அருமனை: 280 மது பாட்டில்கள் பறிமுதல்; வியாபாரி தப்பி ஓட்டம்
இடைக்கோடு பகுதியைச் சேர்ந்த சுனில் குமார் என்பவர் வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி சட்டவிரோதமாக விற்பனை செய்ததாக அருமனை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. நேற்று போலீசார் சென்றபோது, சுனில் குமார் தப்பி ஓடி தலைமறைவானார். போலீசார் அவரது வீட்டில் இருந்து ரூ. 43,400 மதிப்பிலான 280...
குமரி: தேசிய நெடுஞ்சாலையில் ரோலிங் சிக்னல்?… பரபரப்பு
குமரி மாவட்டம் வில்லுக்குறி பேரூராட்சி அலுவலகத்தின் அருகே குளச்சல் போக்குவரத்து காவல் துறையால் அமைக்கப்பட்ட புதிய போக்குவரத்து சிக்னல் லைட், காற்றில் ஆடி ரோலிங் சிக்னல் போல் போக்குவரத்தை தடை செய்வதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனால் விபத்துகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாகவும், உடனடியாக இதை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்...
நெல்லை, குமரியில் அடுத்த 2 நாட்களுக்கு மழை.. வானிலை எச்சரிக்கை
தமிழ்நாடு வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதனால் தமிழ்நாடு, புதுச்சேரி. காரைக்கால் பகுதிகளில் இன்று (ஏப்ரல் 9) இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதே போல் நாளை (ஏப்ரல் 10) மேற்கு தொடர்ச்சி மழை மாவட்டங்கள். அதனை ஓட்டிய...
நாகர்கோவில் பூத்தில் அதிக ஓட்டு பெற்றால் மோதிரம் -நயினார்
நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதிக்கான தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நேற்று கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாஜக தமிழ் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், வேட்பாளர் எம். ஆர். காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய நயினார் நாகேந்திரன், நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளில் அதிக வாக்குகள்...
இரணியல்: ரயில் நிலையம் ‘பி’ பிரிவு தர நிலைக்கு உயர்வு
இந்திய ரயில்வேயை நவீனமயமாக்கும் திட்டத்தின் கீழ், குமரி மாவட்டம் இரணியல் ரயில் நிலையம் பழைய சிக்னல் மற்றும் ரயில் இயக்க கட்டுப்பாட்டு முறைகளை மாற்றி, 'மின்னணு இன்டர்லாக்கிங்' மற்றும் கணினி வழி கண்காணிப்பு வசதியுடன் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இரணியல் ரயில் நிலையம் 'பி' பிரிவு நிலைக்கு மேம்படுத்தப்பட்டுள்ளது
குமரி: தேர்தல் விழிப்புணர்வு மினி மாரத்தான்
தடிக்காரன்கோணம் பகுதியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி நேற்று ஒரு மினி மாரத்தான் விழிப்புணர்வு ஓட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் அழகு மீனா இந்த ஓட்டத்தை தடிக்காரக்கோணத்தில் துவக்கி வைத்தார். பூதப்பாண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இந்த நிகழ்ச்சி நிறைவடைந்தது. தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விரிவான...
தேங்காப்பட்டணம்: வாலிபரிடம் இருந்து கஞ்சா பறிமுதல்
தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக நுழைவாயில் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட புதுக்கடை போலீசார், அரசால் தடை செய்யப்பட்ட 10 கிராம் கஞ்சாவுடன் ஜாண் டேனியல் (34) என்ற வாலிபரை கைது செய்தனர். வேங்கோடு பகுதியை சேர்ந்த இவர் பெங்களூரில் வசித்து வருவது தெரியவந்துள்ளது. கஞ்சாவை எங்கிருந்து, எதற்காக...
புதுக்கடை: கிராம அலுவலக உதவியாளர், மனைவி மீது தாக்குதல்
முளகுமூடு கிராம அலுவலக உதவியாளர் மரியபிரபாகரன் (35) மற்றும் அவரது மனைவி மேரி பெல்சி ஆகியோர், பக்கத்து வீட்டுக்காரர் ஆண்டனி (53) மற்றும் அவரது கூட்டாளிகள் சுபாஷ் (27), ஜியோ (20) ஆகியோரால் தாக்கப்பட்டனர். கார் சேதப்படுத்திய முன்விரோதம் காரணமாக இந்த தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது. காயமடைந்த...
குமரி: பாஜகவை பார்த்து முதல்வர் பயப்படுகிறார் -நயினார்
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசுகையில், வருகின்ற 15ஆம் தேதி தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய நாகர்கோவில் வரும் பிரதமர் மோடி, ரோட் ஷோவில் பங்கேற்கிறார். மேலும், முதல்வர் பாஜகவைக் கண்டு அஞ்சுவதாகவும், அவரது முன்னாள் அமைச்சர்கள்...
நாகர்கோவிலில் வாக்கு என்னும் மையத்தில் தீவிர ஏற்பாடு
கன்னியாகுமரி மாவட்டத்தில் 23ஆம் தேதி நடைபெறவிருக்கும் தேர்தல் பணிகளின் ஒரு பகுதியாக, ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பெட்டிகள் கோணம் பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பணியாளர்கள் இரவு பகலாக இந்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஏற்பாடுகள் தேர்தலை சுமூகமாக...













