கார்த்தி, 2 வேடங்களில் நடித்து வரவேற்பைப் பெற்ற படம், ‘சர்தார்’.
பி.எஸ்.மித்ரன் இயக்கிய இப்படத்தின் அடுத்த பாகம், ‘சர்தார் 2’ என்ற பெயரில் உருவாகியுள்ளது. இதில் மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு எப்போதோ முடிவடைந்துவிட்டது.
இந்நிலையில் இப்படம் செப்.10-ல் வெளியாவதாகப் படக்குழு அறிவித்துள்ளது. இப்படம் தெலுங்கிலும் வெளியாகிறது. செப்.11-ல் விஜய தேவரகொண்டா, ராஷ்மிகா நடித்துள்ள ‘ரணபாலி’ படம்...
“நம்மைப் பிடிக்காதவர்களுக்கு என்ன செய்தாலும் பிடிக்காது” – ‘தர்மன்’ பூஜையில் ரஜினிகாந்த் பேச்சு
admin - 0
நடிகர் ரஜினி காந்தின் 173-வது படத்தை கமல் ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. ஆர்.மகேந்திரன் இணை தயாரிப்பு செய்கிறார். இப்படத்தை முதலில் சுந்தர்.சி இயக்குவதாக இருந்தது. கதை பிரச்சினை காரணமாக அவர் விலகியதை அடுத்து, சிபி சக்கரவர்த்தி இயக்குவதாக அறிவிக்கப்பட்டது.
அவரும் விலகியதை அடுத்து ‘ஓ மை கடவுளே’, ‘டிராகன்’ படங்களை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இயக்குவதாகச் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இப்படத்துக்கு ‘தர்மன்’...
நினா சிமோனை உங்களுக்குத் தெரியுமா? அவர் ஒரு கிளாசிக்கல் பியானிஸ்ட், ஜாஸ், ப்ளூஸ் பாடகர் என்று தேடுபொறிகள் சொல்லும்.
அந்தக் கலைகளில் அசாத்திய திறமை கொண்ட அவர், அதையும் தாண்டி அறியப்பட வேண்டியவர். கருப்பினத்தைச் சேர்ந்தவர் என்பதாலேயே ஆரம்ப காலத்தில் அங்கீகரிக்க மறுத்தது அமெரிக்க சமூகம். ஃபிலடெல்பியா இசைப் பள்ளியில் முறையாக சேர்ந்து படிக்க இயலாமல், இரவுநேர மதுபான விடுதிகளில் சுயமாக இயற்றிப் பாடிய பாடல்களால் கவனம் ஈர்த்தார். ஒடுக்கப்பட்ட...
தமிழ் சினிமாவில் காலம் காலமாக தாயின் தியாகம் எப்போதும் மிக உன்னதமான ஒன்றாக, புனிதமானதாகவே காட்டப்பட்டு வந்துள்ளது. தாயும் ஒரு பெண் என்பதையும், அவருக்கென்று ஒரு வாழ்க்கை, உணர்வுகள் உண்டு என்பதை பதிவு செய்த படங்கள் வெகு சொற்பம். ‘சொல்லாமலே’, ‘பூ’, ‘பிச்சைக்காரன்’ போன்ற தனித்துவமான கதைக்களங்கள் மூலம் முத்திரை பதித்த சசி, தற்போது 'நூறு சாமி' மீண்டும் ஒரு தனித்துவமான கதைக்களத்துடன் வந்துள்ளார்.
கணவனை இழந்த செல்வி (சுவாசிகா),...
புதிதாக புழக்கத்தில் உள்ள 22 பிறமொழிச் சொற்களுக்கான தமிழ் வார்த்தைகளை தமிழ் வளர்ச்சிக் கழகம் வெளியிட்டுள்ளது.
