Google search engine
அமெரிக்க ராணுவ தலைமை அலுவலகமான பென்டகன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அமெரிக்கா மற்றும் இந்தியா இடையே பாதுகாப்பை பலப்படுத்துவது தொடர்பாக ஹெக்செத் மற்றும் ராஜ்நாத் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதையடுத்து 10 ஆண்டுக்கான அமெரிக்க - இந்திய பாதுகாப்பு கட்டமைப்பில் இருவரும் கையெழுத்திட ஒப்புக்கொண்டனர். இவ்வாண்டு நடைபெறவுள்ள சந்திப்பின்போது இந்த பாதுகாப்பு கட்டமைப்பு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இந்​தி​யா​வுக்​கான அமெரிக்க பாது​காப்பு தளவாட விற்​பனை மற்​றும் இரு நாடு​களுக்​கும் இடையே நெருக்​க​மான...
டிரினிடாட்&டொபாகோ நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டின் பிரதமர் கமலா பெர்சாத்-பிஸ்ஸேசருக்கு மகாகும்பமேளாவின் புனித நீரையும், ராமர் கோயிலின் மாதிரி நினைவுச் சின்னத்தையும் பரிசாக வழங்கினார். அரசுமுறை பயணமாக டிரினிடாட் & டொபாகோ நாட்டுக்குச் சென்றுள்ள பிரதமர் மோடியை, பியார்கோ சர்வதேச விமான நிலையத்தில் அந்நாட்டின் பிரதமர் கமலா பெர்சாத்-பிஸ்ஸேசர் மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர். இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘பிரதமர் நரேந்திர மோடி டிரினிடாட் & டொபாகோ...
கம்போடிய செனட் தலைவர் ஹன் சென் உடனான தொலைபேசி உரையாடல் கசிந்த விவகாரம் தொடர்பாக தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ராவை அந்நாட்டு நீதிமன்றம் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. அண்டை நாடான கம்போடியா எல்லையில் நிலவும் பதட்டங்களைத் தணிக்கும் நோக்கில், அந்நாட்டின் முன்னாள் பிரதமரும் கம்போடிய செனட் தலைவருமான ஹன் சென் உடன், தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ரா தொலைபேசியில் உரையாடினார். அப்போது, ஹன் சென்னை சமாதானப்படுத்தும் நோக்கில், தங்கள் நாட்டு...
உலகின் ‘நம்பர் 1’ பணக்காரரும் டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ-வுமான எலான் மஸ்க்கை அமெரிக்காவில் இருந்து நாடு கடத்துவது தொடர்பான பத்திரிகையாளர் கேள்விக்கு ‘அது குறித்து பார்க்க வேண்டும்’ என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதில் அளித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் எலான் மஸ்க் என இருவரும் உற்ற நண்பர்களாக இருந்தனர். அதிபர் தேர்தலில் ட்ரம்ப் தரப்புக்கு நேரடியாக உதவி இருந்தார் மஸ்க். அந்த நட்புறவு அண்மையில்...
மானி​யத்தை ரத்து செய்​தால் எலான் மஸ்க் தான் பிறந்த தென்​னாப்​பிரிக்கா​வுக்கு திரும்​பிச் செல்ல நேரிடும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்​சரிக்கை விடுத்​துள்​ளார். அமெரிக்​கா​வின் அதிப​ராக, டொனால்டு ட்ரம்ப் 2-வது முறை​யாக கடந்த ஜனவரி மாதம் பொறுப்​பேற்​றார். இதையடுத்​து, அரசின் செல​வினங்​களை குறைப்​ப​தற்​காக தொழில​திபர் எலான் மஸ்க் தலை​மை​யில் அரசு செயல்​திறன் துறையை (டிஓஜிஇ) உரு​வாக்​கி​னார். அரசு ஊழியர்​களை குறைப்​பது, மானிய ரத்து உட்பட செலவு குறைப்பு தொடர்​பான...
 ‘காசாவில் 60 நாள் போர்நிறுத்தத்தை இறுதி செய்வதற்கான நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது. போரை முடிவுக்குக் கொண்டுவர அனைத்து தரப்பினருடனும் இணைந்து நாங்கள் பணியாற்றுவோம்’ என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்தார் இதுகுறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், “எனது பிரதிநிதிகள் இன்று காசா தொடர்பாக இஸ்ரேலியர்களுடன் பயனுள்ள சந்திப்பை நடத்தினர். காசாவில் 60 நாள் போர் நிறுத்தத்தை இறுதி செய்வதற்கு தேவையான நிபந்தனைகளுக்கு...
வங்கதேசத்தில் இந்து பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்ட வழக்கில் உள்ளூர் அரசியல்வாதி உட்பட 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். பாதிக்​கப்​பட்ட பெண்​ணுக்கு உரிய நீதி வழங்​க​வும், குற்​ற​வாளி​கள் மீது நேரடி​யாக நடவடிக்கை எடுக்​க​வும் வலி​யுறுத்தி டாக்கா பல்​கலைக்​கழக மாணவர்​கள் நேற்று மிகப்​பெரிய போ​ராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். இந்த சம்​பவம் நாடு முழு​வதும் அதிர்​வலைகளை ஏற்​படுத்​தி​யுள்​ளது. இதுகுறித்து குமிலா மாவட்ட காவல் துறை தலை​வர் நஸிர் அகமது கான் கூறிய​தாவது:...
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் கடவுளின் எதிரிகள் என்று அறிவித்து, அவர்களுக்கு எதிராக ஈரான் மதகுரு அயதுல்லா மகரேம் ஷிராசி பத்வா பிறப்பித்துள்ளார். பத்வா என்பது மத குருக்களால் வழங்கப்படும் மத தீர்ப்பு என்று அழைக்கப்படுகிறது. மேலும், “ட்ரம்ப் மற்றும் நெதன்யாகு சந்தேகத்திற்கு இடமின்றி பழிவாங்கப்படுவார்கள்.” என்றும் தெரிவித்துள்ளார். ஈரான் மதகுரு அயதுல்லா நாசர் மகரேம் ஷிராசி அரபு மொழியில் வெளியிட்ட...
2019 ஆம் ஆண்டு இந்திய விமானி அபிநந்தனின் ஜெட் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட பின், அவரை சிறைப்பிடித்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரி மேஜர் சையத் மொய்ஸ் அப்பாஸ் ஷா (37), தலிபான் தீவிரவாதிகளுடனான மோதலில் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது இறுதிச் சடங்கில் பாகிஸ்தான் ராணுவத் தலைவர் அசிம் முனீர் கலந்து கொண்டார். ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகிலுள்ள தெற்கு வசிரிஸ்தானின் சரரோகா பகுதியில் தலிபான் தீவிரவாதிகளுடனான மோதலில் மேஜர் சையத் மொய்ஸ் அப்பாஸ்...
காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் வான்வழித் தாக்குதல்களில் 21 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். காசா நகரத்தின் ஷேக் ரத்வான் புறநகரில் இடம்பெயர்ந்த குடும்பங்கள் வசிக்கும் ஒரு பள்ளியின் மீது இஸ்ரேல் இன்று (ஜூன் 26) நடத்திய வான்வழித் தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர். அதேபோல கான் யூனிஸின் தெற்கில் உள்ள ஒரு முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர். மத்திய காசாவில் உள்ள ஒரு முக்கிய...