ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் சென்னை நேரு விளையாட்டரங்கில் இன்று (15-ம் தேதி) மாலை 5 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி, பஞ்சாப் எஃப்சி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
பஞ்சாப் எஃப்சி 19 ஆட்டங்களில் விளையாடி 24 புள்ளிகளுடன் பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. அதேவேளையில் சென்னையின் எஃப்சி 20 ஆட்டங்களில் விளையாடி 21 புள்ளிகளுடன் 10-வது இடத்தில் உள்ளது. 6-வது இடத்தில் உள்ள மும்பை சிட்டி எஃப்சி (31)...
38-வது தேசிய விளையாட்டு போட்டி உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் கடந்த ஜனவரி 28-ம் தேதி தொடங்கியது. 38 அணிகளைச் சேர்ந்த10 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்ட இந்த தொடர் நேற்று நிறைவு பெற்றது. இதில் சர்வீசஸ் அணி 68 தங்கம், 26 வெள்ளி, 27 வெண்கலம் என 121 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்தது. மகாராஷ்டிரா 54 தங்கம், 71 வெள்ளி, 73 வெண்கலம் என 198 பதக்கங்களுடன்...
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்: பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.19.5 கோடி பரிசு – சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவிப்பு
admin - 0
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் 19-ம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது. மார்ச் 9-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் பாகிஸ்தான், இந்தியா, வங்கதேசம், நியூஸிலாந்து, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய 8 அணிகள் கலந்து கொண்டு விளையாடுகின்றன. இதில் இந்திய அணி பங்கேற்கும் ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடத்தப்படுகிறது.
இந்நிலையில் இந்தத் தொடருக்கான பரிசுத் தொகையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. இந்தத்...
சவால்களை திறன்பட கையாண்டது உத்தராகண்ட் அரசு: 38-வது தேசிய விளையாட்டு போட்டி நிறைவில் அமித் ஷா புகழாரம்
admin - 0
உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் 38-வது தேசிய விளையாட்டு போட்டி கடந்த மாதம் 28-ம் தேதி தொடங்கி இன்று (பிப்.14) நிறைவடைந்தது. போட்டிக்கான ஏற்பாடுகளை உத்தராகண்ட் மாநிலம் சிறப்பாக மேற்கொண்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டி உள்ளார். மேலும், 2036-ல் ஒலிம்பிக் போட்டியை நடத்த இந்தியா தயார் என அவர் தெரிவித்துள்ளார்.
அந்த மாநிலத்தின் ஹல்துவானி நகரம் கோலாபூரில் உள்ள சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இதன் நிறைவு விழா...
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் 19-ம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது. இதில் இந்திய அணி பங்கேற்கும் ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் இந்தத் தொடரில் பங்கேற்பதற்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி நாளை (15-ம் தேதி) துபாய் புறப்பட்டுச் செல்கிறது. இந்தத் தொடரில் பிசிசிஐ-யின் புதிய பயண கொள்கை முதல் முறையாக அமலாகிறது. இதனால் இந்திய அணி வீரர்களுடன் அவர்களது குடும்பத்தினர்...
பாகிஸ்தானில் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. இதன் கடைசி லீக் ஆட்டத்தில் நேற்று முன்தினம் பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் 353 ரன்கள் இலக்கை வெற்றிகரமாக எட்டி இறுதிப் போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்தது பாகிஸ்தான் அணி.
இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியின் பேட்ஸ்மேன் மேத்யூ பிரீட்ஸ்கே ரன் எடுக்க ஓடியபோது பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாகீன் ஷா...
மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூபிஎல்) டி20 கிரிக்கெட் தொடரின் 3-வது சீசன் குஜராத் மாநிலம் வடோதராவில் உள்ள கோதம்பி மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இந்தத் தொடரில் நடப்பு சாம்பியனான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு, 2023-ம் ஆண்டு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடல்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், யுபி வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் கலந்து கொள்கின்றன. போட்டிகள் வடோதரா, பெங்களூரு, லக்னோ, மும்பை ஆகிய 5 நகரங்களில் நடைபெறுகிறது....
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக ரஜத் பட்டிதார் அறிவிக்கப்பட்டுள்ளார். மூன்று முறை ஐபிஎல் கிரிக்கெட்டில் ரன்னர்-அப் இடத்தில் பிடித்துள்ள ஆர்சிபி அணியின் கேப்டன்சி ரோலுக்கு அவர் பொருந்துவாரா என்பதை பார்ப்போம்.
ஐபிஎல் தொடங்கிய கடந்த 2008 சீசன் முதல் எதிர்வரும் சீசன் வரை ‘ஈ சாலா கப் நம்தே’ என விடாமுயற்சியுடன் ஐபிஎல் கோப்பையை வெல்ல வேண்டுமென விளையாடி வருகிறது ஆர்சிபி. ஒவ்வொரு சீசனிலும் கோப்பை...
அடுத்த மாதம் தொடங்கவுள்ள ஐபிஎல் 2025-ம் ஆண்டுக்கான சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக ரஜத் பட்டிதாரை நியமித்துள்ளது அந்த அணி நிர்வாகம். கோலி மீண்டும் கேப்டன் ஆகலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
எதிர்வரும் ஐபிஎல் சீசனுக்கு தங்கள் அணியின் புதிய கேப்டன் யார் என்பதை அறிவிக்கும் விதமாக பிரத்யேக நிகழ்வை ஏற்பாடு செய்தது ஆர்சிபி அணி. இதில் 31 வயதான இந்திய...
சீனாவின் கிங்டாவோ நகரில் ஆசிய கலப்பு அணிகள் பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ‘டி’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் நேற்று மக்காவுடன் மோதியது. இந்த ஆட்டத்தில் இந்தியா 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய கால் இறுதி சுற்றுக்கு முன்னேறுவதை உறுதி செய்துள்ளது. தனது அடுத்த ஆட்டத்தில் இந்திய அணி, கொரியாவை எதிர்கொள்கிறது.
மக்காவுக்கு எதிரான...










