விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கியுள்ள படம், ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்). பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், அஜ்மல் அமீர், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, யோகி பாபு , வைபவ் உட்பட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். ஏஜிஎஸ் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ்.சுரேஷ் தயாரித்துள்ளனர்.
செப்.5-ம் தேதி வெளியாக இருக்கும் இந்தப்...
தமிழில் 1930-40 களில் வெற்றிகரமான இயக்குநராக இருந்தவர்களில் ஒருவர் பி.என்.ராவ். நடனத்தை மையமாக வைத்து இவர் இயக்கிய படம், ‘நாட்டிய ராணி’. வைஜயந்தி மாலாவின் தாய் வசுந்தரா தேவி நாயகியாக நடித்தார்.
மைசூரில் பிரபலமான கர்னாடக இசைக் கலைஞராக இருந்த பி.எஸ்.ராஜா அய்யங்கார் நாயகன். பி.எஸ்.சரோஜா, ஜெயம்மா, டி.எஸ்.பாலையா, ‘பம்பாய்’ சார்லி, நவநீதம் என பலர் நடித்தனர். இலங்கை நடிகை தவமணி தேவி சிறிய வேடத்தில் நடித்தார். பாபநாசம் சிவன்...
நானி, நாயகனாக நடித்துள்ள படம், ‘சூர்யா'ஸ் சாட்டர்டே'. விவேக் ஆத்ரேயா இயக்கியுள்ள இதில் எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா மோகன், அபிராமி, அதிதி பாலன் உட்பட பலர் நடித்துள்ளனர். டிவிவி என்டர்டெய்ன்மென்ட் சார்பில் டிவிவி தனய்யா, கல்யாண் தாசரி தயாரித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் வரும் 29-ம் தேதி வெளியாகும் இதன் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது.
அதில், எஸ்.ஜே.சூர்யா கூறியதாவது: இதுவரை பல ஆக்ஷன் படங்கள் வெளியாகி...
சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு, ‘சூர்யா 44’ படத்தின் புதிய கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
சூர்யாவின் 44-வது படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வருகிறார். இந்தப் படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கிறது. இதில் கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், பூஜா ஹெக்டே, ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு அந்தமானில் நடைபெற்று வருகிறது.இப்படத்தின் அறிமுக வீடியோ ஒன்றை முதல் ஷாட் வீடியோ என்ற பெயரில் படக்குழு சில...
வேல.ராமமூர்த்தி, மறைந்த நடிகர் மாரிமுத்து, தீபா ஷங்கர், சுரேஷ் நந்தா, நந்தனா, ரமா, ஜெரால்ட் மில்டன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘வீராயி மக்கள்'. எம். சீனிவாசன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு தீபன் சக்கரவர்த்தி இசையமைத்துள்ளார். ஏ வைட் ஸ்கிரீன் பிலிம்ஸ் சார்பில் என்.சுரேஷ் நந்தா தயாரித்துள்ளார்.
படத்தை இயக்கியுள்ள நாகராஜ் கருப்பையா கூறும்போது, “இது கூட்டுக் குடும்ப வாழ்க்கையின் முக்கியத்துவத்தை, சந்தோஷத்தை மண் மனத்தோடும் சொல்லும் படம்....
வெங்கட் பிரபு இயக்கியுள்ள ‘தி கோட்’ படத்துக்குப் பிறகு விஜய் நடிக்கும் படத்தை ஹெச். வினோத் இயக்குகிறார். விஜய்யின் 69-வது படம் இது. இந்தப் படத்தின் கதையில் முதலில் கமல்ஹாசன் நடிக்க இருந்ததாகவும் அவரின் 233-வது படமாக இது உருவாக இருந்ததாகவும் சில காரணங்களால் அது தள்ளிப் போனதால் விஜய் நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்தப் படத்தில் கமல்ஹாசன் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. கமல்ஹாசன், விஜய்...
திரைப்பட இயக்குநராக முயலும் குருவின் (முருகா அசோக்) கனவில் பழமையான புத்தகமும் சீறும் பாம்பும் வருகின்றன. கனவுக்குப் பலன் கேட்க சந்நியாசியிடம் செல்கிறார். அவர், தன் கனவில் பார்த்த புத்தகத்தைக் கொடுத்து, அதிலிருக்கும் கதையைப் படமாக்கச் சொல்கிறார். தயாரிப்பாளரையும் அடையாளம் காட்டுகிறார். அதை நம்பியும் நம்பாமலும் தனது குழுவுடன் காந்தாரா மலைக்குச் சென்று ஹாரர் படம் இயக்க முயல்கிறார். அந்த முயற்சி என்னவானது என்பது கதை.
தற்காலத்தில் வாழும் கதாபாத்திரங்கள்,...
கன்னட நடிகையான சைத்ரா ஜே.ஆச்சார், டோபி, சப்த சாகரதாச்சே எல்லோ - சைட் பி, பிளிங் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர், தமிழில் ராஜு முருகன் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் படம், ‘சித்தார்த் 40’ படங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்து வரும் அவர் கூறும்போது, “இரண்டு தமிழ்ப் படங்களில் ஒப்பந்தமாகி இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. டோபி, சப்த சாகரதாச்சே எல்லோ - சைட் பி...
கார்த்தி நடித்த ‘சர்தார்’ படம் கடந்த 2022-ம் ஆண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்றது. பி.எஸ்.மித்ரன் இயக்கிய இந்தப் படத்தில் ராஷி கன்னா, ரஜிஷா விஜயன், லைலா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. இதன் இரண்டாம் பாகம் உருவாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி சமீபத்தில் ‘சர்தார் 2’ படத்தின் அறிவிப்பை படக்குழு வெளியிட்டிருந்தது. யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்கிறார். ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார்....
நடிகை சமந்தா, நாக சைதன்யாவிடம் இருந்து 2021-ம் ஆண்டு விவாகரத்து பெற்றார். பின்னர் மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்ட அவர், இப்போது அதிலிருந்து மீண்டு வந்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், ஆன்மிகம் தனக்குப் பலமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “வாழ்க்கையில் சில விஷயங்களை மாற்ற விரும்புகிறோம். நம்பிக்கை தான் உங்களை முன்னோக்கி கொண்டு செல்கிறது. கடந்த 3 வருடங்களில் சில விஷயங்கள் நடந்திருக்கக்...










