விரைவில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அரசு நிர்வாகத்தில் இடம்பெற்றுள்ள மூத்த அதிகாரிகள் குழு தீவு பிரதேசமான கிரீன்லாந்துக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ‘இது அராஜக போக்கு’ என கிரீன்லாந்து பிரதமர் மியூட் எகெட் (Múte Egede) தெரிவித்துள்ளார். கிரீன்லாந்து செல்லும் அமெரிக்க குழுவில் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸின் மனைவி உஷா வான்ஸும் உள்ளார் என தகவல்.
இந்த பயணத்தில் கிரீன்லாந்தின் பாரம்பரியத்தை உஷா வான்ஸ் அறிந்துகொள்ள...
அமெரிக்க நீதிபதிகளை விமர்சனம் செய்வோருக்கு தொழிலதிபர் எலான் மஸ்க் தாராளமாக நிதியுதவி வழங்கி வருகிறார்.
கடந்த 2016-ம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டொனால்டு ட்ரம்ப் போட்டியிட்டார். அப்போது ட்ரம்ப் உடனான ரகசிய தொடர்பு குறித்து ஆபாச நடிகை ஸ்டார்மி ஊடகங்களுக்கு பேட்டியளித்தார். இந்த விவகாரத்தை மூடி மறைக்க ட்ரம்ப் தனது வழக்கறிஞர் மூலம் நடிகை ஸ்டார்மிக்கு ரூ.1 கோடியை வழங்கினார்.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த...
அமெரிக்காவின் வர்ஜினியா மாகாணத்தில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் பணிபுரிந்து வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 54 வயது ஆண் ஒருவரும், அவரது 24 வயது மகளும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். அந்த கொலை தொடர்பாக சந்தேக நபர் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.
சுட்டக்கொல்லப்பட்ட பிரதிப்குமார் படேல் மற்றும் அவரது மகள் இருவரும், வர்ஜினியாவின் கிழக்கு கரையில் அமைந்துள்ள அகோமாக் கவுண்டியின் லாங்ஃபேர்ட் நெடுஞ்சாலையில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில்...
அமெரிக்க பொருட்களின் மீதான வரியை இந்தியா நிச்சயமாக குறைக்கும் என்று அதிபர் டொனால்டு ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் பொருட்களுக்கு அதிகம் வரிவிதிக்கும் நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு பரஸ்பர வரி விதிப்பை ஏப்ரல் 2 முதல் அதிகரிக்கப் போவதாக ட்ரம்ப் அச்சுறுத்தி வரும்வேளையில் அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அமெரிக்க-இந்திய உறவு குறித்த கேள்விக்கு ட்ரம்ப், "இந்தியாவுடன் மிகச்சிறந்த நட்புறவு உள்ளது. ஆனால்,...
239 பயணிகளுடன் 10 ஆண்டுகளுக்கு முன் மாயமான எம்எச் 370 விமானத்தை கண்டுபிடித்தால் ரூ.604 கோடி பரிசு
admin - 0
கடந்த 2014-ம் ஆண்டு மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தை, தெற்கு இந்திய பெருங்கடல் பகுதியில், அமெரிக்காவின் ஓசன் இன்பினிட்டி என்ற ரோபோட்டிக் நிறுவனம் தேட மலேசிய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பெய்ஜிங் நகருக்கு மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 777 ரக விமானம் (எண்:370), 239 பயணிகளுடன் கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் 8-ம் தேதி புறப்பட்பட்டு சென்றது. இவர்களில் பெரும்பாலானோர் சீனர்கள்....
நடப்பாண்டின் முதல் மூன்று மாதங்களில் போதைப் பொருள் கடத்தல் குற்றத்துக்காக கனடாவைச் சேர்ந்த 4 பேருக்கு சீனா மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது.
இதுகுறித்து கனடா வெளியுறவுத் துறை அமைச்சர் மெலனி ஜோலி கூறுகையில், “ கனடாவைச் சேர்ந்த 4 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது கடும் கண்டனத்துக்கு உரியது. இந்த விவகாரத்தில் நான் ஏற்கெனவே தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கோரினேன். ஆனால், அதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் சீனா இந்த நடவடிக்கையை...
அமெரிக்க கல்வித் துறையைக் கலைக்கும் கோப்புகளில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். கடந்த ஜனவரி மாதம் அதிபராக பொறுப்பேற்றதில் இருந்தே ட்ரம்ப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அவற்றில் பெரும்பாலான நடவடிக்கைகளுக்கு செலவினங்களைக் குறைப்பதையே அவர் காரணமாகக் கூறி வருகிறார். இந்நிலையில் அமெரிக்க கல்வித் துறையைக் கலைக்கும் கோப்புகளில் கையெழுத்திட்டு பரபரப்பை கூட்டியுள்ளார் ட்ரம்ப்.
அதுமட்டுமல்லாமல் கல்வித் துறையை மாகாணங்கள் பட்டியலுக்கு மாற்றுவதற்கான பணிகளை வேகப்படுத்தும்படியும் கல்வித் துறை...
மூன்றாவது முறையாக சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்ற சுனிதா வில்லியம்ஸ் எதிர்பாராதவிதமாக 9 மாதங்கள் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த காலகட்டத்தில் அவர் விண்வெளி மையத்தில் வீணாக பொழுதை கழிக்கவில்லை. விண்வெளி மையத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகளை கவனித்தார். இவரது 3 முறை பயணத்தில் இவர் 9 முறை விண்வெளி நடைபயணம் மேற்கொண்டார்.
மொத்தம் 62 மணி நேரம் 6 நிமிடங்கள் இவர் விண்வெளி நடைபயணம் மேற்கொண்டு சாதனை...
சக வீரர்கள் 3 பேருடன் பூமிக்கு திரும்பினார் சுனிதா வில்லியம்ஸ்: கோடிக்கணக்கானோர் நேரலையில் பார்த்தனர்
admin - 0
சர்வதேச விண்வெளி மையத்தில் 286 நாட்கள் தங்கிய பிறகு விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் மேலும் 2 விண்வெளி வீரர்களுடன் இணைந்து டிராகன்-9 விண்கலம் மூலம் நேற்று அதிகாலை பாதுகாப்பாக பூமிக்கு திரும்பினர்.
நாசா விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் (59), புட்ச் வில்மோர் (62) ஆகியோர் கடந்தாண்டு ஜூன் 5-ம் தேதி போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்றனர். பரிசோதனைக்காக அனுப்பப்பட்ட...
போர்நிறுத்தத்தை நிராகரித்த ரஷ்யா: ட்ரம்ப் – புதின் உரையாடலுக்கு பின்பு ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு
admin - 0
பொதுமக்கள் வசிக்கும் உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்பட்ட புதிய தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்கா பரிந்துரைத்த முழுமையான போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்திருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும், ரஷ்ய அதிபர் புதினும் செவ்வாய்க்கிழமை தொலைபேசியில் உரையாடினர். இருவருக்கும் இடையேயான பேச்சுவார்த்தை சுமார் 90 நிமிடம் நீடித்தது. அப்போது, உக்ரைன் பகுதியில் உள்ள எரிசக்தி கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படாது என்று ரஷ்ய அதிபர் உறுதி அளித்தார். ஆனாலும்,...









