Google search engine

மார்த்தாண்டம் அருகே வாகனம்  மோதி கொத்தனார் படுகாயம்

மார்த்தாண்டம் அருகே காட்டாத்துறை பகுதி பருத்திக் கோட்டுவிளை என்ற இடத்தைச் சேர்ந்தவர் ஸ்டீபன் மணி (62). கொத்தனார். இவர் நேற்று இரவு இரவிபுதூர்கடை - கருங்கல் சாலையில் குன்னம்பாறை என்ற பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையைக் கடக்க முயன்றுள்ளார். அந்த நேரம் அந்த வழியாக...

புதுக்கடை: தோட்டத்தில் சந்தன மரம் வெட்டிக் கடத்தியவர் கைது

புதுக்கடை அருகே தேங்காப்பட்டணம் பகுதியை சேர்ந்தவர் செல்ல ஜோணி (48). இவர் மரம் வெட்டும் தொழிலாளி. இவர் சுனைக்கரைக் காடு என்ற பகுதியில் உள்ள தனது தோட்டத்தில் சந்தண மரம் நட்டு வளர்த்து வந்தார். நேற்று காலை செல்ல ஜோனி தனது தோட்டத்துக்கு செல்லும் போது மர்ம...

அருமனை: சட்ட விரோதமாக தங்கி இருந்த வெளிநாட்டு வாலிபர்

அருமனை அருகே தனியாருக்கு சொந்தமான முந்திரி தொழிற்சாலை உள்ளது. இந்த முந்திரி ஆலையில் வெளிநாட்டைச் சேர்ந்த சிலர் எந்தவித அனுமதியும் இன்றி வந்துள்ளதாக குமரி மாவட்ட காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார் சம்பந்தப்பட்ட முந்திரி ஆலையில் சென்று விசாரணை நடத்தினர். இதில் மேற்கு...

திங்கள்சந்தை: கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

திங்கள்சந்தை அருகே உள்ள தலக்குளம் பகுதியை சேர்ந்தவர் ராஜ் (65) கூலித் தொழிலாளி. இவருக்கு மனைவியும் ஒரு மகள், 2 மகன்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. ராஜ் இளைய மகன் அர்ஜுன் என்பவர் வீட்டில் வசித்து வந்தார். ராஜூக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததாக...

மருத்துவமனையில் இருந்து ஏ.ஆர்.ரஹ்மான் டிஸ்சார்ஜ்!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நேற்று காலை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. பின்னர் மருத்துவர்களின் ஆலோசனைக்குப் பிறகு அவர் வீட்டுக்குத் திரும்பினார் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. முன்னதாக, அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால்...

நாகர்கோவிலில் ஹோலி பண்டிகை கொண்டாட்டம்

ஹோலி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஹோலிப் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர். நாகர்கோவில் மீனாட்சி கார்டன் பகுதியில் இன்று ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் கலர் பொடிகளை ஒருவருக்கொருவர் முகத்தில் தடவி தங்கள் மகிழ்ச்சியை...

நாகர்கோவிலில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

குமரி மாவட்ட அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் பி.எம்.எஸ். தொழிற்சங்கம் சார்பில் நேற்று (மார்ச் 14) கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. தனியார் முதலாளிகளுக்கு பஸ்களை இயக்க அனுமதி வழங்குவதை கைவிட வேண்டும், போக்குவரத்து கழகங்களுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் வகையில் தனியார் மினி பஸ்கள் இயக்கும்...

நாகர்கோவிலில் மின் சிக்கனம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

தமிழ்நாடு பகிர்மான கழகம் மற்றும் கன்னியாகுமரி மின் பகிர்மான வட்டம் ஆகியவை இணைந்து விவசாயிகளுக்கான மின் சிக்கனம், மின் திறன் மற்றும் மின் பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி நாகர்கோவிலில் நேற்று (மார்ச் 14) நடந்தது. கன்னியாகுமரி மின் மேற்பார்வை பொறியாளர் பத்மகுமார் தலைமை வகித்தார். உதவி செயற்பொறியாளர் வேலப்பன் வரவேற்றார்....

மாத்திரவிளை: எம். எல். ஏ. தொடங்கி வைத்த பயணிகள் நிழற்குடை

கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி, மத்திகோடு ஊராட்சிக்குட்பட்ட, மணலிக்காட்டுவிளை புனித தெரசம்மாள் குருசடி முன்புறம் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பழைய பயணிகள் நிழற்குடை ஒன்று இருந்தது. இந்த பழைய நிழற்குடையை மாற்றி மின் வசதியுடன் கூடிய புதிய நிழற்குடை அமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை...

பள்ளியாடி:   நாளை புகழ்பெற்ற சர்வ மத பிரார்த்தனை

மார்த்தாண்டம் அருகே பள்ளியாடி பகுதியில் பழைய பள்ளி அப்பா திருத்தலம் ஒன்று உள்ளது. நூற்றாண்டு பழமை வாய்ந்த புளிய மரத்தின் அருகில் உள்ள இந்த திருத்தலம் மும்மத அடையாளங்கள் உடன் அமைக்கப்பட்டுள்ள திருத்தலமாகும்.  இங்கு இந்துக்கள் விளக்கேற்றி, கிறிஸ்தவர்கள் மெழுகுவார்த்தி ஏற்றியும், முஸ்லிம்கள் தூபம் காட்டி அவரவர் முறைப்படி...