ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று பிற்பகல் 3 மணிக்கு நவிமும்பையில் உள்ள டி.ஓய்.பாட்டீல் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா - நியூஸிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி 5 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 3 தோல்விகளுடன் 4 புள்ளிகள் பெற்று பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. அரை இறுதிக்கு முன்னேற வேண்டும் என்றால் எஞ்சியுள்ள 2 ஆட்டங்களிலும்...
ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் தோல்வியை தழுவி உள்ளது. இந்நிலையில், இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு எப்படி என்பதை பார்ப்போம்.
லீக் சுற்றில் இந்திய அணி இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 3 தோல்விகளை பெற்றுள்ளது. முதல் சுற்றில் இன்னும் 2 ஆட்டங்களில் இந்தியா விளையாட வேண்டும். கடந்த ஞாயிற்றுக்கிழமை...
பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக இடது கை வேகப்பந்து வீச்சாளரான ஷாஹின் ஷா அஃப்ரிடியை நியமித்துள்ளது அந்நாட்டு கிரிக்கெட் வாரியம்.
பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வான் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், அவரை நீக்கிவிட்டு அஃப்ரிடியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது. கேப்டன் பொறுப்பில் இருந்து ரிஸ்வான் ஏன் நீக்கப்பட்டார் என்பது குறித்த எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை.
அடுத்த மாதம் உள்நாட்டில்...
கிறைஸ்ட்சர்ச் மைதானத்தில் நேற்று (அக்.20) நடைபெற்ற 2-வது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி, நியூஸிலாந்தை 65 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது. முதல் போட்டி மழையால் முழுதும் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
டாஸ் வென்ற நியூஸிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சாண்ட்னர், தவறாக முதலில் இங்கிலாந்தை பேட் செய்ய அழைத்தார். இங்கிலாந்து போட்டு சாத்து சாத்து என்று சாத்தி எடுத்து 20...
ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தரவரிசையில் இந்திய வீரர் குல்தீப் யாதவ் 14-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வீரர்கள் தரவரிசையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அமைப்பு(ஐசிசி) நேற்று வெளியிட்டுள்ளது. இதில் அண்மையில் நடைபெற்ற மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கெதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்களை வீழ்த்திய இந்திய வீரர் குல்தீப் யாதவ் முன்னேற்றம் கண்டுள்ளார்.
அவர் 689 புள்ளிகளுடன் 21-வது இடத்திலிருந்து 14-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். ஐசிசி...
லாகூரில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 93 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட், டி20, ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. முதலாவதாக டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.
கடந்த 12-ம் தேதி லாகூர் கடாபி மைதானத்தில் முதலாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் 378 ரன்களும், தென் ஆப்பிரிக்க அணி 269...
உலக ஜூனியர் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் தன்வி ஷர்மா, உன்னதி ஹூடா, ரக்சிதா ஆகியோர் கால் இறுதி முந்தையச் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
அசாமின் குவாஹாட்டி நகரில் உலக ஜூனியர் பாட்மிண்டன் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் முதல் நிலை வீராங்கனையான தன்வி சர்மா 15-12, 15-7 என்ற புள்ளிகள் கணக்கில் இந்தோனேசியாவின் ஓய் வினார்டோவை வென்றார்.
மற்றொரு போட்டியில் உன்னதி ஹூடா 15-8, 15-5 என்ற...
ஒருநாள் கிரிக்கெட் போட்டி, சர்வதேச டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணியினர் நேற்று ஆஸ்திரலியாவுக்கு புறப்பட்டுச் சென்றனர்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகளிலும், 5 சர்வதேச டி20 போட்டிகளிலும் பங்கேற்கிறது. முதலில் ஒருநாள் போட்டிகளும், அதனை தொடர்ந்து டி20 போட்டிகளும் நடைபெற உள்ளன.
வரும் 19-ம் தேதி ஒருநாள் போட்டித் தொடர் தொடங்கவுள்ளது. இந்நிலையில் இந்த தொடரில் பங்கேற்பதற்காக இந்திய வீரர்கள் நேற்று டெல்லி...
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று விளையாடி வரும் இந்திய மகளிர் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
13-வது மகளிர் உலகக்கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடர் இந்தியா, இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கடந்த 12-ம் தேதி விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, இந்திய அணியை வென்றது.
இந்நிலையில், இந்த ஆட்டத்தின்போது பந்துவீச இந்திய அணி கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டது. இந்த புகாரின் அடிப்படையில் இந்திய அணிக்கு போட்டி...
தமிழக அணிக்கெதிரான ரஞ்சி கிரிக்கெட் போட்டியின் எலைட் பிரிவு ஆட்டத்தில் ஜார்க்கண்ட் அணியின் கேப்டன் இஷான் கிஷன் அபாரமாக விளையாடி சதம் விளாசினார்.
ரஞ்சி கிரிக்கெட் போட்டியின் எலைட் பிரிவு ஆட்டங்கள் நேற்று நாடு முழுவதும் தொடங்கின. தமிழ்நாடு, ஜார்க்கண்ட் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் கோவை ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
டாஸில் ஜார்க்கண்ட் அணி வென்று முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்கார்களாக ஷிகர் மோகன், சரண்தீப்...









