மேற்கு ஆசி​யா​வில் நில​வும் போர் பதற்றங்களுக்கு மத்​தி​யில் மேலும் 2 இந்திய எரிவாயு கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து வந்து கொண்டிருக்கின்றன. அமெரிக்​கா, இஸ்​ரேல், ஈரான் போர் காரண​மாக ஹார்​முஸ் நீரிணை வழி​யாக சரக்கு கப்​பல் போக்​கு​வரத்து முடங்கி உள்​ளது. இதனால், இந்​தியா உள்​ளிட்ட நாடு​களில் திர​வ​மாக்​கப்​பட்ட பெட்​ரோலிய எரி​வாயு (எல்​பிஜி) தட்​டுப்​பாடு ஏற்​பட்​டுள்​ளது. இந்த சூழ்​நிலை​யில், இந்​திய அரசு ஈரான் அரசுடன் பேச்​சு​வார்த்தை நடத்​தி​யதன் மூலம் 2 எரி​வாயு...
ஈ​ரான் மீது 5 நாட்​கள் தாக்​குதல் நடத்த மாட்டோம். கடந்த இரு நாட்​களாக ஈரானுடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடை​பெற்று வரு​கிறது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஆனால், பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை என்று ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்​கா, இஸ்​ரேல் கூட்​டுப் படைகள் மற்​றும் ஈரான் ராணுவத்துக்கு இடையே கடந்த பிப்​ர​வரி 28-ம் தேதி முதல் போர் நடை​பெற்று வரு​கிறது. இந்த போரின் எதிர்​விளை​வாக ஹார்​முஸ் ஜலசந்தி பகுதியில்...
அமெரிக்​கா​வின் நியூ​யார்க் நகரில் உள்ள லாகார்​டியா சர்​வ​தேச விமான நிலை​யத்​தில், தரையிறங்கிய ஏர் கனடா எக்​ஸ்​பிரஸ் பயணி​கள் விமானம் அங்கு நின்​றிருந்த தீயணைப்பு வாக​னத்​தின் மீது மோதி விபத்​துக்​குள்​ளானது. இந்த விபத்​தில் விமானத்தின் முதன்மை விமானி மற்​றும் துணை விமானி ஆகிய இரு​வர் உயி​ரிழந்​தனர். இதுகுறித்து விமான நிலைய வட்​டாரங்​கள் கூறிய​தாவது: கனடா​வின் மாண்ட்​ரியல் நகரில் இருந்து 72 பயணி​கள் மற்​றும் 4 ஊழியர்​களு​டன் புறப்​பட்ட ‘ஏர் கனடா எக்​ஸ்​பிரஸ்'...
மேற்கு ஆசிய போர் காரணமாக, நூற்றுக்கணக்கான கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் காத்துக் கிடக்கின்றன. இதனால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது. இதை குறைக்க ஈரான் மீதான தடையை ஒரு மாத காலத்துக்கு அமெரிக்கா நீக்கியது. தற்போது நட்பு நாடுகளின் எண்ணெய்க் கப்பல்களை மட்டும் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க ஈரான் அனுமதிக்கிறது. இதற்கு கட்டணமாக ரூ.18.8 கோடி வசூலிக்க ஈரான் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேநேரம்...
இந்​தி​யா, ஆஸ்​திரேலிய அணி​கள் மோதும் கிரிக்​கெட் டெஸ்ட் தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்​கும் என்று கிரிக்​கெட் ஆஸ்​திரேலி​யா (சிஏ) அறிவித்​துள்​ளது. இரு நாடு​களிடையே 5 போட்​டிகள் கொண்ட டெஸ்ட் தொட​ராக இது இருக்​கும். மேலும் இந்​தத் தொடர் மார்ச்சில் நிறைவடையும். வரும் ஆகஸ்​டில் வங்​க தேசத்​துடன் 2 டெஸ்ட் போட்​டிகளி​லும், அக்​டோபரில் தென் ஆப்​பிரிக்கா​வுடன் 3 டெஸ்ட் போட்டிகளி​லும், டிசம்​பர் முதல் 2027 ஜனவரி வரை நியூஸிலாந்​துடன்...
