அமெரிக்கா மீது சீனா விதித்த 34 சதவீத வரியை திரும்பப் பெறாவிட்டால் 50 சதவீத கூடுதல் வரி சீனா மீது விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் அமெரிக்கா தவறு மேல் தவறு செய்வதாகவும், இது போன்ற அச்சுறுத்தல்களுக்கு அஞ்சப்போவதில்லை. இறுதிவரை போராடுவோம் என்றும் சீனா தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், அமெரிக்க பொருட்களின் மீது அதிக இறக்குமதி வரி...
அமெரிக்கப் பொருட்கள் மீது விதித்த 34 சதவீத பதிலடி வரியை திரும்பப் பெற சீனாவுக்கு விதித்த 24 மணி நேர கெடு முடிந்த நிலையில், சீனா மீது 104% வரி விதிக்கப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
சீனா தனது 34% வரி அதிகரிப்பை திரும்பப் பெறவில்லை என்றால், மறுநாள் அதாவது, ஏப்ரல் 9-ம் தேதி முதல் சீனா மீது 50% கூடுதல் வரிகளை அமெரிக்கா விதிக்கும். கூடுதலாக, சீனாவுடனான அனைத்து பேச்சுவார்த்தைகளும்...
அமெரிக்கா மீது சீனா விதித்த 34 சதவீத வரியை திரும்பப் பெறாவிட்டால் 50 சதவீத கூடுதல் வரி சீனா மீது விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து ட்ரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் “சீனா ஏற்கனவே நிர்ணயித்துள்ள சட்டவிரோத வரிகளுடன் கூடுதலாக 34% பழிவாங்கும் வரிகளை விதித்தது. ஏப்ரல் 8-ம் தேதிக்குள் சீனா தனது 34% வரி அதிகரிப்பை திரும்பப் பெறவில்லை...
அபுதாபியில் உள்ள புகழ்பெற்ற இந்து கோயிலில் ராம நவமி மற்றும் சுவாமி நாராயண் ஜெயந்தி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் (யுஏஇ) அபுதாபில் பொச்சசன்வாசி ஸ்ரீ அக்சர் புருஷோத்தம் சுவாமிநாராயண் கோயில் (பிஏபிஎஸ் கோயில்) உள்ளது. இது மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கம், பக்தி மற்றும் உலகளாவிய இந்து பெருமையின் அடையாளமாக விளங்குகிறது.
இந்நிலையில், பிஏபிஎஸ் கோயிலில் ராம நவமி மற்றும் சுவாமி நாராயண் ஜெயந்தி விழா நேற்று முன்தினம்...
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திங்கள்கிழமை (ஏப்.07 ) வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது, உலகையே உலுக்கி வரும் அமெரிக்காவின் கடுமையான வரிவிதிப்புகளை குறைக்குமாறு நெதன்யாகு கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பாலஸ்தீனம், ஹமாஸ், ஈரான் உடனான பதற்றமான சூழல் குறித்தும் இரு நாட்டு தலைவர்களும் உரையாடியதாக தெரிகிறது.
இந்த சந்திப்பின் போது பேசிய நெதன்யாகு, “மீண்டும் ஒருமுறை என்னை வெள்ளை மாளிகைக்கு...
உலக நாடுகளுக்கு அதிக அளவில் வரி விதித்த ட்ரம்பை கண்டித்து அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் பேரணி
admin - 0
அமெரிக்க அதிபரின் பொருளாதார கொள்கைகளுக்கு உலக அளவில் எதிர்ப்பு வலுத்து வருகிறது. அமெரிக்கா மட்டுமின்றி ஐரோப்பிய ஒன்றியம் உட்பட பல நாடுகளிலும் ட்ரம்புக்கு எதிராக முக்கிய நகரங்களில் பல்லாயிரக்கணக்கானோர் ஒன்று கூடி பேரணி நடத்தி வருகின்றனர்.
வர்த்தக வரி விதிப்பு, அரசுப் பணிகளில் ஆட்குறைப்பு, மக்களின் சுதந்திரத்தை பறிக்கும் நடவடிக்கைகளில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எல்லை மீறி செயல்படுவதாக கூறி, வாஷிங்டன், நியூயார்க், ஹுஸ்டன், ப்ளோரிடா, கொலராடோ, லாஸ்...
அமெரிக்காவுக்கு வரும் வெளிநாட்டுப் பொருட்களுக்கு வரி விகிதங்களை உயர்த்தி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பால் வெள்ளிக்கிழமை அமெரிக்க பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்தது. இது குறித்த கேள்விக்குப் பதிலளித்த ட்ரம்ப், “எதையாவது சரி செய்ய வேண்டுமென்றால் சில நேரங்களில் மருந்து அவசியம் தானே” என்று தனது வரிவிதிப்பு நடவடிக்கையை நியாயப் படுத்திப் பேசியுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை ஃப்ளோரிடாவில் கோல்ஃப் விளையாடிவிட்டு வாஷிங்டன்னுக்கு திரும்பிய ட்ரம்ப் விமானத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி...
பென்குயின்கள் வாழும் தீவுகளுக்கு 10% வரி விதிப்பு: நகைச்சுவை மீம்ஸ்களாக வைரலாகும் ட்ரம்ப் உத்தரவு
admin - 0
அன்டார்டிகாவில் பென்குயின்கள் வாழும் இரு தீவுகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் 10 சதவீத வரி விதித்துள்ளார். இதுதொடர்பான நகைச்சுவை 'மீம்ஸ்கள்' சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
அமெரிக்க பொருட்கள் மீது அதிக இறக்குமதி விதிக்கும் நாடுகளுக்கு அதே அளவு பரஸ்பர வரி விதிக்கப்படும் என்று அதிபர் ட்ரம்ப் அறிவித்திருந்தார். இதன்படி 180-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கான வரி விகிதங்களை அதிபர் ட்ரம்ப் நேற்று முன்தினம் வெளியிட்டார்.
இந்த பட்டியலில் அன்டார்டிகாவில்...
கனடாவில் தலைநகருக்கு அருகே இந்தியர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கனடாவின் ஒட்டாவா நகருக்கு அருகில் இந்தியர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்டதாகவும், சந்தேக நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளதாகவும் அந்நாட்டிற்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஒட்டாவா அருகே உள்ள ராக்லேண்டில் இந்தியர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்தது எங்களுக்கு...
உலக நாடுகளின் மீது பரஸ்பர வரி விதிப்பை அறிமுகம் செய்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப். இது தொடர்பாக எந்த நாட்டுக்கு அமெரிக்கா எவ்வளவு வரி விதிக்கிறது என்பதை அவர் விவரித்தார். இதில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 26 சதவீதம் பரஸ்பர வரி விதிப்பதாக அவர் அறிவித்துள்ளார்.
“இந்த தருணத்துக்காக நாம் நெடுநாள் காத்திருந்தோம். ஏப்ரல் 2, 2025 அமெரிக்க தொழில்துறை மறுபிறவி எடுத்த நாளாக வரலாற்றில்...










