“காசாவில் இருக்கும் பிணைக் கைதிகளை உடனே விடுவிக்காவிட்டால்…” – ஹமாஸுக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை
admin - 0
தான் அமெரிக்க அதிபராக பதவியேற்பதற்கு முன்பாகவே காசாவில் பிடித்து வைக்கப்பட்டுள்ள பிணைக் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக எச்சரித்துள்ளார்.
இது குறித்து டொனால்ட் ட்ரம்ப் தனது சொந்த சமூக வலைதளமான ட்ரூத் சோஷியல் தளத்தில் கூறியிருப்பதாவது: மத்திய கிழக்கில் மிகவும் வன்முறையான, மனிதாபிமானமற்ற முறையிலும், ஒட்டுமொத்த உலக நாடுகளின் விருப்பத்திற்கு எதிராகவும் பிடித்து வைக்கப்பட்டுள்ள பிணைக் கைதிகளைப் பற்றி எல்லோரும் பேசுகிறார்கள். ஆனால் அவை எல்லாம்...
துணைத் தூதரகத்தில் அத்துமீறல்: இந்திய தூதருக்கு வங்கதேசம் சம்மன் – திரிபுராவில் நடந்தது என்ன?
admin - 0
திரிபுராவின் அகர்தலாவில் உள்ள வங்கதேச துணைத் தூதரகத்தில் நிகழ்ந்த அத்துமீறல் தொடர்பாக விளக்கம் அளிக்க இந்தியத் தூதருக்கு வங்கதேச அரசு சம்மன் அளித்துள்ளது.
இதையடுத்து, வங்கதேசத்துக்கான இந்திய தூதர் பிரனாய் வெர்மா, "வங்கதேசத்தின் வெளியுறவுத் துறை செயலர் ரியாஸ் ஹமிதுல்லாவை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரனாய் வெர்மா, இந்தியா - வங்கதேசம் இடையே பரந்த பன்முக உறவு உள்ளது. அதனை ஒரே ஒரு விஷயமாக சுருக்க முடியாது. மின்...
பல விஷயங்களை முயற்சிக்கும் ஆய்வுக் கூடம் இந்தியா: மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் கருத்தால் சர்ச்சை
admin - 0
‘‘பல விஷயங்களை முயற்சிக்கும் ஆய்வுக் கூடம் இந்தியா’’ என மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைவர் பில்கேட்ஸ் சமீபத்தில் அளித்த ரேடியோ பேட்டியில் கூறியிருப்பதாவது: சுகாதாரம், ஊட்டச்சத்து, கல்வி போன்ற பல கடினமான விஷயங்களில் முன்னேற்றம் காணும் நாட்டுக்கு உதாரணமாக இந்தியாவை கூறலாம். இந்திய அரசு போதிய அளவில் வருவாய் ஈட்டி நிலைத்தன்மையுடன் உள்ளது. அதன் காரணமாக, இன்னும் 20 ஆண்டுகளில் மக்கள் சிறந்த நிலைக்கு...
தென்கொரியாவில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட ஒரு சில மணி நேரங்களில் எதிர்கட்சிகளின் போராட்டத்தால் அது ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தொலைகாட்சி வாயிலாக நேற்று (டிச.03) பொதுமக்களிடம் உரையாற்றிய தென்கொரிய அதிபர் யூன் சாக் யோல் நாட்டில் வடகொரிய ஆதரவாளர்களை நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்காகவும், அரசுக்கு எதிரான சக்திகளை ஒடுக்குவதற்காகவும் நாட்டில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்படுவதாக அறிவித்தார்.
50 ஆண்டுகளில் தென்கொரியாவில் அவசரநிலை சட்டம் அமல்படுத்தப்பட்டது இதுவே முதல்முறை. இந்த அவசரநிலை சட்டத்துக்கு எதிராக அந்நாட்டு நாடாளுமன்றத்தில்...
ரூ.135 கோடி மின் நிலுவையை உடனடியாக செலுத்த வேண்டும்: வங்கதேசத்துக்கு திரிபுரா அரசு எச்சரிக்கை
admin - 0
மின்சாரம் வாங்கியதற்கான நிலுவைத் தொகையை உடனடியாக செலுத்துமாறு வங்கதேசத்திடம் திரிபுரா மாநிலம் அறிவுறுத்தியுள்ளது.
