ஆறுதேசம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிய கட்டிடங்கள் கட்ட தேசிய சுகாதார முகமை நிதி ரூ. 1 கோடி 10 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, புதிய கட்டுமான பணிகள் நிறைவடைந்தது. பல மாதங்கள் கடந்த பின்பும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கட்டிடங்கள் திறக்கப்படாமல் உள்ளது. எனவே புதிய கட்டிடங்களை திறக்க கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மெது கும்மல் வட்டார குழு சார்பில் ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் மாவட்ட செயலாளர் செல்வசாமி ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார். பலர் கலந்து கொண்டனர்.