Google search engine
நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் அரை இறுதி ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடின. இதில் வெற்றி பெற்ற இந்திய அணி இறுதிக்கு முன்னேறியது. துபாயில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் பலம் பேட்டிங்தான். அதன் காரணமாக இந்த முடிவை ஆஸ்திரேலியா எடுத்தது.இந்திய அணி நான்கு சுழற்பந்து வீச்சாளர்களுடன் இந்தப் போட்டியில் விளையாடியது....
ஐசிசி தொடரின் நாக் அவுட் சுற்றில் 14 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவை வீழ்த்த முடியாத சோகத்துக்கு முடிவுரை எழுதி உள்ளது இந்திய கிரிக்கெட் அணி. துபாயில் நடைபெற்ற நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை 4 விக்கெட்டுகளில் வென்று இறுதிக்கு முன்னேறி உள்ளது இந்தியா. இந்தப் போட்டியில் 264 ரன்கள் என்ற இலக்கை விரட்டியது இந்திய அணி. கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் இணைந்து...
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு துபாயில் நடைபெறும் அரை இறுதி ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இரு அணிகளுமே லீக் சுற்றில் தோல்வியை சந்திக்காமல் அரை இறுதி சுற்றில் கால்பதித்துள்ளன. ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றிருந்த ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி லீக் சுற்றில் வங்கதேசம், பாகிஸ்தான் அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த நிலையில் கடைசி...
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன. இதையொட்டி நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறியதாவது: ஆஸ்திரேலியா மிகவும் வலிமையான எதிரணி. நாங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒன்று மட்டுமே. கடைசி மூன்று போட்டிகளில் எப்படி விளையாடினோமோ அதே போலவே அரை இறுதி ஆட்டத்திலும் விளையாட வேண்டும். ஆஸ்திரேலிய அணி எப்படி விளையாடுவார்கள்...
ஆஸ்திரேலிய அணி உடன் இன்று துபாயில் நடைபெறும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி ஆடும் லெவனில் இடம்பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை அன்று இந்த தொடரின் குரூப் சுற்று போட்டியில் நியூஸிலாந்து அணியை இந்தியா வீழ்த்த 33 வயதான வருண் சக்கரவத்தியின் சுழற்பந்து வீச்சு முக்கிய காரணமாக அமைந்தது. அந்தப் போட்டியில் 10 ஓவர்கள்...
மும்பை சாம்பியன் இடது கை ஸ்பின்னர் ‘கிரேட்’ பத்மாகர் ஷிவால்கர் காலமானார். அவருக்கு வயது 85. கிரேட் ஸ்பின்னரான இவர் இந்தியாவுக்காக ஆடியதே இல்லை என்பதுதான் இதில் வருத்தத்திற்குரிய விஷயம். இவரது இயற்பெயர் பத்மாகர் காஷிநாத் ஷிவால்கர். இவர் முதல் தர கிரிக்கெட்டில் 124 போட்டிகளில் ஆடி 515 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். 1961/62 முதல் 1987/88 வரை இவர் ஆடியிருக்கிறார், மிக நீண்ட கரியர். இதில் ஒருமுறை ஒரு இன்னிங்ஸில்...
துபாயில் இன்று (மார்ச் 4) நடைபெறும் அரை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரரான டிராவிஸ் ஹெட்டை இந்திய அணி சமாளிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில், இந்திய அணிக்கு எதிராக அவரது கடந்த கால செயல்பாடு அப்படியானதாக அமைந்துள்ளது. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அதன் நாக்-அவுட் கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா - ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா - நியூஸிலாந்து அணிகள் அரை இறுதிக்கு முன்னேறியுள்ளன....
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் விதர்பா - கேரளா அணிகள் மோதி வருகின்றன. நாக்பூரில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் விதர்பா அணி 379 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டேனிஷ் மாலேவர் 153 ரன்கள் விளாசினார். தொடர்ந்து விளையாடிய கேரளா அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 39 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்தது. அக்சய் சந்திரன் 14,...
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் - இங்கிலாந்து அணிகள் இடையிலான ஆட்டத்துக்கு முன்பு வரை சலிப்பூட்டுவதாக இருந்தது. இதனால் ஒருநாள் கிரிக்கெட் போட்டி குறித்து ஐசிசி சிந்திக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அஸ்வின் தனது யூடியூப் சானலில் கூறியிருப்பதாவது: தற்போது நடைபெற்று வரும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆப்கானிஸ்தான் - இங்கிலாந்து போட்டிக்கு முன்பு, ஒருநாள்...
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள இங்கிலாந்து அணி லீக் சுற்றில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் அணிகளிடம் தோல்வி அடைந்ததால் அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. அந்த அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் கராச்சியில் இன்று தென் ஆப்பிரிக்காவுடன் மோதுகிறது. இந்நிலையில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறும்போது, “இங்கிலாந்து அணியின் கேப்டன்...