வங்கதேசத்தில் இந்தியாவுக்கு எதிரான விரோதப் போக்கு அதிகரித்து வருகிறது. அங்கு சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள் தாக்கப்படுவதுடன், கோயில்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே இஸ்கான் கோயிலின் குரு சின்மயி கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கு, இந்தியா சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரின் கைதை கண்டித்து மேற்கு வங்க மாநிலத்தில் போராட்டங்களும் நடைபெற்று...
பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியா வருகிறார். அப்போது தலைவர்கள் இருவரும் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்துகின்றனர்.
ரஷ்யாவின் கஸான் நகரில், 'பிரிக்ஸ்' நாடுகளின் 16-வது மாநாடு நடைபெற்றது. இந்த அமைப்பில் உள்ள பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா, ஈரான், எகிப்து, எதியோப்பியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின்...
“காசாவில் இருக்கும் பிணைக் கைதிகளை உடனே விடுவிக்காவிட்டால்…” – ஹமாஸுக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை
admin - 0
தான் அமெரிக்க அதிபராக பதவியேற்பதற்கு முன்பாகவே காசாவில் பிடித்து வைக்கப்பட்டுள்ள பிணைக் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக எச்சரித்துள்ளார்.
இது குறித்து டொனால்ட் ட்ரம்ப் தனது சொந்த சமூக வலைதளமான ட்ரூத் சோஷியல் தளத்தில் கூறியிருப்பதாவது: மத்திய கிழக்கில் மிகவும் வன்முறையான, மனிதாபிமானமற்ற முறையிலும், ஒட்டுமொத்த உலக நாடுகளின் விருப்பத்திற்கு எதிராகவும் பிடித்து வைக்கப்பட்டுள்ள பிணைக் கைதிகளைப் பற்றி எல்லோரும் பேசுகிறார்கள். ஆனால் அவை எல்லாம்...
சர்வதேச வர்த்தகத்தில் டாலருக்கு மாற்றாக புதிய கரன்சியை கொண்டு வர திட்டமிட்டால் பிரிக்ஸ் நாடுகளின் மீது 100 சதவீத வரி விதிக்கப்படும் என்று புதிய அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள டொனால்டு ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சொந்த சமூக வலைதளமான ட்ரூத் சோஷியலில் சனிக்கிழமை வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது: பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா இவற்றுடன் சேர்த்து புதிய உறுப்பினர்களான ஈரான், எகிப்து, எத்தியோப்பியா,...
மலேசியாவில் தொலைத்தொடர்பு, செயற்கைக்கோள், ஊடகம், எண்ணெய்-எரிவாயு, ரியல் எஸ்டேட் என ஏகப்பட்ட நிறுவனங்களுக்கு சொந்தக்காரர் "ஏகே" என்று அனைவராலும் அழைக்கப்படும் ஆனந்த கிருஷ்ணன்.
இலங்கை தமிழரான இவர், மலேசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார். ஃபோர்ப்ஸ் மதிப்பீட்டின்படி ரூ.40,000 கோடி சொத்துகளுக்கு சொந்தக்காரரான ஆனந்த கிருஷ்ணன் தனது 86 வயதில் உடல்நலக்குறைவால் மலேசியாவில் நேற்றுமுன்தினம் (நவ.28) காலமானார்.
இதுகுறித்து அவரது தனியார் முதலீட்டு நிறுவனமான உசாஹா தேகாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...
மனைவிக்கு தங்கச்சங்கிலி வாங்கிய சிங்கப்பூர் தமிழருக்கு அதிர்ஷ்டம்: குலுக்கலில் ரூ.8 கோடி பரிசு விழுந்தது
admin - 0
மனைவிக்கு தங்கச்சங்கிலி வாங்கிய சிங்கப்பூர் தமிழருக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது. குலுக்கலில் அவருக்கு ரூ.8 கோடி மதிப்புள்ள பரிசு கிடைத்துள்ளது.
சிங்கப்பூரைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் சிதம்பரம். தமிழரான இவரது பெற்றோர் தமிழகத்திலிருந்து சிங்கப்பூர் சென்று வசித்து வருகின்றனர். 21 ஆண்டுகளாக பாலசுப்பிரமணியம் சிதம்பரம் சிங்கப்பூரில் புராஜக்ட் இன்ஜினீயராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிங்கப்பூர் லிட்டில் இந்தியா பகுதியிலுள்ள முஸ்தபா ஜுவல்லரிக்குச் சென்று தனது மனைவிக்காக 6 ஆயிரம் சிங்கப்பூர் டாலர்...









