அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது முதல் முறை பதவிக்காலத்தில் இருந்தே பயணத் தடை கொள்கையை அறிமுகப்படுத்தி வருகிறார். அந்த வகையில், ட்ரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்ற பிறகு தற்போது 12 நாடுகளுக்கு அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு தடை விதித்துள்ளார். அதற்கான பிரகடனத்தில் புதன்கிழமை அதிபர் கையெழுத்திட்டுள்ளார்.
எந்த நாடுகள்? - 12 நாடுகள் அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு முழு நுழைவுத் தடைகளை எதிர்கொள்கின்றன. அவை: ஆப்கானிஸ்தான், மியான்மர் (பர்மா), சாட், காங்கோ குடியரசு,...
காசாவில் உடனடி, நிரந்தர போர் நிறுத்தம் கோரி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வந்தது அமெரிக்கா
admin - 0
காசாவில் உடனடி மற்றும் நிரந்தர போர் நிறுத்தத்தை அமல்படுத்த கோரி, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் வீட்டோ அதிகாரம் பெற்றுள்ள அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது. இதற்கு மற்ற உறுப்பு நாடுகள் ஆதரவு தெரிவித்தன.
இஸ்ரேல் - காசா இடையே சில மாதங்களுக்கு முன் தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டு கைதிகள் மற்றும் பிணைக் கைதிகள் பரஸ்பரம் விடுவிக்கப்பட்டு வந்தனர். எஞ்சியுள்ள 58 பிணைக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் மறுத்ததால், இஸ்ரேல்...
அமெரிக்கா – சீனா வரி தொடர்பான பேச்சு தடைபட்ட நிலையில் ஜி ஜின்பிங், ட்ரம்ப் தொலைபேசியில் ஆலோசனை
admin - 0
அமெரிக்கா - சீனா இடையே வரி தொடர்பான பேச்சு தடைபட்டிருந்த நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று தொலை பேசியில் பேசினார்.
அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றபின், அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் வரிவிதிப்பில் நியாயமாக இல்லை என குற்றம்சாட்டினார். அமெரிக்க பொருட்களுக்கு பல நாடுகள் அதிக வரி விதிப்பதாக குற்றம் சாட்டிய அதிபர் ட்ரம்ப் பரஸ்பர வரி விதிக்கப்போவதாக கூறினார். சீனப் பொருட்களுக்கான...
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் - தொழிலதிபர் எலான் மஸ்க் இடையேயான மோதல் பொதுவெளியில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.
“எலான் மஸ்க் உடன் எனக்கு சிறந்த நட்பு ரீதியிலான உறவு இருந்தது. ஆனால், இனியும் நாங்கள் அப்படி இருப்போமோ, இதை தொடருவோமோ என எனக்கு தெரியவில்லை. மஸ்க் மீது நான் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளேன்” என ‘தி ஓவல்’ அலுவலகத்தில்...
துருக்கியில் 5.8 ரிக்டரில் நிலநடுக்கம்: அச்சத்தில் வெளியேறியபோது சிறுமி உயிரிழப்பு; 70 பேர் காயம்
admin - 0
துருக்கியில் இன்று அதிகாலை 2.17 மணிக்கு 5.8 ரிக்டரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தொடர்ச்சியாக நிலவிய அச்சம் காரணமாக வீடுகளை விட்டு வெளியேறியபோது, 14 வயது சிறுமி உயிரிழந்தார். சுமார் 70 பேர் காயமடைந்தனர்.
துருக்கியின் மேற்குப் பகுதியில் மத்திய தரைக்கடலை ஒட்டிய விடுமுறை வாசஸ்தலமான மர்மாரிஸுக்கு அருகில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து துருக்கியின் பேரிடர் மற்றும் அவசரநிலை மேலாண்மைத் தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "மத்திய...
