“பொறுப்புணர்வு இல்லாமல் கேட்கப்படும் மன்னிப்பு என்பது மன்னிப்பே அல்ல. அதுவும், வழக்கமாக சொல்லப்படும் “தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது” என்ற சால்ஜாப்போடு கோரப்படும் மன்னிப்பு இன்னும் கொடுமையானது” என்று தன்னை விமர்சித்த யூடியூபருக்கு பதிலடி கொடுத்துள்ளார் நடிகர் கவுரி கிஷன்.
‘96’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர் மத்தியில் பிரபலமானவர் நடிகை கவுரி கிஷன். தற்போது, இவரது நடிப்பில் 'அதர்ஸ்' என்ற படம் திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது. இதையொட்டி பத்திரிகையாளர் சந்திப்பு...
வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பார்ட்டி’ திரைப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
2018ம் ஆண்டு அனைத்து பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாரான படம் ‘பார்ட்டி’. ஆனால் ஃபிஜி தீவில் இருந்து வரக்கூடிய சான்றிதழ்கள் கிடைக்க தாமதமானால் படம் இதுவரை வெளியாகவில்லை. தற்போது இப்பிரச்சினை முடிவடைந்து அடுத்த ஆண்டு பிப்ரவரியில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை தயாரிப்பாளர் சிவா மற்றும் இயக்குநர் வெங்கட்...
‘கருப்பு’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் ‘கருப்பு’. இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது தெரியாமல் இருந்தது. தற்போது 16 நாட்கள் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கப்பட்டுள்ளது. இதில் சூர்யா தவிர்த்து இதர நடிகர்களின் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.
த்ரிஷா, நட்டி, ஆர்.ஜே.பாலாஜி, ஸ்வாசிகா, அனகா மாயா ரவி, இந்திரன்ஸ் உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடித்துள்ளனர். ட்ரீம் வாரியர்...
‘டிசி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் நாயகனாக அறிமுகமாகும் ‘டிசி’. இதன் 2-ம் கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் டீஸருக்கு இணையத்தில் கலவையான விமர்சனங்கள் கிடைத்தது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சஞ்சனா கிருஷ்ண மூர்த்தி ஓப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை அடுத்தகட்ட படப்பிடிப்பில் படமாக்கவுள்ளனர்.
அருண் மாதேஸ்வரன் இயக்கி வரும் இப்படத்தில் நாயகனாக லோகேஷ் கனகராஜ்,...
கவின், ஆண்ட்ரியா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘மாஸ்க்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
கவின் நடித்துள்ள டார்க் காமெடி த்ரில்லர் படம், ‘மாஸ்க்’. அவர் ஜோடியாக ருஹானி சர்மா நடிக்கிறார். சார்லி, ரமேஷ் திலக், கல்லூரி வினோத், அர்ச்சனா சந்தோக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஆண்ட்ரியா இப்படத்தை தயாரித்து, படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். விகர்ணன் அசோக் படத்தை இயக்கி அறிமுகமாகிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் 21ஆம்...
இந்த சீசனின் மிக நியாயமற்ற ஒரு வெளியேற்றம் இந்த வாரம் நடந்தேறியுள்ளது. முதல் வாரத்தில் இருந்து எதுவுமே செய்யாமல் ‘மிக்சர்’ மட்டுமே சாப்பிட்டுக் கொண்டிருப்பவர்கள் உள்ளே இருக்க, டாஸ்க்குகளில் சிறப்பான பங்களிப்பை தொடர்ந்து கொடுத்து வந்த பிரவீன் இந்த வாரம் வெளியேற்றப்பட்டிருக்கிறார்.
வைல்டு கார்டு என்ட்ரிக்குப் பிறகு இந்த வாரம் கூடுதல் சுவாரஸ்யத்துடன் இருந்தது. அதற்கு காரணம் பழைய போட்டியாளர்களை ‘கெஸ்ட்’ ஆக வரவழைத்து நடத்தப்பட்ட ‘ஆஹோ ஓஹோ ஹோட்டல்...
நடிகை கவுரி கிஷனுக்கு ஆதரவாக கருத்துப் பதிவிட்ட இயக்குநர் பா.ரஞ்சித், “நிருபரின் செயலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்; அவை ஏற்றுக்கொள்ள முடியாதவை” என்று குறிப்பிட்டுள்ளார்.
‘96’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர் மத்தியில் பிரபலமானவர் நடிகை கவுரி கிஷன். தற்போது, இவரது நடிப்பில் 'அதர்ஸ்' என்ற படம் திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது. இதையொட்டி நேற்று பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. அப்போது தனது உடல் எடை குறித்து அநாகரிகமாக கேள்வி எழுப்பிய யூடியூபர்...
திரை நட்சத்திரங்களான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனாவின் திருமணம் அடுத்த ஆண்டு உதய்பூரில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
‘கீதா கோவிந்தம்’ படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவும், நடிகை ராஷ்மிகாவும் முதல் முறையாக இணைந்து நடித்தனர். இந்த படம் ஹிட் வரிசையில் இணைந்தது. இதன் பின்னர் டியர் காம்ரேட் படத்தில் இருவரும் இணைந்து நடித்தனர். இவர்கள் இருவரும் காதலித்து வந்ததாக தகவல் வெளியானது. அவ்வப்போது வெளிநாடுகளுக்கு இவர்கள்...
கமலின் ‘237’ படம் படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. சண்டைப்பயிற்சியாளர்களாக கவனம் பெற்ற அன்பறிவ் சகோதரர்கள் இந்தப் படம் மூலம் இயக்குநர்களாக அறிமுகமாகின்றனர். ‘கேஜிஎஃப்’ படத்துக்காக இவர்களுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. முன்னதாக ‘மெட்ராஸ்’, ‘கபாலி’ ‘விக்ரம்’, ‘லியோ’, படங்களில் ஸ்டண்ட் மாஸ்டர்களாக பணியாற்றிவர்கள் அடுத்து கமலின்‘இந்தியன் 2’, ‘கல்கி’, ‘தக் லைஃப்’ படங்களில் பணியாற்றி உள்ளனர்.
நீண்டநாட்களாக இப்படம் குறித்த அப்டேட் எதுவும் வெளியாகம் இருந்த...
உடல் குறித்து நிருபர் ஒருவர் கேட்ட அநாகரிகமான கேள்விக்கு நடிகை கவுரி கிஷன் காட்டமாக பதிலளித்துள்ளார்.
புதுமுகம் ஆதித்ய மாதவன், கவுரி கிஷன், அஞ்சு குரியன் பிரதான வேடத்தில் நடித்திருக்கும் படம் 'அதர்ஸ்'. மெடிக்கல் கிரைம் த்ரில்லராக உருவாகியிருக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் அபின் ஹரிஹரன் எழுதி இயக்கியுள்ளார்.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று (நவ.06) சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர். இப்படம் தொடர்பான...










