இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மனைவி சாய்ரா பானு கடந்த 19-ம் தேதி அவரை பிரிவதாகக் கூறி விவாகரத்து முடிவை அறிவித்திருந்தார். தனது எக்ஸ் தளப் பக்கத்தில் இதை ஏ.ஆர்.ரஹ்மானும் உறுதி செய்திருந்தார். இதற்கிடையே இருவருக்கும் இடையே சமரசம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக, சாய்ரா பானுவின் வழக்கறிஞர் வந்தனா ஷா, யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.
அவர் கூறும்போது, “ இருவரின் விவாகரத்துக்குப் பிறகு பிள்ளைகள், யாருடன் இருப்பார்கள் என்பதை...
பிரபல கானா பாடகி இசைவாணி, இயக்குநர் பா.ரஞ்சித் கடந்த 2019-ம் ஆண்டு நடத்திய நிகழ்ச்சியில், ‘ஐயம் ஸாரி ஐயப்பா’' என்ற பாடலைப் பாடினார். இந்தப் பாடலை பல்வேறு நிகழ்ச்சிகளில் பாடி வந்தார். இந்தப் பாடல் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி இருக்கிறது. இதற்கு பல தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன. பாடகி இசைவாணி, இயக்குநர் பா.ரஞ்சித் ஆகியோரை கைது செய்யக்கோரி புகாரும் அளிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், இசைவாணிக்கு எதிர்ப்புத் தெரிவித்து...
“மணிரத்னம் இயக்கத்தில் நடிப்பது பெருமை” – ‘தக் லைஃப்’ குறித்து, ‘மிர்சாபூர்’ நடிகர் நெகிழ்ச்சி
admin - 0
மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் ‘தக் லைஃப்’ படத்தில் ‘மிர்சாபூர்’ இணையத் தொடர் மூலம் கவனம் பெற்ற நடிகர் அலி ஃபசல் நடிக்கிறார். அவர் தனது படப்பிடிப்பைமுடித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனியார் நிறுனவத்துக்கு அளித்த பேட்டியில், “மணிரத்னத்தின் இயக்கத்தில் பணியாற்றுவது பெருமையான விஷயம். கமல்ஹாசன் மற்றும் பிற நடிகர்களுடன் இணைந்து நடித்தது என் வாழ்வில் மறக்க முடியாத அனுபவம். ஒரு நடிகராக கடந்த 2 மாதங்களில் நிறைய மாற்றங்களை...
’சொல்லிட்டாளே அவ காதல’, ‘ஜிங்குணமணி’, ‘விளையாடு மங்காத்தா’ உள்ளிட்டப் பல ஹிட் பாடல்களைக் கொடுத்தவர் பாடகர் ரஞ்சித். தன்னுடைய சொந்த இசை பேண்ட், ‘பள்ளிக்கூடம்’ கிளாஸ், இசைக் கச்சேரி என பிஸியாக இருந்தவர் அளித்த பேட்டியில் இருந்து…
“ஒரு தனியார் தொலைக்காட்சியில் பிரபலமாக இருந்த டேலண்ட் ஷோ ஒன்றில் எனக்கு நல்ல அறிமுகம் கிடைத்தது. பின்பு, இசையமைப்பாளர் மணி சர்மாவிடம் கோரஸ் பாடினபோதுதான் அவர் என் குரல் தனித்துவமாக இருந்ததை...
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. டீசர் எப்படி? - நீண்ட காத்திருப்புக்குப் பிறகு வெளியாகியுள்ள இந்த டீசரின் தொடக்கத்தில் அர்ஜுனின் கேங் கார் ஒன்றின் டிக்கியில் இருந்து ஒரு மனிதரை வெளியே இழுத்து போடுகிறார்கள். இதனைத் தொடர்ந்து ஹீரோ அஜித்தின் இன்ட்ரோ தொடங்கி, த்ரிஷா என கதாபாத்திரங்கள் தொடர்பான ஷாட் என அடுத்தடுத்து காட்சிகள் விரிகின்றன.
அஜித் ரசிகர்களுக்கு விருந்தளிக்கக் கூடிய கார்...
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவுக்கு விவாகரத்து வழங்கி சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், இயக்குநர் கஸ்தூரிராஜா இளைய மகன் நடிகர் தனுஷுக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2004-ம் ஆண்டு நவம்பர் 18-ம் தேதி சென்னையில் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். சுமார் 18 ஆண்டுகள் திருமண வாழ்வுக்குப் பின்னர், கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த சில ஆண்டுகளாக இருவரும்...
அஜித்குமார் நடிக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பு பல்கேரியாவில் நடந்து வந்தது. அங்கு படப்பிடிப்பு முடிந்ததும் கார் ரேஸ் பயிற்சிக்காக தனது குழுவுடன் ஸ்பெயின் நாட்டுக்கு அவர் செல்வார் என்று கூறப்பட்டது. அதன்படி அவர் இப்போது அங்கு சென்றுள்ளார். அங்குள்ள பார்சிலோனா எஃப் 1 கார் ரேஸ் தளத்தில், தனது பெயர் கொண்ட காருடன் அஜித்குமார் நிற்கும் புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வைரலாகியுள்ளன.
அடுத்த ஆண்டு துபாயில்...
ரியோ ராஜ், கோபிகா ரமேஷ், அருணாசலேஸ்வரன், ரெஞ்சி பணிக்கர், துளசி, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம், 'ஸ்வீட் ஹார்ட்'. அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ்.சுகுமார் இயக்கியுள்ளார். பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ரொமான்டிக் காமெடி படமான இதைத் தனது ஒய்.எஸ்.ஆர். பிலிம்ஸ் சார்பில் யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ளார்.
படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில்...
புயல் எச்சரிக்கை காரணமாக சித்தார்த் நடித்துள்ள ‘மிஸ் யூ’ படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்படுவதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக படத்தின் தயாரிப்பாளர் சாமுவேல் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: அரசு விடுத்துள்ள புயல் எச்சரிக்கை காரணமாகவும், மக்களின் பாதுகாப்பை முன்னுரிமையாகக் கொண்டும், ‘மிஸ் யூ’ திரைப்பட வெளியீட்டை தற்காலிகமாக ஒத்திவைக்க முடிவு செய்துள்ளோம். புதிய வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும். உங்களின் புரிதலும் ஆதரவும் எப்போதும் போல் நிலைத்திருக்க வேண்டுகிறோம்.
இந்த...
நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவுக்கும் ஷோபிதா துலிபாலாவுக்கும் அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் நாகார்ஜுனா - அமலா தம்பதியின் மகன் நடிகர் அகில் அக்கினேனிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
அவர் காதலித்து வந்த மும்பையை சேர்ந்த ஜைனப் ரவ்ஜீ-யுடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக நாகார்ஜுனா தெரிவித்துள்ளார். “அகிலின் நிச்சயதார்த்தத்தை அறிவிப்பதிலும் ஜைனபை எங்கள் குடும்பத்துக்கு வரவேற்பதிலும் மகிழ்ச்சி அடைகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.









