஜ் ரோடு’ படத்தில் நாயகனாகவும் நடித்த லிங்கேஷ், அடுத்து நடித்துள்ள படம், ‘என் காதலே’. பிரிட்டிஷ் நடிகை லியா மற்றும் திவ்யா தாமஸ் நாயகிகளாக நடித்துள்ளனர். காட்பாடி ராஜன், மதுசூதனன் ராவ், மாறன், கஞ்சா கருப்பு, சித்தா தர்ஷன், செந்தமிழ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். டோனி ஜான் ஒளிப்பதிவு செய்துள்ளார். சாண்டி சாண்டெல்லோ இசை அமைத்துள்ளார். ஸ்கை வாண்டர்ஸ்...
‘நாயகன்’ படத்துக்குப் பிறகு கமல்ஹாசன்-மணிரத்னம் இணையும் படம், ‘தக் லைஃப்’. இதில், சிலம்பரசன் டி.ஆர், த்ரிஷா, நாசர், ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், அபிராமி உள்பட பலர் நடித்துள்ளனர். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ஆர்.மகேந்திரன் மற்றும் சிவா ஆனந்த் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படம் ஜூன் 5- ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்தப்...
‘பம்பாய்’ போன்ற ஒரு படத்தை இப்போது எடுத்து வெளியிட்டால், திரையரங்குகள் எரிக்கப்படும் என்று ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் தெரிவித்துள்ளார்.
யூடியூப் சேனல் ஒன்றுக்கு ராஜீவ் மேனன் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: “‘பம்பாய்’ போன்ற ஒரு படத்தை இன்றைய காலகட்டத்தில் எடுக்க முடியாது. இந்தியாவின் சூழ்நிலை மிகவும் நிலையற்றதாகி விட்டது. மக்கள் மிகவும் வலுவான நிலைப்பாடுகளை எடுக்கிறார்கள். மதம் மிகப்பெரிய பிரச்சினையாகிவிட்டது. ‘பம்பாய்’ போன்ற ஒரு படத்தை நீங்கள் எடுத்து, அதை...
ஜோதிகா இல்லையென்றால் இவ்வளவு தூரம் வந்திருக்க முடியாது என்று ‘ரெட்ரோ’ இசை வெளியீட்டு விழாவில் சூர்யா தெரிவித்தார்.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மே 1-ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.
இதன் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று (ஏப். 19)...
அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள படம், ‘குட் பேட் அக்லி'. கடந்த 10-ம் தேதி வெளியான இந்தப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது. இதில் இளையராஜா இசையில் வெளிவந்த ‘ஒத்த ரூவா தாரேன்…’, ‘இளமை இதோ இதோ…’, ‘என் ஜோடி மஞ்சக்குருவி’ ஆகிய பாடல்களைப் பயன்படுத்தி உள்ளனர்.
இந்நிலையில் தனது பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக் கூறி இளையராஜா தரப்பில் அவரது வழக்கறிஞர் ‘குட் பேட் அக்லி' பட தயாரிப்பாளருக்கு...
பிரபல ஹாலிவுட் நடிகர் வில்லியம் லெவி (44). இவர் ‘பிளானட் 54’, ‘எ சேஞ்ச் ஆஃப் ஹார்ட்’, ‘கேர்ள்ஸ் ட்ரிப்’, ‘ரெசிடன்ட் எவில்: த பைனல் சாஃப்டர்’ என பல படங்களில் நடித்துள்ளார். இவர் மீது, தெற்கு புளோரிடாவில் உள்ள ப்ரோவர்டு என்ற பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் மதுபோதையில் முறையற்ற வகையில் நடந்துகொண்டதாகவும் ஊழியர்களைத் தாக்கியதாகவும் கடந்த திங்கள்கிழமை புகார் எழுந்தது.
இதையடுத்து போலீஸார் அவரை கைது செய்து...
‘தமிழன்’ மஜீத் இயக்கத்தில் விமல், யோகிபாபு நடித்துள்ள முழு நீள காமெடி படம், ‘கரம் மசாலா’. சாம்பிகா டயானா நாயகியாக நடித்துள்ளார். எம்.எஸ். பாஸ்கர், ரவிமரியா, மொட்டை ராஜேந்திரன், ஜான் விஜய், சாம்ஸ், நமோ நாராயண், ஞானசம்பந்தம் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன. இந்தப் படத்தின் முதல் தோற்றம் மற்றும் டைட்டில் வெளியிடப்பட்டுள்ளது.
“இந்த நவீன உலகத்தில் பல...
ஹிப் ஹாப் பாடகராக அறிமுகமாகி, இசை அமைப்பாளர், நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என வளர்ந்திருக்கும் ஆதி, சினிமாவில் 10 வருடங்களைக் கடந்திருக்கிறார். இப்போது உலக இசைச் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ள அவர், திரைத்துறைத் தாண்டி சமூகத்துக்கான சில விஷயங்களையும் தனது குழுவுடன் செய்துவருகிறார். அவருடன் உரையாடியதில் இருந்து…
“அதுக்குள்ள 10 வருஷமாச்சுங்கறது ஆச்சரியமாகத்தான் இருக்கு. 2015-ம் வருஷம் சினிமாவுல அறிமுகமானேன். அப்புறம் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர்னு சினிமாவுல ஒரு முழு...










