Google search engine

குறும்பனை: ராட்சத அலையில் சிக்கி 2 தொழிலாளிகள் படுகாயம்

குளச்சல், மேலகுறும்பனையைச் சேர்ந்தவர் சகாய சர்ச்சில் (36) இவருக்குச் சொந்தமான பைபர் வள்ளத்தில் நேற்று டார்வின் (50), ஜார்ஜ் (60) உள்ளிட்ட 6 பேர் மீன்பிடிக்கச் சென்றனர். அப்போது திடீரென எழுந்த ராட்சத அலையில் சிக்கி வள்ளம் தூக்கிவீசப்பட்டது. இதில் வள்ளத்தில் இருந்த அனைவரும் கடலில் விழுந்தனர்....

நாகர்கோவிலில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும் என்பது உட்பட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், வங்கி ஊழியர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். குமரி மாவட்டத்திலும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வங்கி ஊழியர்கள் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகர்கோவில் வேப்பமூடு பூங்கா முன்பு...

பத்மநாபபுரம்: ஆசிரியரை வெட்டியவருக்கு 4 ஆண்டுகள் ஜெயில்

கேரளமாநிலம் கோழிக்கோடு பகுதியில் மேல்நிலைப் பள்ளி ஆசிரியராக பணிபுரிவர் விஜயன் (45). இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு 58 மாணவர்களுடன் குமரி மாவட்டத்திற்கு சுற்றுலா வந்தார். பத்மநாபபுரம் அரண்மனையில் மாணவர்கள் ஐஸ் வாங்க சென்றனர். இதனை ஆசிரியர் விஜயன் தடுத்ததால், ஐஸ் வியாபாரி ஸ்ரீ ஹரி...

மார்த்தாண்டம்: கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை

மார்த்தாண்டம் அருகே பாகோடு பகுதி சேர்ந்தவர் ஜான்ரோஸ் மகன் ஐசக் சைமன் (18). இவர் நட்டாலம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன் கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. நேற்று...

மீனச்சல்: கோயிலில் பாரம்பரிய களமெழுத்து பாட்டு நிகழ்ச்சி

களமெழுத்துப் பாட்டு என்பது குமரியில் செய்யப்படும் ஒரு வழிப்பாட்டு சடங்கு கலை வடிவம். தற்போது இந்த வழிபாட்டு முறையை பின்பற்ற தேவையான கலைஞர்கள் இல்லாத காரணத்தால் கலை அழியும் நிலை உள்ளது. இந்நிலையில் மீனச்சல் கிராமத்தில் உள்ள மேலே வீடு பத்திரகாளி அம்மன் கோவிலில் இந்த பாரம்பரிய...

உதயனூர்விளை: புதிய ரேஷன் கடை திறந்து வைத்த எம்எல்ஏ

குளப்புறம் ஊராட்சி வண்டிக்காரவிளை பகுதியில் உள்ள ரேசன் கடையை பிரித்து உதயனூர்விளை பகுதியில் புதிய முழுநேர ரேசன் கடைக்கு புதிதாக சொந்த கட்டிடம் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து புதிதாக ரேசன் கடை அமைக்க ரூ. 17 லட்சம் நிதி ஒதுக்கீடு...

நட்டாலம்: கார் மோதி நடந்து சென்ற பெண் படுகாயம்

நட்டாலம் பகுதியை சேர்ந்தவர் ராஜகுமார் மனைவி விமலா (50). நேற்று மாலை இடவிளாகம் பகுதியில் மகளுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் ஒன்று திடீரென நடந்து சென்ற விமலா மீது மோதியது.  இதில் தலையில் பலத்த காயம் அடைந்தவரை மகள் அக்கம்...

வடசேரி சந்தையில் 7½ கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

விரிகோடு ரயில்வே கிராசிங்கில் அதிகாரிகள் மாற்று வழி பாதையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று விரிகோடு சிஎஸ்ஐ சமுதாய நலக்கூடத்தில் பொதுமக்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பத்மநாபபுரம் சார் ஆட்சியர் வினய்குமார்...

தக்கலை: ஸ்கூட்டர் மீது லாரி மோதி முதியவர் பலி

சிராயன்குழி பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ் (68). இவரது 2வது மகள் அஸ்வினி என்பவரின் திருமணம் வருகிற செப்டம்பர் மாதம் நடக்க உள்ளது. இதற்கான திருமண அழைப்பிதழை அவர் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு கொடுக்க நேற்று தனது ஸ்கூட்டரில் திருமண அழைப்பிதழ் கொண்டு சாமியார்மடம் பகுதியில் சென்று கொண்டு...

தக்கலை:   இளம்பெண்ணிடம் அத்துமீறிய மத போதகர் கைது

தக்கலை அருகே ஒரு பகுதியை சேர்ந்த 26 வயது இளம் பெண்ணுக்கு உடல்நலவுஉடல்நலக்குறைவு ஏற்பட்டது. உறவினர்கள் கூறியதன் பேரில் மேக்காமண்டபம் பகுதியில் உள்ள ஒரு கிறிஸ்தவ சபைக்கு சென்றுள்ளார். சபை போதகர் ரெஜிமோன் (43) என்பவர் இளம்பண்ணின்இளம்பெண்ணின் நோய் குணமாக தனிமையில் ஜெபம் செய்ய வேண்டும் என்று...