அர்ஜுன் தாஸ் - காளிதாஸ் ஜெயராம் நடித்த 'போர்' படத்தை தயாரித்த ரூக்ஸ் மீடியாவின் பிரபு ஆண்டனி- மது அலெக்சாண்டர் ஆகியோர் அடுத்து தயாரிக்கும் படத்தில் யோகி பாபு நாயகனாக நடித்துள்ளார். மேகா தாமஸ், ஜாஸிக், அஞ்சு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜெய் இயக்கியுள்ள இந்தப் படம், இன்றைய இளம் தலைமுறையினருக்கான ஃபேமிலி என்டர்டெயினராக உருவாகியுள் ளது. நரேஷ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு பிஜு சாம்...
நடிகர் ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'கூலி' படத்தில் நடித்துள்ளார். இதில் சத்யராஜ், நாகார்ஜுனா, உபேந்திரா, சவுபின் சாஹிர், ஸ்ருதிஹாசன் உள்பட பலர் நடித்துள்ளனர். ஆக.14-ம் தேதி இந்தப் படம் வெளியாக இருக்கிறது. இப்போது 'ஜெயிலர் 2' படத்தில், அவர் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கும் இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதையடுத்து அவர் நடிக்கும் படத்தை தெலுங்கு இயக்குநர் விவேக் ஆத்ரேயா இயக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இவர்...
ஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துள்ள படம், ‘ஏஸ்’. ருக்மணி வசந்த் நாயகியாக நடித்துள்ளார். யோகி பாபு, பி.எஸ்.அவினாஷ், திவ்யா பிள்ளை, பப்லு, ராஜ்குமார் என பலர் நடித்துள்ளனர். கரண் பகதூர் ராவத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். சாம் சி.எஸ். பின்னணி இசைஅமைத்துள்ளார். 7சிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படம் வரும் 23-ம்தேதி வெளியாகிறது.
இதன் செய்தியாளர்கள் சந்திப்பில் விஜய்...
எம்.ஜி.ஆர் நடித்த மன்னர் கதையை கொண்ட படங்களில் ஒன்று, ‘அரச கட்டளை’. எம்.ஜி.ஆர் பிக்சர்ஸின் கதை இலாகா உருவாக்கிய இந்தப் படத்துக்கு வசனம் எழுதியவர் சொர்ணம். எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்கரபாணி இயக்கி, கவுரவ வேடத்தில் நடித்தார். சத்யராஜா பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படத்தில் எம்.ஜி.ஆருடன் சரோஜாதேவி,ஜெயலலிதா, எம்.என்.நம்பியார், நாகேஷ், ஆர்.எஸ்.மனோகர், சி.டி.ராஜகாந்தம், ஃபிரண்ட் ராமசாமி, அசோகன், மாதவி, சந்திரகாந்தா, சகுந்தலா, குண்டுமணி என பலர் நடித்தனர். பி.எஸ்.வீரப்பாவுக்கும் கே.ஆர்.ராமசாமிக்கும்...
‘ரெட்ரோ’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.234 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. 2டி நிறுவனம் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இணைந்து தயாரித்த படம் ‘ரெட்ரோ’. சக்தி பிலிம் பேக்டரி வெளியிட்ட இப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, நாசர், ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.
பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான ‘ரெட்ரோ’ திரைப்படம் விமர்சன ரீதியாக பெரிதாக எடுபடவில்லை என்றாலும், வசூல் ரீதியாக...
கிஷ்சா 47 (சந்தானம்) என்ற பிரபலமான யூடியூப் சினிமா விமர்சகர், ‘ஹிட்ச்ஹாக் இருதயராஜ்’ என்ற ஹாரர் படத்தின் சிறப்புக் காட்சியைப் பார்க்க அழைக்கப்படுகிறார். இதற்காக, கிஷ்சா, அவரது காதலி ஹர்சினி, அப்பா, அம்மா, தங்கை ஆகியோர் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் திரையரங்குக்கு குடும்பமாகச் செல்கின்றனர்.
படம் பார்க்கத் தொடங்கிய பின்னர்தான், அந்த திரையரங்கமும் அதில் ஓடும் திரைப்படமும் தங்களைப் போன்றவர்களுக்காக வைக்கப்பட்ட கொலைகார ‘டிராப்’ என்பதை உணர்கிறார்கள். விமர்சனம் என்ற...
மறைந்த விஜயகாந்தின் மகன், சண்முக பாண்டியன் ஹீரோவாக நடித்துள்ள படம், ‘படைத் தலைவன்’. இதை அன்பு இயக்கி உள்ளார். இளையராஜா இசை அமைத்துள்ளார். விஜே கம்பைன்ஸ், தாஸ் பிக்சர்ஸுடன் இணைந்து வழங்கும் இந்தப் படத்தை ஜகநாதன் பரமசிவம் தயாரித்துள்ளார். வரும் 23-ம் தேதி வெளியாகும் இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இதில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அவரின் மூத்த மகனும் தேமுதிக இளைஞர் அணி செயலாளருமான...
’டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தைப் பார்த்த நடிகர் ரஜினிகாந்த்ம் சசிகுமாரை போனில் அழைத்து வெகுவாக பாராட்டியுள்ளார்.
சசிகுமார், சிம்ரன் நடிப்பில் அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் வெளியான படம், ‘டூரிஸ்ட் ஃபேமிலி’. ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த நிலையில், இப்படத்தைப் பார்த்த நடிகர் ரஜினிகாந்த், சசிகுமாரை போனில் அழைத்து பாராட்டியுள்ளார்.
இது குறித்து சசிகுமார் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவு: “படம் சூப்பர்...
நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் அமேசான் போன்ற ஸ்ட்ரீமிங் தளங்கள் குறித்த தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார் இயக்குநர் அனுராக் காஷ்யப்.
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது, “நாங்கள் 'சேக்ரட் கேம்ஸ்' மற்றும் 'லஸ்ட் ஸ்டோரீஸ்' உள்ளிட்ட தொடர்களை நெட்ஃபிளிக்ஸுக்காக எடுக்கும்போது அதை ஒரு வாய்ப்பு என்று நினைத்தோம். அவர்களுடன் சேர்ந்து சில நல்ல படைப்புகளை உருவாக்கினோம். பின்னர், மெதுவாக, கோவிட் காலத்தில், எல்லாம் தலைகீழாக மாறியது.
இப்போது அவர்கள் செய்து கொண்டிருப்பது தொலைக்காட்சியை...
கமல்ஹாசன், சிம்பு நடித்துள்ள ‘தக் லைஃப்’ படத்தின் கதைக்களம் என்ன என்பது குறித்த விவரம் வெளியாகி இருக்கிறது.
மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தக் லைஃப்’. மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் ஜூன் 5-ம் தேதி...










