MH 370 விமானத்தை தேடும் பணியை நீட்டிக்க மலேசிய அரசுக்கு பயணிகளின் குடும்பத்தினர் வலியுறுத்தல்
admin - 0
கடந்த 2014-ல் 227 பயணிகள் மற்றும் 12 விமானக் குழுவினருடன் மாயமான மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான எம்.எச்-370 விமானத்தை தேடும் பணியை நீட்டிக்க வேண்டுமென மலேசிய அரசுக்கு பயணிகளின் குடும்பத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.
2014-ல் இதே நாளில் (மாதம் 8) மலேசியாவிலிருந்து சீனாவின் பெய்ஜிங்கிற்கு புறப்பட்ட போயிங் 777 ரகத்தை சேர்நத் எம்.எச்-370 விமானம் புறப்பட்ட சில மணி நேரத்தில் காணாமல் போனது. இதனைத் தொடர்ந்து சர்வதேச நாடுகளின்...
மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் அதிகரித்துள்ளதை தொடர்ந்து, இன்று (மார்ச் 8) அதிகாலையில் இஸ்ரேல் மீண்டும் தெற்கு லெபனான் மற்றும் பெய்ரூட்டைத் தாக்கியுள்ளது. இதில் 12 பேர் கொல்லப்பட்டதாக லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பெய்ரூட்டில் நடந்த தாக்குதல்கள்களில் ஈரானின் புரட்சிகர ராணுவத்தின் குட்ஸ் படையின் லெபனான் பிரிவு தளபதிகளை குறிவைத்ததாக இஸ்ரேல் அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையில், ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் தாக்கியதில் குவைத்தில் இரண்டு எல்லை காவல் வீரர்கள்...
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது. ஈரானின் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலை
யங்கள் மற்றும் எரிபொருள் சேமிப்பு கிடங்குகளை இலக்காக வைத்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய விமானப்படைகள் தாக்குதல்களைத் தொடங்கிஉள்ளன. இதைத் தொடர்ந்து, வளைகுடா நாடுகள் மீதான தாக்குதலையும் ஈரான் தீவிரப்படுத்தியுள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் படைகள் மற்றும் ஈரான் இடையிலான போர் 9-வது நாளை எட்டியுள்ளது. மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது...
சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ பேசியதாவது: பிரதமர் மோடியும், அதிபர் ஷி ஜின்பிங்கும் வகுத்துக் கொடுத்த பாதையில் இரு நாடுகளும் பயணிக்க வேண்டும்.
கடந்த ஆண்டு தியான்ஜினில் நடைபெற்ற சந்திப்பு இருநாட்டு உறவில் முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவும், சீனாவும் போட்டியாளர்கள் அல்ல. வளர்ச்சிக்கான நல்வாய்ப்புகளை இருவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
மேலும், எல்லைப் பகுதியில் அமைதியைப் பேணுவதுடன், இரு நாடுகளும் பரஸ்பரம்...
நேபாளத்தில் நடைபெற்ற ஜென் இஸட் இளைஞர்கள் போராட்டம் தொடர்பான அறிக்கை, இடைக் கால அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தில் அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அந்நாட்டின் முன்னாள் பிரதமரும், சிபிஎன்-யுஎம்எல் கட்சித் தலைவருமான கே.பி. சர்மா ஒளியை வீழ்த்தி, ராஷ்ட்ரீய சுதந்திர கட்சியின் இளம் தலைவர் பாலேந்திர ஷா பாலன் (35) வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜென் இஸட் இளைஞர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து பதவி விலகிய கே.பி.சர்மா ஒளியை எதிர்த்து,...
“இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் வழங்க ரஷ்யா எப்போதும் தயார்” – தூதர் டெனிஸ் அலிபோவ் அறிவிப்பு
admin - 0
இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் செய்ய ரஷ்யா எப்போதும் தயார் என்று இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ் கூறியுள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததால், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை ஐரோப்பிய நாடுகள் நிறுத்தின. இந்தியா தொடர்ந்து மலிவு விலையில் கச்சா எண்ணெய் வாங்கியது. இது உக்ரைன் மீதான போருக்கு ரஷ்யாவை ஊக்குவிப்பதாக இருக்கும் என்று இந்தியாவுக்கு கூடுதல் வரி விதித்தார் ட்ரம்ப்.
ரஷ்யாவிடம் இருந்து...
ஈரானின் புதிய உச்ச தலைவராக, மறைந்த அயத்துல்லா அலி காமேனியின் மகன் மோஜ்தபா காமேனி (56) தேர்வு செய்யப்பட்டார் என தகவல்கள் வெளியாயின.
இது குறித்து ஈரான் உச்ச தலைவரின் இந்திய பிரதிநிதி டாக்டர் அப்துல் மஜீத் ஹக்கீம் எலாஹி கூறியதாவது: ஈரானில் புதிய உச்ச தலைவரை தேர்வு செய்யும் பணி இன்னும் நடைபெறுகிறது.
மோஜ்தாபா காமேனி புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி உண்மை அல்ல. அவர் தகுதியின்...
அணு குண்டுகளை சுமந்து செல்லும் திறன் கொண்ட அதிநவீன ஏவுகணையை அமெரிக்க விமானப்படை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க விமானப் படை வட்டாரங்கள் கூறியதாவது: கடந்த 1962-ல் ‘மினிட்மேன்I’ ஏவுகணையும் கடந்த 1965-ம் ஆண்டில் ‘மினிட்மேன் II’ ஏவுகணையும் அமெரிக்க விமானப் படையில் சேர்க்கப்பட்டன. கடந்த 1970-ம் ஆண்டில் ‘மினிட்மேன் III’ ஏவுகணை விமானப் படையில் சேர்க்கப்பட்டது.
தற்போது இந்த வகையை சேர்ந்த 400 ஏவுகணைகள் அமெரிக்காவின் மோன்டானா, நார்த்...
மத்திய கிழக்கு நாடுகளில் 7-வது நாளாக போர் நீடித்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை கொல்ல வேண்டும் என ஈரான் மதகுரு ஒருவர் அழைப்பு விடுத்துள்ளார்.
அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது வான்வழி தாக்குதலை தொடங்கின. இதில், ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி உட்பட சுமார் 50 உயர் அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து, இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படைத்தலங்கள்...
ஈரான் போர்க் கப்பலை, அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் தாக்கியதற்கு பதிலடியாக, வளைகுடா பகுதியில் அமெரிக்க எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக ஈரான் கூறியுள்ளது. ஈரான் கடற்படையின் 17 போர் கப்பலை அழித்துவிட்டதாக அமெரிக்கா கூறியது.
இந்தியாவில் கூட்டுப் பயிற்சியை முடித்து விட்டு ஈரான் திரும்பிய ஐஆர்ஐஎஸ் டேனா என்ற போர்க்கப்பலை, இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமெரிக்க கடற்படையின் நீர்மூழ்கி கப்பல் மார்க்-48 என்ற சக்திவாய்ந்த டார்பிடோ குண்டு...










