Google search engine

இரையுமன்துறை: எல்லை பிரச்சனை – கலெக்டர் நேரில் ஆய்வு

இரையுமன்துறை அருகே பூத்துறை மீனவர் கிராமத்திற்கும் ஊர் எல்லை உறுதிப்படுத்துவதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. மேலும் தூண்டில் வளைவு பணிக்கு பாறாங்கல் கொண்டு செல்லவும் ஊர் மக்கள் தடை செய்திருந்தனர்.  இரு சம்பவங்கள் குறித்து கிள்ளியூர் தாசில்தார் ராஜசேகர் தலைமையில் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டருக்கு...

குமரி: பொது மக்களுக்கு சிலம்ப விளையாட்டு விழிப்புணர்வு

கன்னியாகுமரி மாவட்டம் கணபதிபுரம் AVD மேல்நிலைப்பள்ளியில் பொது மக்களுக்கு சிலம்ப விளையாட்டில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக SISA BOOK உலக சாதனைக்கு முயற்சி செய்து வெற்றியும் அடைந்தனர். சிலம்பம் 65 நிமிடம் தொடர்ந்து நிற்காமல் சிலம்பம் சுற்றினர் மாணவர்களை காண வந்திருந்த பொதுமக்களுக்கும் பெற்றோர்களும் வியப்பில் இருந்தனர். இதனை...

குமரி: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு…

மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு. வாண வேடிக்கை மற்றும் பக்தர்களின் கோஷத்துடன் நடை திறக்கப்பட்டது. இந்த நிகழ்வைக் காண 30,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர். வழக்கமாக மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும் நிலையில், இன்று பக்தர்கள் கூட்டம்...

புதுக்கடை: கோவில் கொள்ளை இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

புதுக்கடை அருகே பார்த்திப்புரத்தில் பிரசித்தி பெற்ற பார்த்தசாரதி கோவில் உள்ளது. மிகப் பழமைவாய்ந்த இந்த கோவிலில் உள்ள ஐம்பொன் சிலை, மற்றும் வெள்ளிக் கவசங்கள் நேற்றுமுன்தினம் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது. மத்திய தொல்லியல் துறை மற்றும் தமிழக அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயத்தில் இருதுறை...

மண்டைக்காடு: கடன் தொல்லையால் பெண் தூக்கிட்டு தற்கொலை

மண்டைக்காடு அருகே அழகன்பாறையை சேர்ந்தவர் வின்சென்ட் மனைவி ஆன்றலின் சுஜா (47). வீட்டருகே பெட்டிக்கடை நடத்தி வந்தார். சுய உதவிக்குழுக்களில் பணம் கடன் பெற்று அதனை திருப்பிச் செலுத்த வருமானம் இல்லாமல் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் வின்சென்ட் வேலைக்குச் சென்று விட்டார். மகன் கல்லூரிச்...

குமரி: மழையால் ரம்மியமாக காட்சியளிக்கும் பேச்சிப்பாறை அணை

குமரியில் தற்போது தொடர் மழை பெய்து வருவதால் பேச்சிப்பாறை அணையும் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது. இந்த ஆண்டு பெரும்பாலான நாட்களிலும் 35 அடிக்கு அதிகமான தண்ணீர் இருந்து வந்தது. தற்போது நிரம்பிய நிலையில் எல்லா பக்கங்களிலும் நீர் சூழ்ந்து கடல்போல் காட்சியளிக்கிறது, காற்றின் வேகத்தில்...

மார்த்தாண்டம்: தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டோவை இழுத்து போராட்டம்

குமரி மாவட்டம் திருவனந்தபுரத்திலிருந்து கன்னியாகுமரிக்கு தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலை பகுதி களியக்காவிளை முதல் கன்னியாகுமரி வரை பல இடங்களில் பழுதடைந்து பாதுகாப்பின்றி காணப்படுகிறது. இதனால் பல்வேறு விபத்துகள் நடப்பதாக புகார்கள் உள்ளன. குறிப்பாக மார்த்தாண்டம் பகுதியில் உள்ள மேம்பாலத்தின் அடிப்பகுதியில் உள்ள சாலை பல...

நித்திரவிளை: ஊர் எல்லை பிரச்சனை; 20 பேர் மீது வழக்கு

நித்திரவிளை அருகே பூத்துறை மீனவ கிராமத்தினருக்கும் இரையுமன்துறை கிராமத்தினருக்கும் பிரச்சனை இருந்து வருகிறது. இதனால் கடல் அலை தடுப்பு சுவருக்கு பெரிய கல் கொண்டு செல்வது தொடர்பாக அடிக்கடி சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் இரு கிராமத்தை பிரிக்கும் வகையில் நடப்பட்டிருந்த எல்லைக்கல்லை...

பார்த்திபபுரம்: இந்து முன்னணியினர் 230 பேர் மீது வழக்கு

புதுக்கடை அருகே பார்த்திப்புரத்தில் பிரசித்தி பெற்ற பார்த்தசாரதி கோவில் உள்ளது. மிகப் பழமைவாய்ந்த இந்த கோவிலில் உள்ள ஐம்பொன் சிலை, மற்றும் வெள்ளிக் கவசங்கள் கடந்த 13-ம் தேதி நள்ளிரவில் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது. கோவிலில் கொள்ளையடித்த நபர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு...

மார்த்தாண்டம்: சாலைக்கு  பாடை கட்டி பாஜக போராட்டம்

நாகர்கோவில் - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை குண்டும் குண்டும் குழியுமாக குளம்போல் காட்சியளிக்கிறது. இந்த சாலையை செப்பனிட 19 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் அறிவித்தும் பணிகள் துவங்காத காரணத்தால் பல விபத்துக்கள் தொடர்கதையாகி வருவதை கண்டித்து குழித்துறை நகர பாஜக சார்பாக மார்தாண்டத்தில்...