தீவிரவாத எதிர்ப்பு குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு மலேசியா வலுவான ஆதரவு தெரிவித்துள்ளது. பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை உலக நாடுகளிடம் எடுத்துரைக்க எம்.பி.க்கள் குழுவினர் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்.
இதில் ஐக்கிய ஜனதா தளம் எம்.பி. சஞ்சய் ஜா தலைமையிலான குழு மலேசியாவில் முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளை சந்தித்தது.
அப்போது தேசிய ஒற்றுமைக்கான துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி, வன்முறைக்கு...
சிறு சிறு பகுதிகளாக உடைத்துவிடுவேன்: இந்தியாவை மிரட்டிய ஜெய்ஷ் தீவிரவாதி பாகிஸ்தானில் மர்ம மரணம்
admin - 0
இந்தியாவுக்கு மிரட்டல் விடுத்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதி பாகிஸ்தானில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
இந்தியாவை சிறு சிறு பகுதிகளாக உடைத்துவிடுவேன் என ஜெய்ஷ்-இ-முகமது (ஜெஇஎம்) தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த அப்துல் அஜிஸ் கடந்த மாதம் மிரட்டல் விடுத்திருந்தார். இந்த சூழ்நிலையில், பாகிஸ்தானின் பஹவல்பூரில் அப்துல் அஜிஸ் மர்மமான முறையில் இறந்து கிடந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய சமூக ஊடகங்கள் இதை உறுதிப்படுத்தி இருப்பதுடன், பஹவல்பூரில் அஜிஸ் உடலுக்கு...
இந்தியா நீரோட்டத்தை கட்டுப்படுத்தியதன் காரணமாக செனாப் நதி நீர் வரத்து திடீரென குறைந்துள்ளது. இதனால், பாகிஸ்தானில் உள்ள அணைகள் வேகமாக வறண்டு வருகின்றன. பாகிஸ்தான் விவசாயிகளின் பயிர் விதைப்பு பணிகளில் இது கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தானின் இரண்டு முக்கிய அணைகளாக ஜீலம் நதியின் குறுக்கே உள்ள மங்களா மற்றும் சிந்து நதியின் குறுக்கே உள்ள தர்பேலா ஆகியவை உள்ளன. இந்த அணைகளில் உள்ள நீரின் அளவு...
‘அணுசக்தியின் பேரழிவை அமெரிக்கா தடுத்தது’ – இந்தியா – பாக். போரை நிறுத்தியதாக ட்ரம்ப் பேச்சு
admin - 0
இந்தியா - பாகிஸ்தான் மோதலை தடுத்ததில் அமெரிக்காவின் பங்கு குறித்தும், இதன் மூலம் அணுசக்தியின் பேரழிவு தடுக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளார்.
தொழிலதிபர் எலான் மஸ்க் உடன் தி ஓவல் அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை டொனால்டு ட்ரம்ப் சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்தது: “இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதலை தடுத்தது நாங்கள்தான். அது நடக்காமல் போயிருந்தால் மிகப்பெரிய அணுசக்தி பேரழிவாக மாறி இருக்கலாம் என்று நான் நம்புகிறேன்.
ஒருவருக்கொருவர் சுட்டுக்...
உலக நாடுகள் மீதான வரிவிதிப்பு: ட்ரம்பின் நடவடிக்கைக்கு அமெரிக்க வர்த்தக நீதிமன்றம் தடை – பின்னணி என்ன?
admin - 0
உலக நாடுகள் இடையேயான வர்த்தகத்துக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடுமையான வரி உயர்வை அறிவித்தார். அவரின் இந்த தன்னிச்சையான நடவடிக்கைக்கு அமெரிக்க சர்வதேச வர்த்தக நீதிமன்றம் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது. இது, ட்ரம்ப் நிர்வாகத்துக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்தியா, சீனா, ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட நாடுகளுக்கு கடுமையான வரி விதிப்பை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்தார். குறிப்பாக, வர்த்தக மோதலில் ஈடுபட்ட சீனாவுக்கு...










