Google search engine

இடைக்கோடு: ஏழை மூதாட்டிக்கு வீடு ; எம்எல்ஏ வழங்கினார்

விளவங்கோடு தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் வீடில்லாத ஏழை மக்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ராகுல் காந்தி பவன் என்ற பெயரில் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, இடைக்கோடு பேரூராட்சி, மாலைக்கோடு பகுதியைச் சேர்ந்த ஏழை மூதாட்டிக்கு புதிய வீடு...

குமரி: 20 ஆண்டுகளுக்குப் பின்பு சந்தித்த முன்னாள் மாணவர்கள்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள புனித அலோசியஸ் மேல்நிலை பள்ளியில் 2006 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த மாணவர்கள், 20 வருடங்களுக்குப் பிறகு நேற்று ஒன்றிணைந்தனர். இந்த விழாவில் அவர்களுக்குப் பாடம் எடுத்த ஆசிரியர்களும், பள்ளியின் தற்போதைய தாளாளரும் கலந்துகொண்டனர். முன்னாள் மாணவர்களுக்குப் பாடம் எடுத்த...

குளச்சல்: தாயுடன் தகராறு; மீனவர் தூக்கிட்டு தற்கொலை

குளச்சல், லியோன் நகரைச் சேர்ந்த ஷகில் மோன் (18) என்ற இளைஞர், நேற்று தனது தாயுடன் ஏற்பட்ட தகராறில் வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தந்தை இறந்த நிலையில், தாயுடன் வசித்து வந்த ஷகில், போதையில் தாயுடன் வாக்குவாதம் செய்துள்ளார். தாய் கோபத்தில் வெளியே...

மார்த்தாண்டம்: மேம்பாலத்தில் அதிகாலை கோர விபத்து – வீடியோ

மார்த்தாண்டம் மேம்பாலத்தில் இன்று அதிகாலை சுமார் 1 மணியளவில், அதிவேகமாகச் சென்ற வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதனால் ஒன்றன் பின் ஒன்றாக 7 வாகனங்கள் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாகத் தெரிகிறது. விபத்து நடந்த நேரத்தில் அப்பகுதியில் இருந்தவர்கள்...

மார்த்தாண்டம்: நண்பனை அரிவாளால் வெட்டியவர் கைது

மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த சுபின் (25) என்ற வெல்டிங் தொழிலாளியை, அவரது நண்பர் ராஜித் மது அருந்த அழைத்துச் சென்று அரிவாளால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதில் படுகாயமடைந்த சுபின் குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார்...

குமரி: பொங்கல் கொண்டாட்டத்தில் ஒருவர் வெட்டிக் கொலை

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே சரலூரில் நேற்று நடைபெற்ற பொங்கல் விழா கலை நிகழ்ச்சியின் போது நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறால் போலீசார் நிகழ்ச்சிகளை ரத்து செய்து அனைவரையும் கலைந்து செல்ல உத்தரவிட்டனர். பின்னர், ரமேஷ் என்ற இளைஞர் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். மணிகண்டன் என்ற...

குளச்சல்: மொபட்டில் சென்ற முதியவர் மயங்கி விழுந்து சாவு

குளச்சல், மேற்கு நெய்யூர் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ரேஷன் கடை ஊழியரும், தற்போது முட்டை வியாபாரமும் செய்து வந்தவருமான ஆன்றோ சேவியர் (68) என்பவர், வியாபாரத்திற்காக மொபட்டில் சென்றபோது திடீரென தலைசுற்றி கீழே விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்....

திருவட்டாறு: இன்சூரன்ஸ் ஏஜென்ட் தூக்கிட்டு தற்கொலை

திருவட்டாறு பகுதியை சேர்ந்த தனியார் இன்சூரன்ஸ் ஏஜென்ட் தோமஸ் (58), நேற்று முன்தினம் இரவு நண்பருடன் மது அருந்தியுள்ளார். நேற்று காலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவர் காணப்பட்டார். இது குறித்து அவரது மனைவி திருவட்டாறு போலீசாருக்கு தகவல் அளித்ததை அடுத்து, போலீசார்...

மார்த்தாண்டம்: மருத்துவமனைக்கு சென்ற இளம் பெண் மாயம்

மார்த்தாண்டம், கோதேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 45 வயதான டிரைவர் மணிகண்டன் என்பவரின் மகள் புவனேஸ்வரி (21) உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனைக்கு செல்வதாகக் கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் பல இடங்களில் தேடியும் புவனேஸ்வரி குறித்து எந்த தகவலும் கிடைக்காததால், அவரது தந்தை மணிகண்டன் மார்த்தாண்டம்...

திருவட்டாறு: கோவிலில் சந்தன களப அபிஷேகம் துவங்கியது

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் தை மாதத்தின் முதல் நாள் தொடங்கி 12 நாட்கள் சந்தன களப அபிஷேகம் நடைபெறும். இந்த ஆண்டு நேற்று சுமார் 12 மணியளவில் ஆதிகேசவப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவிக்கு களப அபிஷேகம் நடைபெற்றது....