அமெரிக்காவின் சுகாதார மைய இயக்குநராக கொல்கத்தாவில் பிறந்த டாக்டர் ஜே பட்டாச்சார்யாவை புதிய அதிபராக பொறுப்பேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப் தேர்வு செய்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப், தனது பிரச்சார குழுவில் இருந்த நபர்களை முக்கிய பொறுப்புகளில் நியமித்து வருகிறார். இந்நிலையில் அமெரிக்க சுகாதார மைய இயக்குநராக டாக்டர் ஜே பட்டாச்சார்யாவை டிரம்ப் தேர்வு செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த...
அதானி ஊழல் குற்றச்சாட்டு நெருக்கடியை கையாள இந்தியா - அமெரிக்கா இடையேயான வலுவான உறவு உதவும் என வெள்ளை மாளிகை நம்பிக்கை தெரிவித்துள்ளது. 2020-24 காலகட்டத்தில் அதிக விலைக்கு சூரிய ஒளி (சோலார்) மின்சாரம் வாங்கும் வகையில் விநியோக ஒப்பந்தங்களை பெறுவதற்காக தமிழகம், ஆந்திரா, ஜம்மு - காஷ்மீர், சத்தீஸ்கர், ஒடிசா மாநிலங்களில் அரசு அதிகாரிகளுக்கு அதானி குழுமம் ரூ.2,100 கோடி லஞ்சம் கொடுத்ததாகவும், இதை மறைத்து அமெரிக்க நிறுவனங்களிடம்...
காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை பற்றி பிரதமர் மோடி அறிந்திருந்தார் என்று கனடா நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டது அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், அந்த ஊடகச் செய்தியை கனடா அரசு மறுத்துள்ளது. முன்னதாக, நிஜ்ஜாரை கொலை செய்ய இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமித் ஷா சதி திட்டம் தீட்டியதாக கூறி பெயர் வெளியிடாமல் பாதுகாப்பு அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி கனடா ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. மேலும் அந்தச்...
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர் ஜெய்சங்கர், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கு தொடர்பில்லை என்று கனடா அரசு விளக்கம் அளித்து உள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் 18-ம் தேதி கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம், சர்ரே நகரில் காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் இந்திய தூதரக அதிகாரிகளுக்கு தொடர்பு...
பிரதமர் நரேந்திர மோடிக்கு கயானா, டோமினிகா, பார்படோஸ் நாடுகளின் உயரிய விருதுகள் நேற்று வழங்கப்பட்டன. கரீபியன் பகுதி தீவுகளில் ஒன்றான கயானாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் அரசு முறை பயணமாக சென்றார். அந்த நாட்டின் மக்கள் தொகை 8.14 லட்சம் ஆகும். இதில் தமிழர்கள் உட்பட இந்திய வம்சாவளியினர் 3.20 லட்சம் பேர் உள்ளனர். அதாவது கயானாவின் மக்கள் தொகையில் சுமார் 40 சதவீதம் பேர் இந்திய...
பத்தாவது இலங்கை நாடாளுமன்றம் நேற்று கூடியது. முதல்நாள் கூட்டத்தில் பேசிய அதிபர் அனுர குமார திசாநாயக்க, “இலங்கையில் இனிமேல் இனவாதம், மதவாதத்துக்கு இடமில்லை" என்று தெரிவித்தார். கடந்த செப்டம்பர் 21-ம் தேதி இலங்கை அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் தேசிய மக்கள் சக்தி (என்பிபி) கூட்டணி சார்பில் போட்டியிட்ட அனுர குமார திசாநாயக்க வெற்றி பெற்று, புதிய அதிபராக பதவியேற்றார். இதைத் தொடர்ந்து கடந்த 14-ம் தேதி இலங்கை நாடாளுமன்ற...
உங்கள் நாட்டுக்கு திரும்பி செல்லுங்கள் என்று காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு நியூசிலாந்து மக்கள் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்தியாவில் சீக்கியர்கள் அதிகம் வசிக்கும் பஞ்சாப் மாநிலத்தை தனியாக பிரித்து காலிஸ்தான் என்ற பெயரில் புதிய நாட்டை உருவாக்க வேண்டும் என்று காலிஸ்தான் தீவிரவாதிகள் கோரி வருகின்றனர். அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் திரைமறைவில் செயல்படும் காலிஸ்தான் தீவிரவாதிகள், இந்தியாவுக்கு எதிராக பல்வேறு சதிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அமெரிக்காவின் நியூயார்க் நகரை தலைமையிடமாகக்...
ஊழல் வழக்கில் ஜாமீன் பெற்ற பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், போராட்ட வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டார். அவர் மீது ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதால், அவர் இப்போதைக்கு விடுதலையாக வாய்ப்பில்லை என தெரிகிறது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது ஊழல் வழக்கு உட்பட ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதனால் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். பாகிஸ்தான் தலைவர்களுக்கு வெளிநாட்டு தலைவர்கள் அளிக்கும் பரிசு எல்லாம்...
தன் மீதான குற்றச்சாட்டுகளும், அதற்காக சர்வதேச நீதிமன்றம் விதித்துள்ள பிடிவாரன்ட்டும் யூத வெறுப்பின் விளைவு என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். முன்னதாக, நேற்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது வாரன்ட் பிறப்பித்துள்ளது. இஸ்ரேல் மீது போர்க்குற்ற புகார்கள் முன்வைக்கப்பட்டு சர்வதே குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. இந்த வழக்கில்தான் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்...
பாலஸ்தீன ஆதரவாளர்களின் போராட்டம் காரணமாக ஆஸ்திரேலியாவின் வணிக வளாகங்களில் வழக்கமாக நடைபெறும் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இது, ஆஸ்திரேலிய மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மெல்போர்ன் நகரத்தின் முக்கிய வீதியாக திகழும் போர்க் ஸ்ட்ரீட் வணிக வளாகத்தில் ஆண்டு தோறும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இது, குழந்தைகளுக்கு சிறந்த பொழுதுபோக்கு நிகழ்வாக இருக்கும். இந்தநிலையில், அங்குள்ள இடதுசாரி சிந்தனையாளர்கள், இஸ்லாமியவாதிகள் மற்றும் போர் எதிர்ப்பு ஆர்வலர்...