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் செல்ல அனுமதிப்பது குறித்த தனது கெடுபிடியை ஈரான் தளர்த்தியுள்ளது. எதிரி நாடுகளுடன் தொடர்புடைய கப்பல்கள் தவிர, மற்ற அனைத்து கப்பல்களுக்கும் இந்த நீர்வழிப்பாதை திறந்தே இருக்கும் என்று ஐ.நா.வின் ஈரான் பிரதிநிதி தெரிவித்தார். முன்னதாக, 48 மணி நேரத்திற்குள் இந்த ஹார்முஸ் ஜலசந்தி முழுமையாகத் திறக்கப்படாவிட்டால் ஈரானிய மின் உற்பத்தி நிலையங்களைத் தாக்கி அழிப்போம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கெடு விதித்திருந்தார்....
‘‘ஹார்முஸ் ஜலசந்தி பகுதியை நாளை காலைக்குள் முழுமையாக திறக்காவிட்டால், ஈரானின் மின் நிலையங்களைத் தகர்ப்போம்’’ என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ‘‘அமெரிக்கா தாக்கினால் அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்க மையங்கள் மீது பதிலடி தாக்குதல் நடத்தப்படும்’’ என்று ஈரானும் அறிவித்துள்ளதால் மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடந்த மாதம் கெடு விதித்திருந்தார். அதற்கு...
கடந்த மார்ச் 1-ம் தேதி அமெரிக்க விமானப்படையின் 3 எப்​-15 இ ரக போர் விமானங்​களை குவைத்வான் பாது​காப்பு ஆயுதங்​கள் தவறு​தலாக சுட்டு வீழ்த்தின. சில நாட்​களுக்கு முன்பு அமெரிக்க விமானப்​படை​யின் அதி நவீன எப்​-35 போர் விமானத்தை தாக்​கிய​தாக ஈரான் கூறியது. இந்த விமானம் அமெரிக்க விமானப்​படை தளத்​தில் அவசர​மாக தரையிறங்​கிய​தாக கூறப்​பட்​டது. இந்​நிலை​யில் ஹார்​முஸ் தீவு அருகே எதிரி நாட்​டின் எப்​-15 ரக போர் விமானத்தை சுட்டு...
​​பாகிஸ்​தானில் லஷ்கர்​-இ-தொய்பா தீவிர​வாத அமைப்​பின் முக்​கி​யத் தளப​தி​யான பிலால் ஆரிப் சராபி சனிக்கிழமை ஈத் தொழுகைக்​குப் பிறகு அவரது குடும்ப உறுப்பினர்​களாலேயே கத்​தி​யால் குத்​தப்​பட்​டும், துப்​பாக்​கி​யால் சுடப்​பட்​டும் கொல்​லப்​பட்​ட​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது. முரிட்கே பகு​தி​யில் உள்ள லஷ்கர்​-இ-தொய்பா அமைப்​பின் உருக்குலைந்த தலை​மையகத்​திற்கு அரு​கிலேயே இந்​தச் சம்பவம் நடை​பெற்​றுள்​ள​தாக உளவுத்​துறை வட்​டாரங்​கள் தெரிவிக்​கின்​றன. குடும்​பத் தகராறு காரண​மா ?: இந்​தக் கொலைக்​கான துல்லியமான காரணம் இன்​னும் வெளிவ​ராத நிலை​யில், இது சொந்த குடும்​பத்...
அமெரிக்​கா, இஸ்​ரேல் - ஈரான் இடையி​லான போர் 4-வது வாரத்தை எட்​டி​யுள்​ளது. இந்​நிலை​யில், இஸ்​ரேலின் தெற்குப் பகு​தி​யில் உள்ள டிமோனா நகரில் பெரிய அளவி​லான நெருப்​புக் கோளங்​கள் விழுந்து வெடிக்​கும் காட்​சிகள் வெளியாகியுள்​ளன. அணுசக்தி மையம் அமைந்​துள்ள இந்​தப் பகு​தி​யில், முதல் முறையாக இஸ்​ரேலின் வான் பாது​காப்பு அமைப்​பு​களை மீறி ஈரானிய ஏவு​கணை​கள் ஊடுரு​வித் தாக்​கி​யுள்​ளன. ஈரானின் பழைய ஏவு​கணை​களிட​மிருந்து அணுசக்தி நகரைக் காக்​கத் தவறியதை இஸ்​ரேலிய ராணுவம் ஒப்​புக்​கொண்​டுள்​ளது....