Google search engine

நித்திரவிளை: கார் பைக் மோதல்; வாலிபர் காயம்

தேங்காப்பட்டணம் தோப்பு பகுதியை சேர்ந்தவர் அகமது கோயா தாங்கள் (39) தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று மாலை தனது சொகுசு காரில் நம்பாளி வடக்கு விளை பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே நித்திரவிளையை சேர்ந்த லெனின் (19) என்பவர் வந்த பைக்...

குமரி: ஒரே நாளில் 200க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு; எஸ்.பி.

கன்னியாகுமரி மாவட்ட எஸ். பி. ஸ்டாலின் நேற்று (ஜனவரி 6) செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், "மணலியில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இது பற்றி தீவிர விசாரணை நடத்தப்பட்டுள்ளது. விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும். மேலும், பொதுமக்களுக்கு whatsapp...

குமரி மாவட்டத்தில் புதிய வாக்குச் சாவடிகள் ஆட்சியர் தகவல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிய வாக்காளர் பட்டியலை நேற்று (ஜனவரி 6) மாவட்ட ஆட்சியர் அழகுமீனா வெளியிட்டார். அதில் மாவட்டத்தில் 2024 ன்படி மொத்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 1698 என்றும், தற்போது உள்ள வாக்குச்சாவடி எண்ணிக்கை 1702 என்றும் கிள்ளியூர் தொகுதியில் புதிதாக 2 வாக்குச்சாவடிகளும், பத்மநாதபுரம் தொகுதியில்...

கருங்கல்: தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

கருங்கல் அருகே உள்ள கம்பிளார் பகுதியைச் சேர்ந்தவர் பிரேமதாஸ் (43). தொழிலாளி. இவருடைய மனைவி ஜெபா. இவர்களின் ஏழு வயதான பெண் குழந்தையை கடந்த மே மாதம் பிரேமதாஸ் தேங்காய்ப்பட்டணம் கடலைப் பார்க்க அழைத்துச் சென்றபோது அலையில் சிக்கி குழந்தை இறந்தது. அதன் பின்பு கணவன் மனைவியிடையே அடிக்கடி...

பளுகல்: சட்ட விரோதமாக மது விற்ற மேலாளர் கைது

களியக்காவிளை அருகே பளுகல் பகுதியில் தனியார் பார் ஒன்று இயங்கி வருகிறது. இந்த பாரில் சட்டவிரோதமாகவும் அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கடந்தும் மது பாட்டில்கள் விற்கப்படுவதாக பளுகல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பந்தப்பட்ட பாருக்குச் சென்று நேற்று இரவு சோதனை நடத்தினர்.  அப்போது பாரில் சட்டவிரோதமாகவும், அனுமதிக்கப்பட்ட...

தக்கலை: கொலை முயற்சி;  கைதான ரவுடியின் கை முறிந்தது

தக்கலை அருகே திக்கணங்கோடு பகுதியை சேர்ந்தவர் டெரன்ஸ். பிரபல ரவுடியான இவர் மீது குமரி மாவட்டத்தில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளது. சம்பவ தினம் இரவு குடிபோதையில் அதே பகுதியைச் சேர்ந்த எட்வின்  என்ற டிரைவரை வழிமறித்து கத்தியால் வெட்டி கொலை...

தக்கலை: இளம் பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி

தக்கலை அருகே பத்மநாபபுரம் பகுதி சேர்ந்தவர் உதயகுமார் மகள் ஸ்ரீதுர்கா (25). இவர் நேற்று முன்தினம் (ஜனவரி 5)  மாலையில் அங்குள்ள முருகன் கோயிலுக்கு செல்வதற்காக தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர் ஸ்ரீதுர்காவின் கழுத்தில் கிடந்த...

அருமனை: இறைச்சிக்கழிவுடன் வந்த வாகனம் பறிமுதல்

அருமனை அருகே ஆறுகாணி பகுதியில் பன்றி பண்ணை அனுமதி இன்றி செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு இருந்தது. இந்த நிலையை சம்பந்தப்பட்ட பன்றி பண்ணைக்கு இன்று 6-ம் தேதி காலை சரக்கு வாகனத்தில் கேரள மாநிலத்தில் இருந்து இறைச்சி கழிவுகள் கொண்டு வரப்பட்டதாக ஆறுகாணி போலீசருக்கு ரகசிய தகவல்...

புதுக்கடை: தடை செய்யப்பட்ட லாட்டரி விற்றவர் கைது

புதுக்கடை அருகே உள்ள அஞ்சு கண்ணுகலுங்கு சந்திப்பு பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் நேற்று புதுக்கடை போலீசார் அந்த பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.  அப்போது அங்குள்ள பஸ் நிலையம் அருகில் அதே பகுதி வட்டப்...

புதுக்கடை: புகையிலை பொருட்கள் விற்ற பெண் மீது வழக்கு

புதுக்கடை அருகே கீழ்குளம் பகுதி செந்தறை என்ற இடத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் புதுக்கடை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பிரைட் பிளசிங் தலைமையிலான போலீசார் நேற்று (ஜனவரி 6) அந்த பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது அதே பகுதி ராஜகுமாரி...