Google search engine
‘இரவுக்கு ஆயிரம் கண்கள்', 'கண்ணை நம்பாதே' படங்களை இயக்கிய மு.மாறன் அடுத்து இயக்கியுள்ள படம் ‘பிளாக்மெயில்’. ஜி.வி.பிரகாஷ் குமார் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தை ஜேடிஎஸ் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் ஜெயக்கொடி அமல்ராஜ் தயாரிக்கிறார். கதாநாயகியாக தேஜு அஸ்வினியும், ஸ்ரீகாந்த் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். மேலும், பிந்து மாதவி, வேட்டை முத்துக்குமார், ரெடின் கிங்ஸ்லி, ரமேஷ் திலக், ஹரிபிரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டி. இமான் இசையமைக்கிறார்....
பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ என்ற படத்தை இயக்கி வருகிறார், விக்னேஷ் சிவன். இதை செவன் ஸ்கிரீன், நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இந்நிலையில், எக்ஸ் தளம் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் விக்னேஷ் சிவன், திடீரென தனது எக்ஸ் தளப் பக்கத்தைச் செயலிழக்க வைத்துவிட்டு வெளியேறியுள்ளார். அவர் வெளியேற அதிகளவில் எதிர்ப்பு கிளம்பியதே காரணம் என கூறப்படுகிறது. நயன்தாரா ஆவணப்படம் தொடர்பாக, நடிகர்...
நடிகை சமந்தாவின் தந்தை ஜோசஃப் பிரபு வெள்ளிக்கிழமை காலமானார். அவரது இறப்புக்கான காரணம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. இது தொடர்பாக நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “அப்பா, நாம் மீண்டும் சந்திக்கும் வரை” (untill we meet again) என பதிவிட்டு உடைந்த ஹார்ட் எமோஜியையும் பதிவிட்டுள்ளார். மேலும், ஜோசஃப் பிரபுவின் இறப்புக்கான காரணம் தெரியவில்லை. சென்னையில் பிறந்தவர் சமந்தா. இவரது தந்தை ஜோசஃப் பிரபு, தாய் நினேட்...
பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை ’அமரன்’ படக்குழுவினர் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இது தொடர்பான புகைப்படங்களை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘அமரன்’. மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு உருவான இப்படத்தில் முகுந்தாக சிவகார்த்திகேயனும், அவரது மனைவி ரெபேக்கா வர்கீஸாக சாய் பல்லவியும் நடித்திருந்தனர். இந்தப்...
இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மனைவி சாய்ரா பானு கடந்த 19-ம் தேதி அவரை பிரிவதாகக் கூறி விவாகரத்து முடிவை அறிவித்திருந்தார். தனது எக்ஸ் தளப் பக்கத்தில் இதை ஏ.ஆர்.ரஹ்மானும் உறுதி செய்திருந்தார். இதற்கிடையே இருவருக்கும் இடையே சமரசம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக, சாய்ரா பானுவின் வழக்கறிஞர் வந்தனா ஷா, யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார். அவர் கூறும்போது, “ இருவரின் விவாகரத்துக்குப் பிறகு பிள்ளைகள், யாருடன் இருப்பார்கள் என்பதை...
பிரபல கானா பாடகி இசைவாணி, இயக்குநர் பா.ரஞ்சித் கடந்த 2019-ம் ஆண்டு நடத்திய நிகழ்ச்சியில், ‘ஐயம் ஸாரி ஐயப்பா’' என்ற பாடலைப் பாடினார். இந்தப் பாடலை பல்வேறு நிகழ்ச்சிகளில் பாடி வந்தார். இந்தப் பாடல் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி இருக்கிறது. இதற்கு பல தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன. பாடகி இசைவாணி, இயக்குநர் பா.ரஞ்சித் ஆகியோரை கைது செய்யக்கோரி புகாரும் அளிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், இசைவாணிக்கு எதிர்ப்புத் தெரிவித்து...
மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் ‘தக் லைஃப்’ படத்தில் ‘மிர்சாபூர்’ இணையத் தொடர் மூலம் கவனம் பெற்ற நடிகர் அலி ஃபசல் நடிக்கிறார். அவர் தனது படப்பிடிப்பைமுடித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனியார் நிறுனவத்துக்கு அளித்த பேட்டியில், “மணிரத்னத்தின் இயக்கத்தில் பணியாற்றுவது பெருமையான விஷயம். கமல்ஹாசன் மற்றும் பிற நடிகர்களுடன் இணைந்து நடித்தது என் வாழ்வில் மறக்க முடியாத அனுபவம். ஒரு நடிகராக கடந்த 2 மாதங்களில் நிறைய மாற்றங்களை...
’சொல்லிட்டாளே அவ காதல’, ‘ஜிங்குணமணி’, ‘விளையாடு மங்காத்தா’ உள்ளிட்டப் பல ஹிட் பாடல்களைக் கொடுத்தவர் பாடகர் ரஞ்சித். தன்னுடைய சொந்த இசை பேண்ட், ‘பள்ளிக்கூடம்’ கிளாஸ், இசைக் கச்சேரி என பிஸியாக இருந்தவர் அளித்த பேட்டியில் இருந்து… “ஒரு தனியார் தொலைக்காட்சியில் பிரபலமாக இருந்த டேலண்ட் ஷோ ஒன்றில் எனக்கு நல்ல அறிமுகம் கிடைத்தது. பின்பு, இசையமைப்பாளர் மணி சர்மாவிடம் கோரஸ் பாடினபோதுதான் அவர் என் குரல் தனித்துவமாக இருந்ததை...
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. டீசர் எப்படி? - நீண்ட காத்திருப்புக்குப் பிறகு வெளியாகியுள்ள இந்த டீசரின் தொடக்கத்தில் அர்ஜுனின் கேங் கார் ஒன்றின் டிக்கியில் இருந்து ஒரு மனிதரை வெளியே இழுத்து போடுகிறார்கள். இதனைத் தொடர்ந்து ஹீரோ அஜித்தின் இன்ட்ரோ தொடங்கி, த்ரிஷா என கதாபாத்திரங்கள் தொடர்பான ஷாட் என அடுத்தடுத்து காட்சிகள் விரிகின்றன. அஜித் ரசிகர்களுக்கு விருந்தளிக்கக் கூடிய கார்...
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவுக்கு விவாகரத்து வழங்கி சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், இயக்குநர் கஸ்தூரிராஜா இளைய மகன் நடிகர் தனுஷுக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2004-ம் ஆண்டு நவம்பர் 18-ம் தேதி சென்னையில் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். சுமார் 18 ஆண்டுகள் திருமண வாழ்வுக்குப் பின்னர், கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த சில ஆண்டுகளாக இருவரும்...