5 ஆட்​டங்​கள் கொண்ட டி 20 கிரிக்​கெட் தொடரில் இந்​திய அணி​யின் தொடக்க வீர​ரான அபிஷேக் சர்மா எங்​களுக்கு சவால் கொடுப்​பார் என ஆஸ்​திரேலிய அணி​யின் கேப்​டன் மிட்​செல் மார்ஷ் தெரி​வித்​துள்​ளார். இந்​தியா - ஆஸ்​திரேலியா அணி​கள் இடையி​லான 5 ஆட்​டங்​கள் கொண்ட டி 20 தொடரின் முதல் போட்டி கான்​பெ​ரா​வில் உள்ள மனுகா ஓவல் மைதானத்​தில் இன்று நடை​பெறுகிறது. இந்த போட்​டியையொட்டி நேற்று நடை​பெற்ற பத்​திரி​கை​யாளர்​கள் சந்​திப்​பில் ஆஸ்​திரேலிய...
ரஞ்சி கோப்பை கிரிக்​கெட் தொடரில் ‘ஏ’ பிரி​வில் இடம் பெற்​றுள்ள தமிழ்​நாடு - நாகாலாந்து அணி​கள் இடையி​லான ஆட்​டம் பெங்​களூரு​வில் நடை​பெற்று வந்​தது. இதன் முதல் இன்​னிங்​ஸில் தமிழ்​நாடு அணி 115 ஓவர்​களில் 3 விக்​கெட்​கள் இழப்​புக்கு 512 ரன்​கள் குவித்து டிக்​ளேர் செய்​தது. பிரதோஷ் ரஞ்​ஜன் பால் 201 ரன்​களும், விமல் குமார் 189 ரன்​களும் விளாசினர். இதையடுத்து விளை​யாடிய நாகாலாந்து 3-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 127...
ஜப்பானில் நடைபெற்று வந்த பான் பசிபிக் ஓபன் டென்னிஸ் போட்டியில் சுவிட்சர்லாந்து வீராங்கனை பெலிண்டா பென்கிக் சாம்பியன் பட்டம் வென்றார். ஜப்பானின் டோக்கியோ நகரில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் பெலிண்டா பென்கிக்கும், செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவாவும் மோதினர். இதில் பெலிண்டா 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் லிண்டாவை வீழ்த்தி பட்டத்தைக் கைப்பற்றினார். பெலிண்டா பென்கிக்குக்கு இது 10-வது டபிள்யூடிஏ டென்னிஸ் பட்டமாகும்.
களத்​தில் நீண்ட நேரம் நின்று பெரிய இன்​னிங்ஸை விளை​யாட விரும்​பு​கிறார் ரோஹித் சர்மா என்று இந்​திய கிரிக்​கெட் அணி​யின் முன்​னாள் வீரர் முகமது கைஃப் தெரி​வித்​தார். இந்​தி​யா, ஆஸ்​திரேலிய அணி​கள் மோதிய ஒரு​நாள் கிரிக்​கெட் போட்​டித் தொடர் அண்​மை​யில் முடிவடைந்​தது. இதில் 2-1 என்ற கணக்​கில் ஆஸ்​திரேலிய அணி வென்று தொடரைக் கைப்​பற்​றியது. ஆஸ்​திரேலி​யா​வுக்கு எதி​ரான இந்த ஒரு​நாள் கிரிக்​கெட் தொடர் தொடங்​கு​வதற்கு முன்​பாக இந்​திய அணி​யின் மூத்த வீர​ரான...
ஆசிய ரக்பி எமிரேட்ஸ் செவன்ஸ் கோப்​பைக்​கான ரக்பி போட்​டி​யின் அரை இறு​தி​யில் விளை​யாட இந்​திய ஆடவர் அணி​யினர் தகுதி பெற்​றுள்​ளனர். ஓமன் நாட்​டிலுள்ள மஸ்​கட் நகரில் இப்​போட்டி நடை​பெற்று வரு​கிறது. இந்​தப் போட்​டி​யின் முதல் ஆட்​டத்​தில் இந்​திய அணி​யினர் 14-10 என்ற கணக்​கில் லெப​னானை​யும், 2-வது ஆட்​டத்​தில் 26-5 என்ற கணக்​கில் ஆப்​கானிஸ்​தானை​யும் வீழ்த்​தி​யது. நேற்று நடை​பெற்ற கால் இறு​தி​யில் இந்​தியா 21-7 என்ற கணக்​கில் ஈரான் நாட்டு அணியை வீழ்த்தி...
