Google search engine
தெற்கு ஐரோப்பிய நாடான மேசடோனியாவில் இரவு நேர கேளிக்கை விடுதி ஒன்றில் நடந்த ஹிப் ஹாப் இசை நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட தீ விபத்தில் 50-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். இது குறித்து அந்நாட்டு ஊடகம் ஒன்று, “வடக்கு மேசடோனியாவின் கோக்கானி பகுதியில் உள்ள ஓர் இரவு விடுதியில் ஹிப் ஹாப் இசை நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட தீ விபத்தில் 51 பேர் உயிரிழந்தனர். இந்த இரவு விடுதி தலைநகர்...
“ஈரான் போர் தொடுக்காது. அதே நேரத்தில் யாரேனும் எங்களை அச்சுறுத்தினால் அதற்கு தக்க பதிலடி கொடுப்போம்.” என ஈரான் பாதுகாப்புப் படையின் தலைவர் ஹொசைன் சலாமி தெரிவித்துள்ளார். முன்னதாக, ஏமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சி படைக்கு ஈரான் ஆதரவு தரக்கூடாது என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்திருந்தார். ஏமனில் அமெரிக்க ராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் சுமார் 31 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கான உத்தரவை ட்ரம்ப் பிறப்பித்தார். இது குறித்து அவர்...
கனடாவின் 24-வது பிரதமராக மார்க் கார்னி பதவியேற்றுக் கொண்டார். கனடா நாட்டின் லிபரல் கட்சியின் அடுத்த தலைவராகவும், அந்நாட்டின் 24-வது பிரதமராகவும் கனடா வங்கியின் முன்னாள் தலைவரான மார்க் கார்னி அண்மையில் தேர்வு செய்யப்பட்டார். கடந்த ஜனவரியில் தனது பிரதமர் பதவியை ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா செய்தார். இதனையடுத்து லிபரல் கட்சியின் தலைமை பதவிக்கான போட்டியில் மார்க் கார்னி 1,31,674 வாக்குகளைப் பெற்றார். இது மொத்த வாக்குகளில் சுமார் 85.9 சதவீத...
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில் மீண்டும் காலதாமதம் ஏற்பட்டிருக்கிறது. அமெரிக்காவின் போயிங் நிறுவனம், அந்த நாட்டின் விண்வெளி அமைப்பான நாசா இணைந்து போயிங் ஸ்டார்லைனர் என்ற விண்கலத்தை உருவாக்கியது. இந்த புதிய விண்கலத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி வில்மோர் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 5-ம் தேதி சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்றனர். இருவரும் 10 நாட்கள் ஆய்வு...
“30 நாட்கள் போர் நிறுத்தம் என்ற அமெரிக்காவின் பரிந்துரையை நாங்கள் ஏற்கிறோம். ஆனால், அதற்கு முன்னர் சில பிரச்சினைகளைக் களைய வேண்டும்.” என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். முன்னதாக, சவுதி அரேபியாவில் அமெரிக்காவுடன் நடந்த பேச்சுவார்த்தையில் அந்நாடு முன்மொழிந்த 30 நாள் போர் நிறுத்தத்துக்கு உக்ரைன் ஒப்புக் கொண்டது. ரஷ்யாவுடன் உடனடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபடவும் உக்ரைன் சம்மதம் தெரிவித்திருந்தது. இந்த போர்நிறுத்த ஒப்பந்தம், நிலம், கடல் மற்றும்...
இரு நாடுகளுக்கு இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தத்தை தாமதப்படுத்தும் நிபந்தனைகளை முன்மொழிந்து, ரஷ்ய அதிபர் புதின் சூழ்ச்சி செய்து வருவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார். உக்ரைன் அதிபர் வொலாடிமிர் ஜெலன்ஸ்கி தனது எக்ஸ் பக்கத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள பதிவில், "இப்போது, போர் நிறுத்த யோசனைக்கு பதில் அளிக்கும் விதமாக ரஷ்ய அதிபர் புதினின் முன்தீர்மானிக்கக்கூடிய சூழ்ச்சியான பதிலைக் கேட்டிருக்கிறோம். இந்தத் தருணத்தில், அதை நிராகரிக்கக் கூட அவர் தயாராகலாம்....
பாகிஸ்தானில் ரயில் கடத்தல் சம்பவத்தில் தீவிரவாதிகள் 27 பேரை சுட்டுக் கொன்ற பாகிஸ்தான் ராணுவத்தினர், 155 பயணிகளை பத்திரமாக மீட்டுள்ளனர். பாகிஸ்தானின் குவெட்டா நகரில் இருந்து பெஷாவர் நகருக்கு நேற்று முன்தினம் காலை ஜாபர் எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயில் புறப்பட்டது. இந்த ரயில் பலுசிஸ்தான் மாகாணம், முஷ்கப் பகுதி சுரங்கப் பாதையில் வந்தபோது தண்டவாளம் வெடிவைத்து தகர்க்கப்பட்டது. இதன் காரணமாக ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது. அப்போது பலுச் விடுதலை...
சவுதி அரேபியாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், ஒரு மாத போர் நிறுத்தத்துக்கு உக்ரைன் சம்மதித்துள்ளதாகவும், இனி இந்த விஷயத்தில் முடிவு எடுக்க வேண்டியது ரஷ்யாதான் ’’ என அமெரிக்கா கூறியுள்ளது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சமீபத்தில் அமெரிக்கா சென்று அதிபர் ட்ரம்பை சந்தித்தபோது, ரஷ்யாவுடன் போர் நிறுத்தம், அமைதி பேச்சுவார்த்தை தொடர்பாக காரசார விவாதம் நடைபெற்றது. இதனால் உக்ரைன் குழு வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறியது. உக்ரைனுக்கு ஆயுத உதவியை உடனடியாக...
மொரிஷியஸ் நாட்டு சுதந்திர தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இருநாடுகள் இடையே 8 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மொரிஷியஸின் 57-வது சுதந்திர தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க பிரதமர் மோடி சென்றிருந்தார். தலைநகர் போர்ட் லூயிஸில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று சிறப்பு அணிவகுப்பை பார்வையிட்டார். இரு நாட்டு குழுவினர்...
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மகாணத்தில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து 190 பிணைக் கைதிகளை பாதுகாப்புப் படையினர் விடுவித்துள்ள நிலையில், இன்னும் குறைந்தது 250 பேர் பிணைக் கைதிகளாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் க்வெட்டாவில் இருந்து 9 பெட்டிகளுடனும் சுமார் 500 பயணிகளுடனும் கைபர் பக்துன்வா மாகாணத்தின் பெஷாவர் நகர் நோக்கி சென்றுகொண்டிருந்த ஜாஃபர் எக்ஸ்பிரஸை, போலான் மாவட்டத்தில் பலூச் விடுதலை...