Google search engine
இயக்குநர் வெற்றிமாறன், அடுத்து சிம்பு நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். இந்தப் படமும் ‘வட சென்னை’யை மையப்படுத்திய கதைதான். இதனால், இது ‘வட சென்னை 2’ படம் என்றும் ‘வட சென்னை’ படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில் அதன் உரிமைக்காக நடிகர் தனுஷ் ரூ.20 கோடியை வெற்றிமாறனிடம் கேட்டதாகவும் செய்திகள் வெளியானது. இதுகுறித்து வெற்றிமாறன் அளித்துள்ள விளக்கத்தில் கூறியிருப்பதாவது: எனது அடுத்த படத்தில் சிலம்பரசன் நடிக்க இருக்கிறார். அதை கலைப்புலி...
‘வாடிவாசல்’ தள்ளிப்போனதற்கான காரணம் என்னவென்று தகவல்கள் வெளியாகியுள்ளன. வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருந்த படம் ‘வாடிவாசல்’. தாணு தயாரிக்கவிருந்த இப்படம் தாமதமானதால், வெங்கி அட்லுரி படத்துக்கு தேதிகள் ஒதுக்கிவிட்டார் சூர்யா. தற்போது ‘வாடிவாசல்’ எப்போது தொடங்கும் என்பதே தெரியாமல் இருக்கிறது. மேலும், வெற்றிமாறனோ சிம்பு நடிக்கும் படத்தினை தொடங்கிவிட்டார். இப்போது நடக்கும் விஷயங்களை வைத்து பார்த்தால், ‘வாடிவாசல்’ டிராப் செய்யப்பட்டதாகவே கருதப்படுகிறது. இது குறித்து விசாரித்தால், சூர்யா – வெற்றிமாறன் இருவரும்...
மோகன்லால் மற்றும் மம்மூட்டி இணையும் படத்துக்கு ‘பாட்ரியாட்’ என தலைப்பிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மகேஷ் நாராயணன் இயக்கி வரும் புதிய படத்தில் மோகன்லால், மம்மூட்டி, ஃபஹத் ஃபாசில், குஞ்சக்கோ போபன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இதுவே மலையாள திரையுலகில் பெரும் எதிர்பார்ப்புக்குரிய படமாக அமைந்திருக்கிறது. இதன் படப்பிடிப்பு கேரளா, இலங்கை உள்ளிட்ட பல பகுதிகளில் நடைபெற்றுள்ளது. இதனிடையே, தற்போது இலங்கை படப்பிடிப்புக்காக மோகன்லால் சென்றிருந்தார். அப்போது இலங்கை சுற்றுலாத்...
‘பிச்சைக்காரன் 3’ திரைப்படம் எப்போது தொடங்கும் என்பதற்கு விஜய் ஆண்டனி பதிலளித்துள்ளார். லியோ ஜான் பால் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மார்கன்’. இதனை தமிழகம் முழுக்க பேருந்தில் சுற்றுப் பயணம் செய்து விளம்பரப்படுத்தி வருகிறார் விஜய் ஆண்டனி. இப்படம் ஜூன் 27-ம் தேதி வெளியாகவுள்ளது. ‘மார்கன்’ விளம்பரப்படுத்தும் பேட்டியில், ‘பிச்சைக்காரன் 3’ குறித்து விஜய் ஆண்டனியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு “‘பிச்சைக்காரன் 3’ கதையினை இப்போது கூட...
இந்திய திரையுலகின் உச்சத்தை விஜய் தொட்டுவிட்டதாக கூறப்படுகிறது. ஏனென்றால், ‘ஜனநாயகன்’ படத்துக்காக அவருக்கு ரூ.250 கோடியை சம்பளமாக கொடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய் நடிப்பில் கடைசியாக உருவாகி வரும் படம் ‘ஜனநாயகன்’. கே.வி.என் நிறுவனம் தயாரித்து வரும் இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 9-ம் தேதி வெளியாகவுள்ளது. இதன் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு நாட்கள் மட்டுமே பாக்கி இருக்கிறது. இதன் உரிமைகளைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது. இதனிடையே,...
நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில், அதர்வா, நிமிஷா சஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம், ‘டிஎன்ஏ’. ஒலிம்பியா மூவிஸ் தயாரித்துள்ள இந்தப் படம் கடந்த 20-ம் தேதி வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. இதையடுத்து இதன் வெற்றிவிழா சென்னையில் நடந்தது. படக்குழுவினர் கலந்துகொண்டனர். நடிகை நிமிஷா சஜயன் பேசும்போது, “ஒரு திரைப்படம் வெளியாகும் போது, ஹிட் ஆகுமா, ஆகாதா? என்ற பதற்றம் இருந்து கொண்டிருக்கும். ஆனால் இந்தப் படத்துக்குக் கிடைத்த விமர்சனத்தால்...
பிரபலங்களின் சமூக வலைதளப் பக்கங்கள், அவ்வப்போது ஹேக் செய்யப்படுவது வாடிக்கையாக இருக்கிறது. இந்நிலையில் நடிகை ஸ்ருதிஹாசனின் எக்ஸ் தளப் பக்கத்தை மர்மநபர்கள் முடக்கியுள்ளனர். இதுகுறித்து இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தெரிவித்துள்ள ஸ்ருதிஹாசன், “என்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தை சிலர் முடக்கியுள்ளனர். அதில் தற்போது வரும் தகவல்களை நான் பதிவிடவில்லை. என் கணக்கை மீண்டும் பெறும் வரை, அந்த பக்கங்களில் இருந்து வரும் பதிவுகளுக்குப் பதிலளிக்க வேண்டாம்” எனக் கூறியுள்ளார். முன்னதாக அவர்...
மகாவிஷ்ணுவின் 10 அவதாரங்களை விளக்கும் வகையில், மகாவதார் சினிமாடிக் யுனிவர்ஸ் மூலம் 7 அனிமேஷன் படங்கள் உருவாகின்றன. ஹோம்பாளே பிலிம்ஸ் வழங்கும் இந்தப் படங்களை க்ளீம் புரொடக் ஷன்ஸ்தயாரிக்கிறது. இந்த யுனிவர்ஸின் முதல் படைப்பான 'மகாவதார் நரசிம்மா' ஜூலை 25ல் வெளியாகிறது. இதையடுத்து, மகாவதார் பரசுராம் (2027), மகாவதார் ரகுநந்தன் (2029), மகாவதார் துவாரகாதீஷ் (2031), மகாவதார் கோகுல நந்தா (2033), மகாவதார் கல்கி பார்ட் ஒன் (2035),...
தமிழில், திருப்பாச்சி, சச்சின், மன்மதன் அன்பு, சிங்கம், வீரம் உள்பட பல படங்களுக்கு இசை அமைத்துள்ள தேவிஸ்ரீ பிரசாத் , தெலுங்கிலும் முன்னணி இசை அமைப்பாளராக இருக்கிறார். அவர் இசை அமைப்பில் தொடர்ந்து வெளியான அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 2’, நாக சைதன்யாவின் ‘தண்டேல்’, தனுஷின் ‘குபேரா’ ஆகிய படங்கள் தெலுங்கில் வெற்றி பெற்றுள்ளன. ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ள நிலையில் தொடர்ந்து சில படங்களுக்கு இசை அமைத்து வருகிறார்...
தெலுங்கு நடிகர் விஷ்ணு மன்சு நடித்துள்ள புராண படம், ‘கண்ணப்பா’. இந்திப் பட இயக்குநர் முகேஷ் குமார் சிங் இயக்கியுள்ளார். இதில், சரத்குமார், பிரீத்திமுகுந்தன், மோகன்பாபு, மது,கருணாஸ், பிரம்மாஜி, பிரம்மானந்தம் உள்பட பலர் நடித்துள்ளனர். சிறப்புத் தோற்றத்தில் மோகன்லால், பிரபாஸ், காஜல் அகர்வால், அக் ஷய்குமார் எனபலர் நடித்துள்ளனர். பான்இந்தியா முறையில் உருவாகியுள்ள இந்தப் படம் நாளை வெளியாகிறது. இந்நிலையில் இந்தப் படத்தைப் பார்த்த தணிக்கை அதிகாரிகள், அதிகமான வன்முறை...