காயமடைந்த இந்​திய கிரிக்​கெட் அணி வீரர் ஸ்ரேயஸ் ஐயருக்கு சிகிச்சை அளிக்​கப்​பட்டு வரு​கிறது. இந்​திய, ஆஸ்​திரேலிய அணி​கள் மோதிய 3-வது மற்​றும் கடைசி ஒரு நாள் கிரிக்​கெட் போட்டி சிட்னி மைதானத்​தில் நேற்று முன்​தினம் நடை​பெற்​றது. இந்​தப் போட்​டி​யின்​போது ஃபீல்​டிங்​கில் ஈடு​பட்​டிருந்​தார் ஸ்ரேயஸ் ஐயர், அப்​போது ஆஸ்​திரேலிய வீரர் அலெக்ஸ் கேரி அடித்த பந்தை நீண்ட தூரம் பின்​னோக்கி ஓடிச் சென்று பிடித்​து, அலெக்ஸ் கேரியை அவுட்​டாக்​கி​னார் ஸ்ரேயஸ். பந்தை பிடித்த...
இந்​தியா - ஆஸ்​திரேலியா அணி​கள் இடையி​லான 2-வது ஒரு​நாள் கிரிக்​கெட் போட்டி அடிலெய்டு நகரில் இன்று காலை 9 மணிக்கு நடை​பெறுகிறது. இந்த ஆட்​டத்​தில் இந்​திய அணி வெற்றி நெருக்​கடி​யுடன் களமிறங்​கு​கிறது. ஏனெனில் தோல்வி அடைந்​தால் தொடரை இழக்க நேரிடும். ஷுப்​மன் கில் தலை​மையி​லான இந்​திய கிரிக்​கெட் அணி ஆஸ்​திரேலி​யா​வில் சுற்​றுப்​பயணம் செய்து விளை​யாடி வரு​கிறது. இரு அணி​கள் இடையி​லான 3 ஆட்​டங்​கள் கொண்ட ஒரு​நாள் கிரிக்​கெட் போட்​டித் தொடரில்...
பாகிஸ்​தான் அணிக்கு எதி​ரான 2-வது டெஸ்ட் கிரிக்​கெட் போட்​டி​யில் கடைசி விக்​கெட்​டுக்கு களமிறங்​கிய காகிசோ ரபா​டா,செனுரன் முத்​து​சாமி​யுடன் இணைந்து 98 ரன்​கள் குவித்து அசத்​தி​னார். ராவல்​பிண்​டி​யில் நடை​பெற்று வரும் இந்த டெஸ்ட் போட்​டி​யில் பாகிஸ்​தான் அணி முதல் இன்​னிங்​ஸில் 333 ரன்​கள் எடுத்​தது. இதையடுத்து பேட் செய்த தென் ஆப்​பிரிக்க அணி 2-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 65 ஓவர்​களில் 4 விக்​கெட்​கள் இழப்​புக்கு 185 ரன்​கள் எடுத்​தது. டிரிஸ்​டன்...
ஒலிம்​பிக்​கில் தங்​கப் பதக்​கம் வென்ற ஈட்டி எறிதல் வீர​ரான நீரஜ் சோப்​ரா​வுக்கு இந்​திய ராணுவத்​தில் கவுரவ லெப்​டினன்ட் கர்​னல் பதவி வழங்​கப்​பட்​டுள்​ளது. டெல்​லி​யில் நேற்று நடை​பெற்ற விழா​வில் பாது​காப்பு துறை அமைச்​சர் ராஜ்​நாத் சிங், ராணுவ தலைமை தளபதி உபேந்​திர திவேதி மற்​றும் மூத்த அதி​காரி​கள் கலந்து கொண்​டனர். நீரஜ் சோப்ரா கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் 26-ம் தேதி, இந்​திய ராணுவத்​தில் நயிப் சுபே​தா​ராக இணைந்​தார். இதன் பின்​னர்...
குளிர்​கால ஒலிம்​பிக் போட்டி அடுத்த ஆண்டு பிப்​ர​வரி 6-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை இத்​தாலி​யில் உள்ள மிலன், கார்​டினா டி’ஆம்​பெசோ நகரங்​களில் நடை​பெறவுள்​ளது. இந்​தப் போட்​டிக்​கான ஒலிம்​பிக் ஜோதியை இந்​திய வீரர் அபிநவ் பிந்த்ரா ஏந்​திச் செல்​ல​வுள்​ளார் என அதி​காரப்​பூர்​வ​மாக அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. இதுகுறித்து அபிநவ் பிந்த்ரா தனது எக்ஸ் பக்​கத்​தில் கூறும்​போது, “மிலன், கார்​டினா நகரங்களில் நடை​பெறும் 2026 குளிர்​கால ஒலிம்​பிக் போட்​டிக்​கான தொடர் ஜோதி ஓட்​டத்​தில்...