இது குறித்து தமிழ் வளர்ச்சிக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதிதாக புழக்கத்துக்கு வரும் ஆங்கிலம் மற்றும் பிறமொழிச் சொற்களுக்கு இணையான தூய தமிழ்ச் சொற்களை உருவாக்கி பொது மக்களுக்கு வழங்குவதற்காக `சொல் புதிது' எனும் திட்டம் தொடங்கப்பட்டது. இதன் 14-வது கூட்டம் சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு தமிழ் வளர்ச்சிக் கழக தலைவர்...
இந்திரன்ஸ், மதுபாலா நடித்துள்ள திரைப்படம் ‘சின்ன சின்ன ஆசை’. வர்ஷா வாசுதேவ் இயக்கியுள்ள இப்படம் தமிழ், மலையாளத்தில் உருவாகியுள்ளது.
கடந்த வெள்ளிக் கிழமை வெளியான இப்படம் பற்றி நடிகை மதுபாலா அளித்த பேட்டியில், “நான் நடித்த ‘ரோஜா’ பட பாடல் வரியையே இப்படத்துக்கு தலைப்பாக வைத்துள்ளனர். 'சின்ன சின்ன ஆசை' என்ற தலைப்பு மீண்டும் அந்த இனிய நினைவுகளை உயிர்ப்பித்தது. அதே நேரம் இது தனித்துவமான கதையுடன் உருவான உணர்வுபூர்வமான...
அர்ஜுன் தாஸ், அன்னா பென் முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் படம் ‘கான் சிட்டி’. இதில் யோகிபாபு, வடிவுக்கரசி, குழந்தை நட்சத்திரம் அகிலன் உள்பட பலர் நடித்துள்ளனர். பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் எழுதி இயக்குகிறார். ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார்.
இதன் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் கலந்துகொண்டனர். நடிகை அன்னா பென் பேசும்போது, “இது எனது 2-வது தமிழ் திரைப்படம்....
கீர்த்தி சுரேஷ், இயக்குநர்-நடிகர் மிஷ்கின் இணைந்து நடிக்கும் ‘சத்தியவான் சாவித்திரி’ வரும் ஜூலை 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
புதுமுக இயக்குனர் பிரவீன் எஸ். விஜய் இயக்கியுள்ள இப்படத்தில், கீர்த்தி சுரேஷ் இளம் வக்கீல் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருக்கு சீனியர் வழக்கறிஞராக மிஷ்கின் நடித்துள்ளார். ஒரு முக்கிய வழக்கில் தவறான நபர்களுக்கு ஆதரவாக செயல்படும் தனது சீனியர் மிஷ்கினை, கீர்த்தி சுரேஷ் சட்ட ரீதியாக எப்படி எதிர்கொள்கிறார் என்பதை...
இயக்குநர் ஷங்கரின் மகன் அர்ஜித் ஷங்கர், கதாநாயகனாக அறிமுகமாகும் படத்துக்கு ‘லவ்வர் பாய்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குனர்கள் ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ், எச்.வினோத் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், பிக் பாஸ் ராஜு ஜெயமோகன்,அதிதி ஷங்கர் உள்ளிட்ட பலரும் இதில் கலந்துகொண்டனர்.
அமெரிக்காவில் சினிமா தயாரிப்பு குறித்து படித்துவிட்டு, டெல்லியில் உள்ள தேசிய நாடக பள்ளியில் நடிப்புப் பயிற்சி பெற்ற...
இந்திரன்ஸ், மதுபாலா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ’சின்ன சின்ன ஆசை’. தம்பி ராமையா, காளி வெங்கட் முக்கியமான வேடங்களில் நடித்துள்ளனர்.
கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிகளில் ஜூன் 19-ல் வெளியாகிறது. பாபுஜி புரொடக் ஷன்ஸ் சார்பில் அபிஜித் பாபுஜி தயாரித்துள்ள இப்படத்தை வர்ஷா வாசுதேவ் இயக்கியுள்ளார். தமிழில் ஏஜிஎஸ் சினிமாஸ் வெளியிடுகிறது.
“காசி நகரில் எதிர்பாராதவிதமாகச் சந்திக்கும் ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும்...










