குளச்சல்: மனைவியை தாக்கிய கணவன் உட்பட 4 பேர் மீது வழக்கு
குறும்பனை, சகாய மாதா தெருவைச் சேர்ந்தவர் ஷாஜி. இவரது மனைவி கஜினி பிரியா (37). இவர் இரண்டாவது ஷாஜியை திருமணம் செய்து உள்ளார். திருமணத்தை பதிவுசெய்வது தொடர்பாக கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது. நேற்று ஷாஜி தனது உறவினர்களான டெய்சி (35), கீதா...
மண்டைக்காடு: ஸ்டார்ட் செய்யும் போது எரிந்த ஸ்கூட்டர்
மண்டைக்காடு புதூர் பகுதியைச் சேர்ந்தவர் டைனி (37). மீன்பிடித் தொழிலாளி. நேற்று (ஜூலை 10) மாலை இவர் தேங்காப்பட்டணம் செல்ல ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு தெருவில் வந்தபோது, என்ஜின் இயங்காமல் திடீரென நின்றது.
அவர் ஸ்கூட்டர் கிக்கரை பலமுறை மிதித்து ஸ்டார்ட் செய்ய முயற்சித்தார். அப்போது என்ஜினில் திடீரென...
மணவாளக்குறிச்சி: கல்லூரி மாணவரின் பைக் திருட்டு
மணவாளக்குறிச்சி அருகே அம்மாண்டிவிளை பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் வினோத் (23). தனியார் கல்லூரியில் பிஎஸ்சி 3ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவ தினம் வினோத் பைக்கில் அம்மாண்டிவிளையில் நடந்த திருமண விழாவில் பங்கேற்க சென்றார். மண்டபத்தின் வெளியே பைக்கை நிறுத்தி விட்டு உள்ளே சென்றவர் பின்னர்...
தக்கலை: பைக் – கார் மோதல்; 4 பேர் படுகாயம்
முளகுமூடு பகுதியை சேர்ந்தவர் ரவி (36) கட்டிடத் தொழிலாளி. இவர் தனது மனைவியுடன் நேற்று மாலையில் பைக்கில் தக்கலை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அழகியமண்டபம் பகுதியில் செல்லும்போது எதிரே வந்த கார் ஒன்று பைக் மீது மோதியது. இந்த விபத்தில் ரவி, அவரது மனைவி மற்றும் பின்னால்...
களியக்காவிளை பேருராட்சியில் ஆர்ப்பாட்டம்
களியக்காவிளை பேரூராட்சியில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக குடிநீர் விநியோக ஊழியர்களாக பிபின் ஷாஜி மற்றும் ஆல்பன் ஆகியோரும், மின் உதவியாளராக எபனைசரும் பணியாற்றி வருகின்றனர். மற்ற பேரூராட்சிகளில் முறைப்படி 20 ஆண்டுகள் ஒரே பதவியில் பணியாற்றிய ஊழியர்களுக்கு சிறப்பு நிலைக்கான ஊதியம் வழங்க ஆணை வழங்கி...
பள்ளியாடி: 4 வழி சாலைக்காக பாசன கால்வாய் சேதம்
குமரி மாவட்டத்தில் 4 வழிச்சாலை பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தால் விவசாய நிலங்கள், பாசன குளங்கள், கால்வாய்கள் பல சேதமடைந்ததாக புகார் உள்ளது. இதில் கிள்ளியூர் ஒன்றியம் பள்ளியாடி பகுதியில் பாசன கால்வாய்களை சேதப்படுத்தி, சாலை உருவாக்கப்பட்டுள்ளது.
இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட...
இரணியல்: பெண்ணுக்கு ஆபாச சைகை காட்டியவர் கைது
இரணியல் அருகே மொட்டவிளையை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (44) வெளிநாட்டில் பணி செய்கிறார். இவரது மனைவி சுமதி (37). இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்கள் வீட்டின் அருகே வசித்து வரும் வியாபாரி கோபாலன் (50) என்பவருக்கும் சுமதிக்கும் முன்விரோதம் உள்ளதாக தெரிகிறது.
கோபாலன் நேற்று (ஜூலை 8)...
குறும்பனை: ராட்சத அலையில் சிக்கி 2 தொழிலாளிகள் படுகாயம்
குளச்சல், மேலகுறும்பனையைச் சேர்ந்தவர் சகாய சர்ச்சில் (36) இவருக்குச் சொந்தமான பைபர் வள்ளத்தில் நேற்று டார்வின் (50), ஜார்ஜ் (60) உள்ளிட்ட 6 பேர் மீன்பிடிக்கச் சென்றனர். அப்போது திடீரென எழுந்த ராட்சத அலையில் சிக்கி வள்ளம் தூக்கிவீசப்பட்டது. இதில் வள்ளத்தில் இருந்த அனைவரும் கடலில் விழுந்தனர்....
நாகர்கோவிலில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும் என்பது உட்பட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், வங்கி ஊழியர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். குமரி மாவட்டத்திலும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வங்கி ஊழியர்கள் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகர்கோவில் வேப்பமூடு பூங்கா முன்பு...
பத்மநாபபுரம்: ஆசிரியரை வெட்டியவருக்கு 4 ஆண்டுகள் ஜெயில்
கேரளமாநிலம் கோழிக்கோடு பகுதியில் மேல்நிலைப் பள்ளி ஆசிரியராக பணிபுரிவர் விஜயன் (45). இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு 58 மாணவர்களுடன் குமரி மாவட்டத்திற்கு சுற்றுலா வந்தார். பத்மநாபபுரம் அரண்மனையில் மாணவர்கள் ஐஸ் வாங்க சென்றனர். இதனை ஆசிரியர் விஜயன் தடுத்ததால், ஐஸ் வியாபாரி ஸ்ரீ ஹரி...













