பிக் பாஸ் நிகழ்ச்சியினைத் தொடர்ந்து, படம் ஒன்றிலும் கவின் உடன் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் மாஸ்டர் சாண்டி.
திங்க் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் கென் ராய்சன் புதிய படமொன்றை இயக்கி வருகிறார். இதில் கவின், பிரியங்கா மோகன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். தற்போது கவின் உடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் மாஸ்டர் சாண்டி. இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படமாக இது அமைந்துள்ளது.
பிக் பாஸ்...
பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் திவ்யா கணேஷ்.
100 நாட்களைக் கடந்து ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியில் விக்கல்ஸ் விக்ரம், விஜே பார்வதி, கம்ருதீன், ஆரோரா சின்க்ளேர், வாட்டர்மெலன் திவாகர் உள்ளிட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். 30 நாட்களுக்குப் பிறகு வைல்டு கார்டு போட்டியாளர்களாக திவ்யா கணேஷ், அமித் பார்கவ், பிரஜின் சாண்ட்ரா ஆகிய நால்வரும் உள்ளே சென்றனர்.
வாரம் ஒரு போட்டியாளர் அல்லது இரண்டு பேர் வெளியேற்றப்பட்ட நிலையில்,...
தனது பேட்டி சர்ச்சையானது குறித்து கருத்து தெரிவித்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், “சில நேரங்களில் நோக்ங்கள் தவறாக புரிந்து கொள்ளப்படுகின்றன. யாரையும் காயப்படுத்த வேண்டும் என நான் விரும்பவில்லை. எனது நேர்மையை மக்கள் புரிந்து கொள்வார்கள் என நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ”பாலிவுட் சினிமா துறை மத வாதம் சார்புள்ளதாக மாறிவிட்டது. கடந்த 8 ஆண்டுகளில் அதிகார கட்டமைப்பில் ஏற்பட்ட மாற்றம்...
அமிதாப் பச்சன், ஜீனத் அமன் நடித்து 1978-ல் வெளியாகி வெற்றி பெற்ற இந்தி படம் ‘டான்’. இது தமிழில் ரஜினி நடிப்பில் பில்லா என்ற பெயரில் மறு ஆக்கம் செய்யப்பட்டது. அமிதாப் பச்சன் நடித்த ‘டான்’ படம் கடந்த 2006-ம் ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வெற்றி பெற்றது, இதை பர்ஹான் அக்தர் தயாரித்து இயக்கி இருந்தார்.
இப்படத்தின் அடுத்த பாகமாக டான் 3 உருவாக இருப்பதாகக்...
வி.ஜே.சித்து இயக்கி, நாயகனாக நடித்து வரும் ‘டயங்கரம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.
பிரபல யூடியூபரான வி.ஜே.சித்து இயக்கி வரும் படம் ‘டயங்கரம்’. சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் படப்பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இன்னும் இதன் இறுதிகட்டப் படப்பிடிப்பு மட்டும் பாக்கி இருக்கிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ‘டயங்கரம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.
‘டயங்கரம்’ படத்தினை வி.ஜே.சித்து இயக்கி, நாயகனாக நடித்து வருகிறார். இதில் நட்டி, காளி...
நலன் குமாரசாமி தனது அடுத்த படங்களின் திட்டம் என்ன என்பது குறித்து பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.
நீண்ட மாதங்கள் கழித்து நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ‘வா வாத்தியார்’ வெளியாகியுள்ளது. இப்படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளது. ஆனால், பொங்கல் விடுமுறை என்பதால் படம் நல்ல வசூல் செய்து வருகிறது. இதனிடையே தனது அடுத்த படங்களின் திட்டம் குறித்து பேசியிருக்கிறார் நலன் குமாரசாமி.
அப்பேட்டியில் நலன் குமாரசாமி, “அடுத்ததாக நாயகியை முன்னிலைப்படுத்தி ‘சாமுண்டீஸ்வரி’...
கென் கருணாஸ் இயக்கி நடித்துள்ள ‘யூத்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
பல்வேறு படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் கென் கருணாஸ். சில மாதங்களுக்கு முன்பு தானே இயக்கி, நாயகனாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பினைத் தொடங்கினார். இதன் படப்பிடிப்பு ஒரே கட்டமாக முடிக்கப்பட்டு, இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
தற்போது இப்படத்துக்கு ‘யூத்’ எனப் பெயரிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு திரையுலகினர் பலரும் கென் கருணாஸுக்கு வாழ்த்து...
‘மரகத நாணயம் 2’ படத்தின் அறிவிப்பை படக்குழு அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.
2017-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘மரகத நாணயம்’. இதன் 2-ம் பாகத்தின் பேச்சுவார்த்தை நீண்ட மாதங்களாக நடைபெற்று வந்தது. தற்போது அனைத்தும் முடிவாகி ‘மரகத நாணயம் 2’ அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் அறிமுக வீடியோவினை லாரன்ஸ் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.
அருள்நிதி நடித்துள்ள ‘அருள்வான்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
‘தேன்’ படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் கணேஷ் விநாயக். அடுத்ததாக புதிய படமொன்றை இயக்கி வந்தார். இதன் பணிகள் அனைத்தும் முடிந்து வெளியீட்டுக்கு தயாராகிவிட்டது. தற்போது இதன் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்கியிருக்கிறது படக்குழு.
‘அருள்வான்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் அருள்நிதி, ஆரவ், ரம்யா பாண்டியன், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதற்கு ஒளிப்பதிவாளராக சுகுமார்,...
வி.ஜே.பப்பு, அனுபமா, நாயகன், நாயகியாக நடித்துள்ள திரைப்படம், ‘மை டியர் டாலி’. ராஜவேலு உள்பட பல புதுமுகங்கள் நடித்துள்ள இப்படத்தை சிம்மமூர்த்தி சினிமாஸ் ஆர்.எம்.ஜெயராம சந்திரன் தயாரித்துள்ளார். பாசில் இசை அமைத்துள்ளார். பாலாஜி சேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படத்தை இயக்கியுள்ள ஏ.அரவிந்த் ராஜ் கூறும்போது, ” ஒரே அலுவலகத்தில் பணிபுரியும் நாயகனும் நாயகியும் சில காலகட்டங்களில் வெவ்வேறு இடங்களுக்கு மாறி செல்கின்றனர்.
கதாநாயகி மீது நாயகனுக்கு ‘கிரஷ்’ இருக்கிறது. நாயகனுக்குப் பெண்பார்க்கும்...
