பத்மநாபபுரம்: நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
தக்கலை வழக்கறிஞர் ஜஸ்டின் மீது தக்கலை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்ததை கண்டித்தும், வழக்கை ரத்து செய்ய கேட்டும், காவல்துறை குற்றவாளிகள் பதிவேட்டில் பெயர் பதிவு செய்ததை கண்டித்தும் பத்மநாபபுரம் வழக்கறிஞர்கள் இன்று கோர்ட் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பத்மநாபபுரம் வழக்கறிஞர் சங்க...
திருவட்டார்: பரளியாற்றில் மஹா தீப ஆரத்தி
திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவிலைச் சுற்றி பரளியாறு ஓடுகிறது. இந்த ஆற்றின் கரையில் திருப்பாதக்கடவில் நேற்று இரவு அகில இந்திய சன்னியாசிகள் சங்கம் மற்றும் திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவில் புண்ணிய தீர்த்தங்கள் பராமரிப்பு பக்தர்கள் சங்கம் சார்பில் மஹா ஆரத்தி பெருவிழா நடந்தது. ஜீவகாருண்ய சேவைகள் பேரியக்க தலைவர்...
ஆறுதேசம்: ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம்
ஆறுதேசம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிய கட்டிடங்கள் கட்ட தேசிய சுகாதார முகமை நிதி ரூ. 1 கோடி 10 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, புதிய கட்டுமான பணிகள் நிறைவடைந்தது. பல மாதங்கள் கடந்த பின்பும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கட்டிடங்கள் திறக்கப்படாமல் உள்ளது. எனவே புதிய கட்டிடங்களை...
கிள்ளியூர்: கலைஞர் கனவு இல்ல திட்டப்பணிகளை கலெக்டர் பார்வை
கிள்ளியூர் வட்டம் இனயம் புத்தன்துறை ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 55 பயனாளிகளுக்கு வீடு கட்ட அனுமதி பெறப்பட்டு, 47 பயனாளிகளுக்கு வீடுகள் கட்டி வருகின்றனர். இந்த 47 பயனாளிகளையும் நேரில் கலெக்டர் அழகுமீனா நேற்று சந்தித்தார். இன்னும் 5 மாத காலத்திற்குள்...
பேச்சிப்பாறை: திமுக நிர்வாகிகள் கூட்டம்.. அமைச்சர் பங்கேற்பு
பேச்சிப்பாறை ஊராட்சி திமுக நிர்வாகிகள் கூட்டம் பேச்சிப்பாறையில் நேற்று மாலை நடைபெற்றது. திருவட்டார் வடக்கு ஒன்றிய செயலாளர் ஜான்சன் தலைமை வகித்தார். குமரி மேற்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் மனோதங்கராஜ் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார். அப்போது அவர் கூறுகையில், - கட்சியை வலுப்படுத்த தமிழக அரசு...
கொல்லங்கோடு: மது விற்ற கேரளா முதியவர் கைது
கொல்லங்கோடு சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகுமார் தலைமையில் போலீசார் சங்குருட்டி என்ற பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும் வகையில் கையில் பையுடன் நின்ற முதியவரை பிடித்து சோதனை செய்தனர். அவர் வைத்திருந்த பையில் மது பாட்டில்கள் இருந்ததை கண்டறிந்தனர். விசாரணையில் அவர் கேரள...
குலசேகரம்: போலீஸ் எஸ்ஐ மீது மோதிய அதிவேக பைக்
குலசேகரம் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் சரவணகுமார் மற்றும் போலீசார் குலசேகரம் பகுதியில் நேற்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வேகமாக வந்த பைக்கை சரவணகுமார் நிறுத்த முயன்றார். ஆனால் பைக் வேகமாக சென்றதால் எதிர்பாராதவிதமாக பைக் எஸ்ஐ மீது மோதியது. மோதியதில் எஸ்ஐ மற்றும்...
நாகர்கோயில்: வாட்டர் டேங்க் ரோட்டில் ஆபத்தான பள்ளம்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வாட்டர் டேங்க் ரோட்டில் சாலையின் நடுவில் ஆபத்தான பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவ்வழியாக வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். சாலையை சீரமைக்க துறை சார்ந்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள்...
களியக்காவிளை: ஹோட்டல் சப்ளையரை தாக்கிய.. 4 கேரளா வாலிபர்கள்
களியக்காவிளை அருகே உள்ள ஒரு ஹோட்டலில் அஜ்மல் (24) என்பவர் சப்ளையராக வேலை செய்து வருகிறார். நேற்று கேரள பகுதியைச் சேர்ந்த ஷாபி (19) என்பவர் ஓட்டலுக்கு வந்தார். திடீரென அஜ்மல் இடம் தகராறு செய்தார். ஹோட்டல் உரிமையாளர் சமாதானம் செய்துள்ளார். எனினும் ஆத்திரத்தில் இருந்த ஷாபி...
குமரி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு ரூ. 12.80 லட்சம் மானியம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2024-25ம் நிதி ஆண்டில் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ரூ. 12 லட்சத்து 86 ஆயிரம் மானியம் வழங்கப்பட்டுள்ளதாக வேளாண்மை அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். விதை உற்பத்தி, விதை விநியோகம், எந்திர நடவு, உயிர் உர விநியோகம் மற்றும் பயிர்...












