Google search engine
சல்மான் கானுடன் ரஜினி அல்லது கமல் இருவரில் ஒருவரை நடிக்க வைத்து விட வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறார் இயக்குநர் அட்லீ. அட்லீ இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கவுள்ள படத்தின் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதனை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது. இப்படம் குறித்து பல்வேறு தகவல்கள் உலா வருகின்றன. தற்போது இப்படத்தின் கதையினை ‘மகதீரா’ பாணியில் உருவாக்கி இருக்கிறார் அட்லீ என தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நிகழ்காலமும், அரசர் காலமும்...
‘புஷ்பா 2’ தயாரிப்பாளரை மேடையிலே கேள்வி எழுப்பி தேவி ஸ்ரீ பிரசாத் பேசிய பேச்சு சர்ச்சையாகி இருக்கிறது. ’புஷ்பா 2’ படத்தின் பின்னணி இசைப் பொறுப்பில் இருந்து தேவி ஸ்ரீ பிரசாத் நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக தமன், சாம் சி.எஸ், அஜ்னிஷ் லோக்நாத் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இது தகவலாக வெளியானாலும், என்ன பிரச்சினை என்பது தெரியாமல் இருந்தது. இது குறித்து படக்குழுவினரும் அமைதி காத்து வந்தார்கள். இதனிடையே, ‘புஷ்பா 2’...
நாகேஸ்வர ராவின் வாழ்க்கையை படமாக எடுப்பது கடினம் என்று நடிகர் நாகார்ஜுனா தெரிவித்துள்ளார். கோவாவில் 55-வது சர்வதே திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. இதில் இந்திய திரையுலகை சார்ந்த பல்வேறு பிரபலங்கள் பங்கேற்று வருகிறார்கள். இதில் சிறப்பு அழைப்பாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார் நாகார்ஜுனா. அவரிடம் அவரது அப்பா நாகேஸ்வர ராவின் வாழ்க்கையை படமாக உருவாக்குவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு நாகார்ஜுனா, “நாகேஸ்வர ராவின் வாழ்க்கையை ஆவணப்படமாக எடுப்பதுதான் சிறந்தது...
வங்கி ஊழியரான சூர்யா (சத்யதேவ்), தன்னுடன் பணியாற்றும் சுவாதியை (பிரியா பவானி சங்கர்) காதலிக்கிறார். சுவாதி, தனது ‘டைப்பிங்’ தவறால் பணச்சிக்கலில் மாட்டிக்கொள்ள, வேறொரு கணக்கிலிருந்து பணத்தை மாற்றி அவர் தப்பிக்க உதவுகிறார் சூர்யா. இந்த உதவி, அவரை வேறொரு பிரச்சினையில் இழுத்துவிடுகிறது. பிரபல தொழிலதிபரான ஆதிக்கு (டாலி தனஞ்செயா), நான்கு நாட்களுக்குள் ரூ.5 கோடி கொடுக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்படுகிறது சூர்யாவுக்கு. அது என்ன விவகாரம்,...
இந்தியாவின் மிகவும் பிரபலமான நடிகர்கள் பட்டியலில் நடிகர் பிரபாஸ் முதலிடத்தைப் பிடித்துள்ளார். ஆர்மேக்ஸ் மீடியா என்ற தனியார் நிறுவனம் மிகவும் பிரபலமான நடிகர், நடிகைகளைப் பற்றி அவ்வப்போது ஆய்வு செய்து வெளியிட்டு வருகிறது. சமீபத்தில் வெளியிட்ட ஆய்வின் படி, ஷாருக் கான், சல்மான் கான் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்களைப் பின்னுக்குத் தள்ளி நடிகர் பிரபாஸ், முதலிடத்தைப் பிடித்துள்ளார். அவர் நடித்து சமீபத்தில் வெளியான ‘கல்கி 2898 ஏடி’ படம் வெற்றி...
நடிகர் தம்பி ராமையா கதை, வசனம், பாடல்கள் எழுதி இசை அமைத்து ஹீரோவாக நடித்துள்ள படம், ராஜாகிளி. அவரது மகன் உமாபதி ராமையா திரைக் கதை அமைத்து இயக்கி இருக்கிறார். 'மிக மிக அவசரம்’, ’மாநாடு’ படங்களின் வெற்றியை தொடர்ந்து தனது வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். ஸ்வேதா, சுபா, பிரவீன், முபாஸிர், இயக்குநர் மூர்த்தி உட்பட பலர் இதில் நடித்துள்ளனர். டிச.13-ம் தேதி...
பரத், சுஹைல், ராஜாஜி, அபிராமி, அஞ்சலி நாயர், பவித்ரா லட்சுமி உட்பட பலர் நடித்துள்ள படம், 'ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்'. பிரசாத் முருகன் இயக்கியுள்ளார். ஜோஸ் ப்ராங்க்ளின் இசை அமைத்துள்ள இந்தப் படத்துக்கு காளிதாஸ் மற்றும் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். ஃப்ரைடே பிலிம் பேக்டரி சார்பில் கேப்டன் எம்.பி.ஆனந்த், ட்ரீம் ஹவுஸ் ஹாரூன் மற்றும் பிஜிஎஸ் புரொடக்ஷன்ஸ் பிஜிஎஸ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். ஹைப்பர் லிங்க்...
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனது 44-வது படத்தில் நடித்துள்ள சூர்யா, அடுத்து நடிகர் ஆர்ஜே பாலாஜி இயக்கும் படத்தில் நடிக்கிறார். இதில் அவர் ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த 17-ம் தேதி பூஜையுடன் தொடங்குவதாக இருந்தது. த்ரிஷாவின் கால்ஷீட் பிரச்சினை காரணமாக தொடங்கவில்லை. இந்நிலையில் இந்தப் படத்தின் பூஜை வரும் 27-ம் தேதி கோவையில் நடக்கிறது. 28-ம் தேதி முதல் அங்கு படப்பிடிப்பு தொடங்குகிறது.
தூத்துக்குடி அருகே உள்ள உப்பள கிராமம் ஒன்றைச் சேர்ந்தவர் லைன்மேன் சுப்பையா (சார்லி). அவர் மகன் செந்தில் (ஜெகன் பாலாஜி). எலக்ட்ரானிக் என்ஜினீயரிங் முடித்துள்ள அவர், சூரிய ஒளி மறைந்ததும் தெரு விளக்குத் தானாக எரிவது போலவும் ஒளி வந்ததும் அணைவது போலவும் ஒரு புராஜெக்டை உருவாக்குகிறார். இதை அரசு அங்கீகரித்தால் மின்சாரத்தை மிச்சப்படுத்தலாம் என்பது அவரது எண்ணம். அதன் அனுமதிக்காக ஆட்சியரைச் சந்திக்கவும் முதல்வரைச் சந்திக்கவும் போராடுகிறார்....
இரணியல் அருகில் நுள்ளிவிளை பகுதி தண்டவாளத்தில் நேற்று(நவம்பர் 21) மாலை சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் அடிபட்ட நிலையில் இறந்து கிடந்தார். நாகர்கோவில் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். இறந்து கிடந்தவரின் பைக் உள்ளிட்டவை ரயில்வே மேம்பாலம் ரோட்டோரம் நிறுத்தப்பட்டு இருந்தது. இறந்தவர் யார் என தெரியவில்லை. தண்டவாளத்தில் இறந்து கிடந்தவர் லுங்கியும், அரைக்கைச் சட்டையும் அணிந்த நிலையில்...