குமரி: மானிய விலை மண்ணெண்ணெய் 900-லிட்டர் பறிமுதல்
விளவங்கோடு வட்ட வழங்கல் அதிகாரி அனிதா குமாரி தலைமையிலான குழு, நட்டாலம் பகுதியில் ஒரு டெம்போவை சோதனை செய்தது. அதில் படகுகளுக்கு பயன்படுத்தப்படும் 900 லிட்டர் மானிய விலை வெள்ளை மண்ணெண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது. ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார். வாகனம் மற்றும் மண்ணெண்ணெயை அதிகாரிகள் பறிமுதல் செய்து,...
குமரி: சிவராத்திரிக்கு விடுமுறை; முன்னாள் எம்எல்ஏ கோரிக்கை
பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், முன்னாள் எம்எல்ஏவுமான விஜயதரணி களியக்காவிளை பகுதியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், மகா சிவராத்திரி விழாவுக்கு அரசு விடுமுறை வழங்க வேண்டும் என சட்டமன்றத்தில் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளதாகவும், சிவராத்திரிக்கு அரசு விடுமுறை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்....
குமரியில் இரண்டாவது பருவ நெல் அறுவடை தொடக்கம்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இரண்டாவது பருவ நெல் சாகுபடி நிறைவடைந்து, தற்போது நெற்பயிர்கள் விளைச்சலுக்கு வந்துள்ளன. இதன் தொடர்ச்சியாக, வீர நாராயண மங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று நெல் அறுவடை பணிகள் தொடங்கியுள்ளன. விவசாயிகள் அறுவடையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மாவட்டத்தின் மற்ற பகுதிகளிலும் விரைவில் அறுவடை நடைபெறும்...
தலக்குளம்: பெண் வெட்டிக்கொலை.. சித்தப்பா கைது
தலக்குளம் பகுதியை சேர்ந்த அருண் பிரசாத் மனைவி சுபிதா (28) தனது சித்தப்பா ராஜேஷ் (45) என்பவரால் வெட்டி கொலை செய்யப்பட்டார். சுபிதாவுக்கு அதே பகுதியை சேர்ந்த அனிஸ் (30) என்பவருடன் ஏற்பட்ட நெருக்கத்தால் குடும்பத்தில் எதிர்ப்பு நிலவியது. நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட தகராறில், சுபிதா...
மார்த்தாண்டம்: கடையருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம்
மார்த்தாண்டம் அருகே மதிலகம் பகுதியில் உள்ள ஒரு பர்னிச்சர் கடை அருகே நேற்று 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்த நிலையில் காணப்பட்டார். அப்பகுதி மக்கள் கிராம நிர்வாக அலுவலர் புஷ்பராணியிடம் தகவல் தெரிவித்தனர். அவர் மார்த்தாண்டம் போலீசில் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு சென்ற...
வாவறை: உடைந்து கிடக்கும் போலீஸ் கண்காணிப்பு கேமரா
நித்திரவிளை அருகே வாவறை சந்திப்பில் உள்ள காவல் நிலையத்தில், வாகனங்களை கண்காணிக்க அமைக்கப்பட்ட அகன்ற திரை கண்காணிப்பு கேமரா பல நாட்களாக உடைந்து விழுந்த நிலையில் உள்ளது. இது போன்ற பல காவல் நிலையங்களிலும் கேமராக்கள் செயல்படாமல் உள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுக்க...
குமரி: ஓடும் ரயிலில் செல்போன் திருட்டு
ஹைதராபாத்தைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவர் தன்ராஜ், கன்னியாகுமரி சுற்றுலா சென்றபோது, மதுரை-புனலூர் ரயிலில் நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்தில் அவரது கைப்பை மற்றும் செல்போன் திருடு போனது. இதுகுறித்து தன்ராஜ் அளித்த புகாரின் பேரில், நாகர்கோவில் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஈத்தாமொழி: அண்ணன் மனைவியை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
ஈத்தாமொழி பகுதியைச் சேர்ந்த கௌரிஸ்வரி (48) என்பவர், தனது கணவரின் சகோதரர் ரவிக்குமார், அவரது மனைவி சோனியா மற்றும் மகன் பரத் ஆகியோரால் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது தாக்கப்பட்டார். வீடு தொடர்பாக சிவில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. காயமடைந்த கௌரிஸ்வரி...
மார்த்தாண்டம்: கோயில் பூசாரிக்கு மிரட்டல்; வாலிபர் கைது
இடைக்கோடு பகுதியைச் சேர்ந்த விஷ்ணு (25) என்ற கோயில் பூசாரி, இசக்கியம்மன் கோயிலில் பூஜை செய்து கொண்டிருந்தபோது, ஸ்ரீகுமார் (39) என்பவர் அவர் மீது செருப்பை வீசி, தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் மனமுடைந்த விஷ்ணு அளித்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார்...
களியக்காவிளை: சிவபார்வதி கோயிலில் சிவராத்திரி விழா துவக்கம்
களியக்காவிளை அருகே மகேஸ்வரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவபார்வதி கோயிலில் சிவராத்திரி திருவிழா நேற்று மாலை திருக் கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோவில் மடாதிபதி சுவாமி மகேஸ்வரானந்த சரஸ்வதி, கோவில் மேல்சாந்தி குமார் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர். பிப்ரவரி 8 அன்று லட்சத்தீபம், 14 அன்று ஆராட்டு, மற்றும்...













