Google search engine
துர்கா பூஜை பண்டிகை நெருங்கி வரும் நிலையில், இந்தியாவுக்கு விதிக்கப்பட்டிருந்த ஹில்சா மீன்ஏற்றுமதி தடையை வங்க தேசஅரசு நீக்கியுள்ளது. இதன்படி, 3 ஆயிரம் டன் ஹில்சா மீன்கள் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என்று நேற்றுமுன்தினம் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் செப்டம்பர் - அக்டோபர் மாதத்தில் துர்கா பூஜை கொண்டாடப்படுகிறது. துர்கா பூஜை கொண்டாட்டங்களின்போது, ஹில்சா மீன்கள் அதிகம் உண்ணப்படுகின்றன. இந்த மீன்கள் பெரும்பான்மையாக வங்கதேசத்திலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.மாணவர்கள் கலவரம்...
இந்தியாவில் இருந்து ஏராளமான கலைப்பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன. சுவாமி சிலைகள் உட்பட ஏராளமான அரிய பொருட்கள் கடத்தி செல்லப்பட்டுள்ளன. கடந்த 2014-ம் ஆண்டு பிரதமர் மோடி பதவியேற்ற பிறகு வெளிநாடுகளுக்குக் கடத்தப்பட்ட இந்திய கலைப்பொருட்களை மீட்பதில் தீவிர கவனம் செலுத்தினார். இந்நிலையில், அமெரிக்க பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, இந்தியாவின் அரிய கலைப்பொருட்கள் குறித்தும் பேசியுள்ளார். இதையடுத்து, இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட 297 அரிய கலைப் பொருட்களை அமெரிக்க அரசு...
கடந்த ஜூலை மாதம் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹஸன் நசரல்லாவின் வலதுகரமாக செயல்பட் புவத் ஷுக்கர் கொல்லப்பட்டதை தொடர்ந்து லெபனான் நாட்டுக்கான பயண கட்டுப்பாடுகளை அமெரிக்கா அறிவித்திருந்தது. இந்த நிலையில், நேற்று முன்தினம் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் சிறப்பு அதிரடிப் படையான ‘ரத்வான்’ படையின் தளபதி இப்ராஹிம் அக்கீல் மற்றும் அஹமது வாபி ஆகியோர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இருதரப்புக்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது....
அமெரிக்காவின் முன்னணி டெக் நிறுவன சிஇஓ-க்கள் பங்கேற்ற வட்டமேசை கூட்ட நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்றார். இதில் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, அடாப் சிஇஓ சாந்தனு நாராயண், ஐபிஎம் சிஇஓ அர்விந்த் கிருஷ்ணா ஆகியோரும் கலந்து கொண்டனர். பிரதமர் நரேந்திர மோடி, மூன்று நாள் சுற்றுப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு குவாட் மாநாட்டில் பங்கேற்ற அவர் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் இந்திய வம்சாவளியினர், அமெரிக்க...
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற அமெரிக்க வாழ் இந்தியர்கள் உடனான சந்திப்பில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அங்கே திரண்டிருந்தவர்களை நோக்கி ‘நீங்கள் இந்தியாவின் தூதுவர்கள்’ என அவர் தெரிவித்தார். மூன்று நாள் பயணமாக பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா அங்கம் வகிக்கும் குவாட் கூட்டத்தில் பங்கேற்றார். முன்னதாக, நேற்று முன்தினம் அமெரிக்கா சென்ற அவருக்கு அங்குள்ள இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்....
ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதலால் காசா மீது போர் தொடுத்த இஸ்ரேல், தற்போது லெபனான் மற்றும் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் மீது கவனத்தை செலுத்தியுள்ளது. இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்தாண்டு அக்டோபர் 7-ம்தேதி தாக்குதல் நடத்தினர். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். 251 பேர் காசாவுக்கு பிணைக் கைதிகளாக கடத்தி செல்லப்பட்டனர். இதனால் காசாவில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகளை ஒழிக்க இஸ்ரேல் போர் தொடுத்தது. இந்நிலையில்...
ரஷ்யா, உக்ரைன் இடையே கடந்த 2022 பிப்ரவரி மாதம் முதல் போர் நடந்து வருகிறது. இந்த போரில் உக்ரைன் ராணுவத்துக்கு தேவையான ஆயுதங்களையும் நிதியுதவியையும் அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் அளித்து வருகின்றன. தற்போதைய சூழலில் நீண்ட தொலைவு பாயும் ஏவுகணைகளை உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கவில்லை. சில ஏவுகணைகளை வழங்கியிருந்தாலும் அவற்றை ரஷ்யாவுக்கு எதிராக பயன்படுத்த அமெரிக்கா அனுமதி வழங்கவில்லை. இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர்...
பாலஸ்தீனத்தில் சட்டவிரோதமாக இருப்பதை இஸ்ரேல் ஓராண்டுக்குள் முடிவுக்கு கொண்டு வர கோரும் தீர்மானத்தை இந்தியா உள்ளிட்ட 43 நாடுகள் புறக்கணித்தன. இருப்பினும் 124 வாக்குகளுடன் தீர்மானம் நிறைவேறியது. காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து கண்மூடித்தனமான தாக்குதலை நிகழ்த்தி வருகிறது. மேலும் கிழக்கு ஜெருசலம் உள்ளிட்ட பாலஸ்தீனத்தின் பிற பகுதிகளிலும் இந்த தாக்குதல் தொடர்கிறது. போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என பல்வேறு நாடுகள் வலியுறுத்திய போதிலும், இஸ்ரேல்...
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று (செப்.18) ஒரே நேரத்தில் பல இடங்களிலும் வாக்கி-டாக்கிகள், சில சூரிய மின் சக்தியால் இயங்கும் உபகரணங்கள் வெடித்ததில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 3000-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். லெபனானில் நேற்று முன்தினம் பேஜர்கள் வெடித்தச் சம்பவத்தை தொடர்ந்து நேற்று அதே பாணியில் வாக்கி-டாக்கிகள் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வெடித்துச் சிதறியது அந்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வாக்கி-டாக்கிகள் அனைத்துமே ஈரான் ஆதரவு கொண்ட ஹிஸ்புல்லா...
பிளாஸ்டிக், காகிதம், கண்ணாடி, உலோகம் உள்ளிட்டவற்றில் உள்ள ரசாயனங்கள் உணவு பண்டங்களில் கண்ணுக்குத் தெரியாமல் கலந்து வருவது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக ‘எக்ஸ்போசர் சயின்ஸ் அண்டு என்விரான்மென்ட்டல் எபிடமியாலஜி’ என்ற இதழில் ஒரு ஆய்வறிக்கை வெளிவந்துள்ளது. இதுகுறித்து சுவிட்சர்லாந்து சூரிச் நகரில் உள்ள உணவு பேக்கேஜிங் கூட்டமைப்பு அறக்கட்டளையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் பிர்கிட் கியூக்கி கூறியதாவது: உணவுடன் தொடர்புடைய ரசாயனங்களில் 100 வகை ரசாயனங்கள் மனித ஆரோக்கியத்துக்கு மிகவும் ஆபத்தானவையாக...