பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் 37% குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதில்லை என்ற விவரத்தை அம்மாகாண கல்வித் துறை தெரிவித்துள்ளது.
கைபர் பக்துன்வா மாகாண கல்வித் துறை, அம்மாகாணத்தின் பள்ளிக் கல்வியின் நிலை குறித்த அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டது. அதில், அம்மாகாணத்தின் அடிப்படைக் கல்வியின் நிலை குறித்த பல்வேறு தரவுகள் வெளியாகி உள்ளன. அந்த அறிக்கையில், "கைபர் பக்துன்வாவில் 49.20 லட்சம் குழந்தைகள் அதாவது, 37% குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாமல் உள்ளனர்.
காஷ்மீரை...
இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு பாகிஸ்தான் தான் விரும்பும் நேரத்திலும், இடத்திலும் இந்த தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கும் என்று அந்நாட்டு ராணுவ செய்தி தொடர்பாளர் அகமது ஷரீப் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் வான்வழி தாக்குதலை தொடங்கியுள்ளது இந்திய ராணுவம். பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக மத்திய பாதுகாப்புத் துறை...
பஹல்காமில் நடந்த தீவிரவாதிகளின் கொடூரமான தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து பாகிஸ்தான் நாட்டுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கடும் கண்டனம் தெரிவித்தது.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த மாதம் 22-ம் தேதி தீவிரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். இதில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இந்தத் தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா- பாகிஸ்தான் இடையே போர்ப்பதற்றம் அதிகரித்து வருகிறது. இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நேற்று முன்தினம்...
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகளின் 9 முகாம்கள் மீது ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா வான்வழி தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையிலான தற்போதைய சூழல் குறித்தும், ஆபரேஷன் சிந்தூர் குறித்தும் தனது கருத்தை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
“இது ஒரு அவமானம். ஓவல் அலுவலகத்தை அடையும்போது இந்த தகவலை அறிந்தோம். கடந்த காலத்தை வைத்து பார்க்கும்போது ஏதோ ஒன்று நடக்கப்...
அமெரிக்காவின் எப்பிஐ ஏஜென்ட் என்று கூறி நாடகமாடி 78 வயது மூதாட்டியை ஏற்ற முயன்றதாக இந்திய மாணவர் ஒருவர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவைச் சேர்ந்தவர் கிஷண் குமார் சிங். 21 வயதாகும் கிஷண், அமெரிக்காவில் குடியேறி படித்து வருகிறார். கடந்த 2024 முதல் ஒஹியோ மாகாணம் சின்சினாட்டி நகரில் கிஷண் வசித்து வருகிறார்.
இந்நிலையில் எப்பிஐ போலீஸ் அதிகாரி என்று கூறி, அமெரிக்காவைச் சேர்ந்த 78 வயது மூதாட்டியை கிஷண்...
பாகிஸ்தானில் உள்நாட்டு கலவரம் வெடிக்கும் சூழல்: ராணுவத்துக்கு ஆதரவு அளிக்க பொதுமக்கள் மறுப்பு
admin - 0
இந்தியாவுக்கு எதிராக செயல்படும் பாகிஸ்தான் ராணுவத்துக்கு ஆதரவு அளிக்க பொதுமக்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் அங்கு உள்நாட்டு கலகம் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில், பாகிஸ்தானில் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில், இந்தியாவுடனான போர் பதற்றம் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படுகிறது.
அப்போது இந்த விவகாரத்தில் ராணுவத்தின் செயல்பாட்டுக்கு ஆதரவு அளிக்க அவர்கள் மறுத்துவிட்டனர். இது...
இந்தியாவுடன் பதற்றம் நிலவும் சூழலில் பாகிஸ்தான் ராணுவம் நேற்று 2-வது முறையாக ஏவுகணை பரிசோதனை நடத்தியது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாக இந்தியா குற்றம்சாட்டி உள்ளது. தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பிரதமர் நரேந்திர மோடி முப்படைகளுக்கு முழு அதிகாரம் வழங்கினர். இதனால் இந்தியா, பாகிஸ்தான் இடையே...
அமெரிக்காவிலுள்ள அல்காட்ராஸ் என்று அழைக்கப்படும் பழமையான சிறையை மீண்டும் திறக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
கலிபோர்னியா மாகாணத்திலுள்ள கரையோர தீவு ஒன்றில் அமைந்துள்ளது இந்த அல்காட்ராஸ் சிறை. இந்நிலையில் இந்த பழைய சிறைச்சாலை அல்காட்ராஸை மீண்டும் திறந்து விரிவுபடுத்த உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நேற்று தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவரது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "அமெரிக்கா நீண்டகாலமாக கொடிய மற்றும் வன்முறை குற்றவாளிகளால் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது...
சிங்கப்பூர் பொதுத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ள லாரன்ஸ் வோங்குக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சிங்கப்பூர் பொதுத் தேர்தலில், ஆளும் மக்கள் செயல் கட்சி 97 தொகுதிகளில் போட்டியிட்டு 87 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் தக்கவைத்துள்ளது. லாரன்ஸ் வோங் மீண்டும் பிரதமர் ஆகிறார்.
அவருக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் அவர்கள் வெளியிட்டுள்ள...
வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் படங்களுக்கு அமெரிக்காவில் 100 சதவித கட்டண வரியை அறிவித்துள்ளார் அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப். அமெரிக்காவுக்கு வெளியே தயாரிக்கப்படும் திரைப்படங்கள் தேசிய பாதுகாப்பு மற்றும் பிரச்சார பாணியில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
அமெரிக்க திரைப்படத் துறையை மீட்டெடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கையை அவர் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளி்யாகியுள்ளது. இந்த செயல்முறையை தொடங்க வர்த்தகத் துறை மற்றும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதிக்கு அவர் அங்கீகாரம் அளித்துள்ளார். இது தொடர்பாக...










