Google search engine
சென்னை: பிரபல நடிகர் டெல்லி கணேஷ் (80), வயது முதிர்வு காரணமாக சனிக்கிழமை இரவு காலமானார். அவர் உடலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகினர், பொதுமக்கள் என பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர். பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், நடிகர்கள் ரஜினி, கமல் உட்பட பலர் இரங்கல் தெரிவித்து இருந்தனர். அவரது இறுதிச் சடங்கு திங்கள்கிழமை நடந்தது. அவரது மகன் மகா மற்றும்...
சீனு ராமசாமி இயக்கத்தில் ஏகன், யோகி பாபு, பிரிகிடா உட்பட பலர் நடித்தப் படம் ‘கோழிப்பண்ணை செல்லதுரை’. டி.அருளானந்து தயாரித்த இந்தப் படம், செப்.20-ம் தேதி வெளியானது. இதையடுத்து கிராமத்துப் பின்னணியில், த்ரில்லர் கதையை சீனு ராமசாமி இயக்க இருக்கிறார். இதுபற்றி அவர் கூறும்போது, “கோழிப்பண்ணை செல்லதுரை படத்துக்குச் சரியான காட்சிகளும் திரையரங்குகளும் கிடைக்காததால் பெரும்பான்மையான மக்களுக்குச் சென்று சேரவில்லை. படம் வெளியான நாளில் 8 படங்கள் வெளியானதால், பல...
சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உட்பட பலர் நடித்து அக்.31-ம் தேதி வெளியான படம், ‘அமரன்’. ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய இந்தப் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், ஆர்.மகேந்திரன் இணைந்து தயாரித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ள இந்தப் படம் மறைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவானது. இந்தப் படம் வெளியான முதல் நாளில் இருந்தே வசூல் குவித்து வருகிறது. தமிழ் தவிர, தெலுங்கு,...
ஆர்யன் ஷாம், ஆதியா பிரசாத், இமான் அண்ணாச்சி, ராஜ்குமார் உட்பட பலர் நடித்துள்ள படம் ‘அந்த நாள்’. விவி இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு சதீஷ் கதிர்வேல் ஒளிப்பதிவு செய்துள்ளார். கிரீன் மேஜிக் என்டர்டெயின்மென்ட் சார்பில் ரகுநந்தன் தயாரித்துள்ளார். படம் பற்றி ஹீரோ ஆர்யன் ஷாம் கூறும்போது, “இது பில்லி சூனியப் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ள ஹாரர் த்ரில்லர் படம். டெக்னிக்கலாக சிறப்பாக வந்திருக்கிறது. பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு படத்தை அனுப்பினோம்....
‘ஓ மை கடவுளே’ படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து, அடுத்து இயக்கும் படம், ‘டிராகன்’. ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில் கல்பாத்தி அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ், கல்பாத்தி சுரேஷ் தயாரிக்கின்றனர். கிரியேட்டிவ் தயாரிப்பாளராக அர்ச்சனா கல்பாத்தி இருக்கிறார். இதில் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்து வருகிறார். கதாநாயகிகளாக அனுபமா பரமேஸ்வரன் மற்றும் கயாடு லோஹர் நடிக்கின்றனர். தற்போது இந்த திரைப்படத்தில் 3 இயக்குநர்கள் இணைந்துள்ளனர். ‘மயில்வாகனன்’ என்ற கேரக்டரில் மிஷ்கின், ‘வாலே...
பிரபல நடிகர் டெல்லி கணேஷ் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 80. குணச்சித்திரம், வில்லன், நகைச்சுவை என பல்வேறு வேடங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் டெல்லி கணேஷ். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என சுமார் 400 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். மர்ம தேசம், பொறந்த வீடா புகுந்த வீடா, பல்லாங்குழி, செல்லமே உட்பட பல சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். சில பிறமொழி நடிகர்களுக்குப்...
நடிகர் சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’படத்துக்கு தடை கோரி தொடரப்பட்டுள்ள வழக்கில், ரிலையன்ஸ் நிறுவனத்துக்கான பாக்கித் தொகை நாளைக்குள் வழங்கப்படும் என ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டுடியோ கிரீன் படத்தயாரிப்பு நிறுவனத்தின் ஞானவேல்ராஜா, ‘டெடி -2’, ‘எக்ஸ் மீட்ஸ் ஒய்’, ‘தங்கலான்’ ஆகிய படங்களுக்கான தயாரிப்பு பணிகளுக்காக ரிலையன்ஸ் நிறுவனத்திடமிருந்து ரூ.99.22 கோடியை கடனாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதில் ரூ.45 கோடியை திருப்பி செலுத்திய ஞானவேல் ராஜா,...
ஜெயம் ரவி நடித்துள்ள ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு முடிவு செய்துள்ளது. ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகியுள்ள ‘பிரதர்’ படம் பெரும் தோல்வியை தழுவி இருக்கிறது. இந்தப் படத்தினை வாங்கிய விநியோகஸ்தர்கள் அனைவருக்குமே நஷ்டம் ஏற்படும் என்று வர்த்தக நிபுணர்கள் கருதுகிறார்கள். இதனிடையே, தனது அடுத்த பட வெளியீட்டுக்கு தயாராகிவிட்டார் ஜெயம் ரவி. கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள...
கே.எஸ்.ரவிகுமார் தயாரித்த ‘ஹிட் லிஸ்ட்’ படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர், விஜய் கனிஷ்கா. இவர் இயக்குநர் விக்ரமனின் மகன். சரத்குமார், கவுதம் வாசுதேவ் மேனன், ஸ்மிருதி வெங்கட் என பலர் நடித்த இந்தப் படத்தை சூர்ய கதிர், கே.கார்த்திகேயன் இயக்கினர். சஸ்பென்ஸ் த்ரில்லர் படமான இதில் விஜய் கனிஷ்காவின் நடிப்பு பேசப்பட்டது. இதையடுத்து அவர் சயின்ஸ் பிக்‌ஷன் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்தைத் தெலுங்கு இயக்குநர்...
தமிழ் சினிமாவின் ஆரம்ப காலகட்டங்களில் வெற்றிகரமான இயக்குநராக வலம் வந்தவர் டி.ஆர்.ரகுநாத். அசோக் குமார் (1941), ராஜமுக்தி (1948), மாயா மச்சீந்திரா (1939) உட்பட பல படங்களை இயக்கிய ராஜா சந்திரசேகரின் தம்பி இவர். வேதவதி அல்லது சீதா ஜனனம் (1941), தமிழறியும் பெருமாள் (1942), மகா மாயா (1944), பிரபாவதி (1944) உட்பட பல படங்களை இயக்கியுள்ளார், டி.ஆர்.ரகுநாத். அவர் இயக்கிய வெற்றிப் படங்களில் ஒன்று, ‘மாப்பிள்ளை’. டி.ஆர்.ராமச்சந்திரன் ஹீரோவாக...