Google search engine
திருமணம் செய்துகொள்ள போவதில்லை என்ற நிலைப்பாட்டை மீண்டும் உறுதி செய்திருக்கிறார் ஸ்ருதிஹாசன். சில மாதங்களுக்கு முன்பு அளித்த பேட்டியொன்றில், “திருமணம் செய்துகொள்ள விரும்பவில்லை” என்று தெரிவித்திருந்தார் ஸ்ருதிஹாசன். இப்போது அளித்துள்ள பேட்டியொன்றில், திருமணம் குறித்து அதே நிலைப்பாட்டில் இருக்கிறீர்களா என்று ஸ்ருதிஹாசனிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். அதற்கு ஸ்ருதிஹாசன், “திருமணம் செய்வதை விட ரிலேஷன்ஷிப் பிடிக்கும். வாழ்க்கையில் எதையும் கணிக்க முடியாது. ஆகையால் திருமணம் எனக்கு தெரியவில்லை. எனக்கு ரிலேஷன்ஷிப் பிடிக்கும்,...
“ரசிகர்களைக் கட்டுப்படுத்தும் பொறுப்பை பிரபலங்கள்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும். சட்டம் - ஒழுங்கில் சமரசம் செய்யக்கூடாது” என்று தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர்களிடம் மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள திரையரங்கம் ஒன்றில் கூட்ட நெரிசலில் பெண் ஒருவர் உயிரிழந்தது சம்பந்தமான வழக்கில் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக திரைப்படத் தயாரிப்பாளரும் அல்லு அர்ஜுனின் தந்தையுமான அல்லு...
‘மார்கோ’ படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. 5 நாட்களில் 50 கோடி வசூலித்துள்ளது. டிசம்பர் 20-ம் தேதி வெளியான மலையாள படம் ‘மார்கோ’. இப்படத்தின் ரத்தம் தெறிக்கும் சண்டைக் காட்சிகள் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. உலகளவில் 5 நாட்களில் 50 கோடி வசூல் செய்திருக்கிறது. இதனை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. ஹனிஃப் அடினி (Haneef Adeni) இயக்கத்தில் உன்னி முகுந்தன் நடித்துள்ள இப்படத்தினை ஷெரீப் முகமது தயாரித்துள்ளார். முழுக்க...
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கும் ‘சிக்கந்தர்’ படத்தின் டீசர் வெள்ளிக்கிழமை முற்பகல் வெளியாகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கும் படம், ‘சிக்கந்தர்’. பான் இந்தியா படமாக உருவாகும் இந்தப் படத்தை சஜித் நாடியத்வாலா தயாரிக்கிறார். ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கிறார். சத்யராஜ், பிரதீக் பப்பர் உட்பட பலர் நடிக்கின்றனர். ஆக்‌ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இந்தப் படத்தில் நடித்தபோது சல்மான் கானுக்கு விலா எலும்பில் காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்குப்...
அல்லு அர்ஜுன் நடித்துள்ள ‘புஷ்பா 2’ திரைப்படம் 21 நாட்களில் ரூ.1,705 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 2024-ம் ஆண்டில் அதிவேகமாக, அதாவது ரிலீஸ் ஆனதில் இருந்து மிகக் குறைந்த நாட்களில் அதிக வசூல் ஈட்டிய இந்திய திரைப்படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. உலக அளவில் ‘புஷ்பா 2’ திரைப்படம் 21 நாட்களில் ரூ.1,705 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அல்லு அர்ஜுனின் திரையுலக பயணத்தில்...
கிரிக்கெட்டுக்கு சச்சின் எப்படியோ சினிமாவுக்கு ஷங்கர் அப்படி. அவர் தான் நம்பர் ஒன் கமர்ஷியல் இயக்குநர் என்று ‘கேம் சேஞ்சர்’ படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் ராம்சரண் தெரிவித்தார். ஷங்கர் இயக்கும் ‘கேம் சேஞ்சர்’ படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி அமெரிக்காவின் டல்லாஸ் நகரத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் ராம்சரண் பேசியதாவது: “நாங்கள் இந்தியாவிலேயே இருப்பது போன்ற உணர்வு இது. ஒருவேளை அதனால்தான் டல்லாஸ் இப்போது டல்லாஸ்புரம் என்று அழைக்கப்படுகிறது என்று...
வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் நடித்த ‘விடுதலை பாகம் 2’ படத்தை கடுமையாக சாடிய இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத்துக்கு பதிலடி தரும் வகையில் பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான பி.சி.ஸ்ரீராம் கருத்துப் பதிந்துள்ளார். இந்து மக்கள் மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தனது எக்ஸ் பக்கத்தில் ‘விடுதலை பாகம் 2’ படம் குறித்து வெளியிட்ட பதிவில், “நக்சல் தீவிரவாதத்தை நியாயப்படுத்தியும்,...
இயக்குநர் ஷியாம் பெனகல் மறைவுக்கு இந்திய திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இயக்குநர் ஷியாம் பெனகல் திங்கள்கிழமை காலமானார். அவருக்கு வயது 90. சிறுநீரக பாதிப்பு காரணமாக மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரது உயிர் இன்று (டிச.23) மாலை 6.30 மணியளவில் பிரிந்தது. அவரது மறைவுக்கு இந்திய திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகர் சிரஞ்சீவி: நம் நாட்டின் தலைசிறந்த...
அபர்ணா பாலமுரளி, ராஜ் பி.ஷெட்டி நடித்துள்ள ‘ருதிரம்’ என்ற மலையாளப் படம் கடந்த 13-ம் தேதி வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் நடிகராக அறிமுகமானவர் பி.கே.பாபு. இதில் அவர் நடித்த ஜேசன் என்ற கதாபாத்திரமும் அவரின் இயல்பான நடிப்பும் பேசப்பட்டது. இதையடுத்து அவர் தமிழில் நடிக்க இருக்கிறார். இதுபற்றி அவர் கூறும்போது, “முதல் படத்திலேயே அபர்ணா பாலமுரளி, ராஜ் பி.ஷெட்டி போன்ற நடிகர்கள் மற்றும் திறமையான குழுவுடன் பணிபுரிய கிடைத்தவாய்ப்பு...
சினிமா மரபுகளை உடைத்து முழுவதும் கிராமத்து மனிதர்களை நடிக்க வைத்து உருவான ‘வெங்காயம்' படம் மூலம் கவனம் ஈர்த்தவர், இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார். இவர் அடுத்து இயக்கியிருக்கும் படம், 'பயாஸ்கோப்'. 25 டாட்ஸ் கிரியேஷன்ஸ் சார்பில் சந்திர சூரியன், பிரபு சுப்பிரமணி, பெரியசாமி தயாரித்துள்ள இந்தப் படம் ஜன. 3-ல் வெளியாகிறது. ‘‘வெங்காயம் படம் எப்படி உருவானது என்பதை சொல்லும் படம்தான் இது” என்கிறார் சங்ககிரி ராஜ்குமார். எப்படி? சினிமா பற்றி...