Google search engine
இந்திய கிரிக்கெட் வீராங்கனை கோங்கடி திரிஷாவுக்கு ரூ.1 கோடி பரிசுத்தொகையை தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி வழங்கிப் பாராட்டினார். மலேசியாவில் சமீபத்தில் நடந்த 19 வயதுக்குட்பட்ட மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் டி-20 இறுதி போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் மோதின. இதில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்று கோப்பையைத் தட்டி சென்றது. முக்கியமான இப்போட்டியில் சிறப்பாக விளையாடி 44 ரன்கள் குவித்தது மட்டுமின்றி,...
இலங்கை - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான கடைசி மற்றும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை (6-ம் தேதி) காலே நகரில் தொடங்குகிறது. இந்த போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் திமுத் கருணரத்னே தெரிவித்துள்ளார். இந்த ஆட்டம் அவருக்கு 100-வது டெஸ்ட் போட்டி ஆகும். 36 வயதான கருணரத்னே 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 16 சதங்கள், 34 அரை சதங்களுடன்...
38-வது தேசிய விளையாட்டு போட்டி உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று பாட்மிண்டனில் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் தமிழகத்தின் சதீஷ் கருணாகரன் 21-17, 21-17 என்ற நேர் செட் கணக்கில் உத்தராகண்டின் சூர்யக்‌ஷ் ராவத்தை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார். தொடர்ந்து நடைபெற்ற கலப்பு இரட்டையர் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த ஆத்யா வரியத், சதீஷ் கருணாகரன் ஜோடி 21-11, 20-22, 21-8 என்ற செட்...
நெதர்லாந்து நாட்டின் விஜிக் ஆன் ஜீ நகரில் நடைபெற்ற 87-வது டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் தொடரில் இந்திய கிராண்ட் மாஸ்டரான சென்னையை சேர்ந்த ஆர்.பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றார். 13 சுற்றுகளின் முடிவில் பிரக்ஞானந்தாவும், உலக சாம்பியனும் இந்திய கிராண்ட் மாஸ்டரான டி.குகேஷும் தலா 8.5 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர். இதையடுத்து நடைபெற்ற டைபிரேக்கரில் பிரக்ஞானந்தா 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். சாம்பியன்...
இங்கிலாந்து அணிக்கு எதிராக சமீபத்தில் முடிவடைந்த 5 ஆட்டங்கள் கொண்ட இருதரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் ரிஸ்ட் ஸ்பின்னரான வருண் சக்கரவர்த்தி 14 விக்கெட்கள் வீழ்த்தி தொடர் நாயகன் விருதை வென்றிருந்தார். பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளங்களில் இங்கிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களுக்கு வருண் சக்கரவர்த்தி கடும் சவால்கள் அளித்தார். இதனால் அவரை, சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என அஸ்வின் உள்ளிட்ட...
நெதர்லாந்தின் விக் ஆன் ஜீ நகரில் டாடா ஸ்டீல் மாஸ்டர் செஸ் தொடர் நடைபெற்று வந்தது. இதில் 12 சுற்றுகளின் முடிவில் உலக சாம்பியனும் இந்திய கிராண்ட் மாஸ்டருமான டி.குகேஷ், மற்றொரு இந்திய கிராண்ட் மாஸ்டரான ஆர்.பிரக்ஞானந்தா ஆகியோர் தலா 8.5 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர். கடைசி மற்றும் 13-வது சுற்றில் குகேஷ், சகநாட்டைச் சேர்ந்த அர்ஜுன் எரிகைசியிடமும், பிரக்ஞானந்தா, ஜெர்மனியின் வின்சென்ட் கீமரிடமும் தோல்வி அடைந்தனர். இதனால் வெற்றியாளரை...
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சனுக்கு ஆள்காட்டி விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர், 6 வாரங்கள் எந்தவிதமான போட்டிகளிலும் பங்கேற்க முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிராக நேற்று முன்தினம் மும்பையில் நடைபெற்ற கடைசி டி 20 கிரிக்கெட் போட்டியின் போது சஞ்சு சாம்சனுக்கு ஆள்காட்டி விரலில் காயம் ஏற்பட்டது. ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய பந்து சாம்சனின் கை விரலை...
38-வது தேசிய விளையாட்டு போட்டி உத்தராண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ஆடவருக்கான பளுதூக்குதலில் +109 கிலோ எடை பிரிவில் தமிழகத்தின் எஸ்.ருத்ராமயன் 355 கிலோ (ஸ்நாட்ச் 175 + கினீன் அன்ட் ஜெர்க் 355) எடையை தூக்கி 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். ஸ்நாட்ச் பிரிவில் அவர், தேசிய சாதனையை படைத்தார். ஸ்குவாஷில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் தமிழகத்தின் வேலவன் செந்தில்குமார் தங்கப்...
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் கால் இறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு அணி, விதர்பாவுடன் மோத உள்ளது. இந்த ஆட்டம் வரும் 8-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நாக்பூரில் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த ஆட்டத்துக்கான 16 பேர் கொண்ட அணியை தமிழ்நாடு கிரிக்கெட் வாரிய தேர்வுக்குழுவினர் நேற்று அறிவித்தனர். இதில் இடது கை பேட்ஸ்மேனான சாய் சுதர்சன் அணிக்கு திரும்பி உள்ளார். குடலிறக்கத்துக்காக அறுவை சிகிச்சை செய்திருந்த...
இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட இருதரப்பு டி20 கிரிக்கெட் தொடரை இந்திய அணி 4-1 என்ற கைப்பற்றி கோப்பையை வென்றது. மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற கடைசி மற்றும் 5-வது டி20 கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 247 ரன்கள் குவித்து மிரட்டியது. அபிஷேக் சர்மா 54 பந்துகளில் 135 ரன்கள் விளாசினார். டி20 வடிவில் இந்திய...