சவுதி அரேபியாவின் அல்கார்ஜ் நகரில் உள்ள விமானப் படைத் தளத்தை அமெரிக்கா பயன்படுத்தி வருகிறது.
அந்த விமானப் படைத் தளத்தை குறிவைத்து ஈரான் ராணுவம் நேற்று முன்தினம் பல்வேறு ஏவுகணைகளை வீசியது. இதில் ஓர் ஏவுகணை, இந்தியர்கள் உள்ளிட்ட வெளி நாட்டு தொழிலாளர்கள் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பின் மீது விழுந்து வெடித்துச் சிதறியது. இதில் 2 பேர் உயிரிழந்தனர். 12 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலில் இந்தியர்கள் உயிரிழக்கவில்லை...
மத்திய கிழக்கில் போர் குறைவதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லாத நிலையில், இன்று (மார்ச் 10) அதிகாலையில் சவுதி அரேபியா மற்றும் குவைத்தை நோக்கி ஈரான் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியது.
ஈரான் இன்று வளைகுடா நாடுகளில் மீண்டும் தாக்குதல் நடத்தியது. அதே நேரத்தில், வடக்கு ஈராக்கில் நடந்த வான்வழித் தாக்குதலில் ஐந்து ஈரானிய ஆதரவு போராளிகள் கொல்லப்பட்டனர்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள துபாய் மற்றும் பஹ்ரைனில் இன்று...
‘‘ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு மக்களுடன் இணையுங்கள்’’ – ஈரான் படைகளுக்கு பட்டத்து இளவரசர் கோரிக்கை
admin - 0
“ஈரானின் தற்போதைய ராணுவம் தங்கள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு மக்களுடன் இணைய வேண்டும். அவ்வாறு செய்தால், சுதந்திரமான ஈரானில் அவர்களுக்கு ஒரு இடம் கிடைக்கும்” என்று ஈரானின் நாடுகடத்தப்பட்ட பட்டத்து இளவரசர் ரெஸா பஹ்லவி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் உள்ள ஈரான் பட்டத்து இளவரசர் ரெஸா பஹ்லவி தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "ஈரானில் மக்களால் நடத்தப்பட்ட லயன் மற்றும் சூரிய புரட்சி ஆகியவை வீரத்தின் உச்சபட்ச பாராட்டுக்குரியது. அப்போது தெருவில்...
இந்தியாவிலிருந்து வங்கதேசத்திற்கு இன்று குழாய் வழியாக 5,000 டன் டீசல் வழங்கப்பட உள்ளது. இந்த டீசல் பர்பதிபூர் எல்லை வழியாக வங்கதேசத்திற்குள் குழாய் வழியாக அனுப்பப்படும்.
இதுகுறித்து பேசிய வங்கதேச பெட்ரோலியக் கழகத்தின் (பிபிசி) தலைவர் முகமது ரெசானூர் ரஹ்மான்,"இந்தியாவுடன் எங்களுக்கு ஒரு ஒப்பந்தம் உள்ளது, அந்த ஒப்பந்தத்தின்படி, ஒவ்வொரு ஆண்டும் குழாய் வழியாக இந்தியா வங்கதேசத்திற்கு 1,80,000 டன் டீசலை வழங்கும். இப்போது வழங்கப்படும் 5,000 டன் டீசல்...
ஈரானில் ஆட்சியை மாற்றுவது அந்நாட்டு மக்களின் கைகளில்தான் உள்ளது என்றும், அடக்குமுறை அமைப்பில் இருந்து அவர்கள் தங்களை விடுவித்துக்கொள்ள வேண்டும் என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது தாக்குதலை தொடங்கி 10 நாட்கள் ஆகின்றன. தொடர்ந்து போர் தீவிரமடைந்து வருகிறது. இதனால், உலகின் பல்வேறு நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இந்தப் போர் தொடருமானால், அது சர்வதேச அளவில் மிகப் பெரிய...
லெபனானில் ‘வெள்ளை பாஸ்பரஸ்’ பயன்படுத்தி இஸ்ரேல் தாக்குதல்: மனித உரிமை கண்காணிப்பகம் குற்றச்சாட்டு
admin - 0
லெபனான் நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள குடியிருப்புகள் மீது இஸ்ரேல் வெள்ளை பாஸ்பரஸை கொண்டு அண்மையில் தாக்குதல் நடத்தியதாக சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட உலக நாடுகளில் இயங்கி வரும் அமெரிக்காவின் நியூயார்க்கை தலைமையிடமாக கொண்டுள்ள மனித உரிமை கண்காணிப்பகம் குற்றச்சாட்டு (ஹெச்.ஆர்.டபிள்யூ) வைத்துள்ளது. அது குறித்து விரிவாக பார்ப்போம்.
கடந்த வாரம் 3-ம் தேதி அன்று இஸ்ரேல் தரப்பு லெபனான் மீது நடத்திய தாக்குதலில் வெடி மருந்துகளில் வெள்ளை பாஸ்பரஸை...
ஈரானின் உச்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி காமேனி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அவரது மகன் மோஜ்தபா காமேனி ஈரானின் புதிய உச்ச தலைவராக முறைப்படி நியமிக்கப்பட்டுள்ளார்.
ஈரானின் நிபுணர்கள் குழு ஞாயிற்றுக்கிழமை) இந்த அறிவிப்பை வெளியிட்டது. இதற்கு ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படை மற்றும் அந்நாட்டின் அரசியல் தலைவர்கள் முழு ஆதரவைத் தெரிவித்துள்ளனர். ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் இந்த நியமனத்தை "தேசத்தின்...
இஸ்ரேலின் டெல் அவிவ் உள்ளிட்ட நகரங்களை குறிவைத்து ஈரான் ராணுவம் அடுக்கடுக்காக கொத்து குண்டுகளை வீசி வருகிறது. சுமார் 8 கி.மீ. பரப்பளவுக்கு இந்த கொத்து குண்டுகள் சிதறி விழுந்து வெடிக்கின்றன.
அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப்படைகள் மற்றும் ஈரான் இடையே 10-வது நாளாக நேற்றும் போர் நீடித்தது. ஈரானுக்கு ஆதரவாக லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா கிளர்ச்சிப் படை இஸ்ரேலை குறிவைத்து ஏவுகணைகளை வீசி வருகிறது. இதற்கு பதிலடியாக வான், தரைவழியாக...
ஈரானின் புதிய உச்ச தலைவராக அயத்துல்லா அலி காமேனியின் மகன் மோஜ்தபா காமேனி அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கடந்த 28-ம் தேதி நடத்திய தாக்குதலில் ஈரான் உச்ச தலைவராக இருந்த அயத்துல்லா அலி காமேனி உயிரிழந்தார். இதையடுத்து, புதிய தலைவரை தேர்வு செய்யும் பணியில் 88 மத குருக்கள் அடங்கிய சபை ஈடுபட்டது. இந்த சபை ஓட்டெடுப்பு மூலம் மறைந்த தலைவர் அயத்துல்லா காமேனியின் மகன்...
ஹார்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் விநியோகத்தை தடுக்கும் பணியில் ஈடுபட்டால், ஈரான் மீது இன்னும் கடுமையாக தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளின் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. இதனால், வளைகுடா நாடுகளில் பெரும் பதற்றம் நிலவுகிறது. ஈரானும் அமெரிக்க ராணுவ தளங்கள் அமைந்துள்ள வளைகுடா நாடுகள் மீது பதில் தாக்குதல் மேற்கொண்டுள்ளது. இதனால் வளைகுடா நாடுகளில் கச்சா எண்ணெய் உற்பத்தி...










