ஆஸ்திரேலியாவின் போண்டி கடற்கரையில் யூத விடுமுறை கொண்டாட்டத்தில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் உயிரிழந்தனர். இந்தக் கொடூரமான துப்பாக்கிச் சூட்டுக்கு காரணம் பாகிஸ்தானைச் சேர்ந்த தந்தையும், மகனும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
சிட்னியின் போண்டி கடற்கரையில் யூத மத பண்டிகையான ஹனுக்கா கொண்டாட்ட நிகழ்வின் போது நேற்று மாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் 16 பேர் கொல்லப்பட்டனர். ஆஸ்திரேலிய அதிகாரிகள் இதனை திட்டமிட்ட யூத எதிர்ப்புத்...
ஜோர்டான் தலைநகர் அம்மான் சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடியை, அந்நாட்டு பிரதமர் ஜாபர் ஹசன் விமான நிலையத்துக்கே வந்து வரவேற்றார்.
ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமன் ஆகிய 3 நாடுகளுக்கான அரசுமுறைப் பயணத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கினார். முதல் பயணமாக, இன்று ஜோர்டான் தலைநகர் அம்மான் சென்றடைந்தார். இந்தியா - ஜோர்டான் இடையேயான நெருக்கமான உறவை பிரதிபலிக்கும் வகையில் அந்நாட்டு பிரதமர் ஜாபர் ஹசன், பிரதமர் மோடியை விமான நிலையத்துக்கே...
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது.
சிட்னி நகரின் போன்டி கடற்கரையில் யூதர்களின் வருடாந்திர ஹனுக்கா திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. மாலையில் பெண்கள், குழந்தைகள் என நூற்றுக்கணக்கான யூதர்கள் கூடியிருந்தனர். அப்போது இருவர் துப்பாக்கியால் சுட்டு கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். இதில் ஒரு தீவிரவாதி உட்பட 11 பேர் இறந்தனர்.
ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டார். இந்நிலையில், மேலும் 4 பேர் நேற்று உயிரிழந்தனர். இதையடுத்து...
‘ட்ரம்ப் தனது போக்கை மாற்றாவிட்டால் இந்தியாவின் நட்புறவை இழக்க நேரிடும்’ – சிட்னி காம்லாகர் எச்சரிக்கை
admin - 0
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது போக்கை மாற்றிக்கொள்ளாவிட்டால் இந்தியாவின் நடப்புறவை இழக்க நேரிடும் என்று கலிபோர்னியாவைச் சேர்ந்த ஜனநாயக கட்சி எம்.பி.சிட்னி காம்லாகர்-டோவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: இந்தியாவை நோக்கிய அமெரிக்க அதிபர் ட்ரம்பின் கொள்கை இருநாடுகளுக்கு இடையிலான நீடித்த நம்பிக்கை மற்றும் பரஸ்பர புரிதலுக்கு சேதத்தை ஏற்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது. இந்த விவகாரத்தில் ட்ரம்ப் தனது கடினமான போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்.
அப்படி மாற்றிக்கொள்ளாவிட்டால்...
பாகிஸ்தான் விமானப் படையின் எப்16 ரக போர் விமானங்களை மேம்படுத்த அமெரிக்க அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. பாகிஸ்தான் விமானப் படையில் எப்16 ரகத்தை சேர்ந்த 76 போர் விமானங்கள் உள்ளன.
இவை அமெரிக்க தயாரிப்பு போர் விமானங்கள் ஆகும். கடந்த 1990-ம் ஆண்டு முதல் எப்16 போர் விமானங்களுக்கு தேவையான உதிரி பாகங்கள், தொழில்நுட்பங்களை பாகிஸ்தானுக்கு வழங்க அமெரிக்கா மறுத்து வந்தது. இதன் காரணமாக பாகிஸ்தானின் பெரும்பாலான எப்16...
2023-ஆம் ஆண்டுக்கான அமைதி நோபல் பரிசை வென்ற மனித உரிமைப் போராளி நர்கெஸ் முகமதியை, ஈரானிய பாதுகாப்புப் படையினர் இன்று கைது செய்தனர்.
அண்மையில் காலமான ஒரு வழக்கறிஞரின் நினைவேந்தல் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஈரான் தலைநகர் டெஹ்ரானுக்கு நர்கெஸ் முகமதிசென்றபோது, இந்தக் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஈரான் அதிகாரிகள் நர்கெஸ் முகமதியை பலவந்தமாகப் பிடித்துச் சென்றதாக அவருடைய ஆதரவாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் பேசுபொருளாகியுள்ளது.
நர்கெஸ் முகமதி,...
குறைந்தபட்சம் 10 லட்சம் அமெரிக்க டாலர் கட்டணம் செலுத்தி விரைவாக விசா பெருவதற்கான கோல்டு கார்டு திட்டத்தை அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தொடங்கிவைத்தார்.
அமெரிக்காவில் வெளிநாட்டவர்கள் குடியேறுவதைக் கட்டுப்படுத்தவும், குடியுரிமை பெறுவதைக் கட்டுப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை அதிபர் ட்ரம்ப் எடுத்து வருகிறார். இதனால், அமெரிக்காவில் வசித்து வந்த இந்தியர்கள் உட்பட பல வெளிநாட்டினர் நாடு கடத்தப்பட்டனர். பல அமெரிக்க நிறுவனங்களில் முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்களும் வெளியேற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டனர்.
இந்நிலையில்,...
மியான்மரில் ராணுவத்துக்கும், கிளர்ச்சிக் குழுக்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், மருத்துவமனை மீது ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 34 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 80க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ரகைன் மாகாணத்தின் மிராக்-யூ நகரில் உள்ள அரசு பொது மருத்துவமனையை குறிவைத்து, ஆளும் மியான்மர் ராணுவத்தின் போர் விமானம் புதன்கிழமை இரவு வான்வழி தாக்குதல் நடத்தியதாக மியான்மர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அராக்கன் படை எனப்படும் கிளர்ச்சி...
பாதுகாப்பு, எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் இணைந்து செயல்படுவது குறித்து பிரதமர் மோடி – அதிபர் ட்ரம்ப் முக்கிய ஆலோசனை
admin - 0
எரிசக்தி, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் இணைந்து செயல்படுவது குறித்து பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொலைபேசியில் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்திய பொருட்களுக்கு அமெரிக்க அரசு முதலில் 25 சதவீத வரி விதித்தது. இதைத் தொடர்ந்து, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதாக குற்றம் சாட்டி கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதி இந்திய பொருட்களுக்கு மேலும் 25 சதவீத வரி விதிக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக இந்திய பொருட்களுக்கு அமெரிக்க...
ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்கு உட்பட்டோருக்கு சமூக வலைதள தடை – ஆதரவும் எதிர்ப்பும் வலுப்பது ஏன்?
admin - 0
‘அவர்கள் குழந்தைகளாகவே இருக்கட்டும்’ (Let Them Be Kids) என்ற தலைப்பில் கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் ஒரு மிகப் பெரிய பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு சர்வதேச கவனத்தை ஈர்த்தது. அதன் எதிரொலியாகத்தான் இப்போது, ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்த தடை செய்யும் சட்டம் அமலாகியுள்ளது.
கடந்த ஆண்டு நடந்த போராட்டங்களைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் 16 வயதுக்கு உட்பட்டோர் சமூக வலைதளப் பயன்படுத்துவதற்கான தடைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
ஆஸ்திரேலியாவில்...