ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, சிஎஸ்கேவுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. இந்த ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியுடன் கொல்கத்தா அணி களமிறங்குகிறது.
அஜிங்க்ய ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 11 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, 5 தோல்வி, ஒரு முடிவில்லாத...
எஞ்சிய 3 ஆட்டங்களிலும் நிலைமையை மாற்றி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவோம் என லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் தரம்சாலாவில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி. 236 ரன்கள் இலக்கை துரத்திய லக்னோ அணியானது 7 விக்கெட்கள் இழப்புக்கு 199...
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் தரம்சாலாவில் நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை 37 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது பஞ்சாப் கிங்ஸ் அணி. முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 236 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங் 48 பந்துகளில், 7 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 91 ரன்கள் விளாசினார். கேப்டன் ஸ்ரேஸ் ஐயர் 25 பந்துகளில், 54 ரன்களும்...
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான காகிசோ ரபாடா, நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். முதல் இரு ஆட்டங்களில் மட்டும் விளையாடிய அவர், அதன் பின்னர் அவசரமாக தாயகம் புறப்பட்டுச் சென்றார். குஜராத் அணி நிர்வாகம், ரபாடா சொந்த காரணங்களுக்காக தாய்நாட்டுக்கு சென்றிருப்பதாக தெரிவித்திருந்தது.
இந்நிலையில் கடந்த 3-ம் தேதி தென் ஆப்பிரிக்க வீரர்கள் சங்கத்தின் வாயிலாக அறிக்கை ஒன்றை வெளியிட்ட ரபாடா...
ஐசிசி வருடாந்திர தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டி20 வடிவில் இந்திய அணி முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. அதேவேளையில் டெஸ்ட் தரவரிசையில் 4-வது இடத்துக்கு பின்தள்ளப்பட்டது. ஆஸ்திரேலிய அணி முதலிடத்தை பிடித்துள்ளது.
இந்த தரவரிசையில் மே 2024 முதல் விளையாடிய அனைத்து போட்டிகளும் 100 சதவீதமாகவும், முந்தைய இரண்டு ஆண்டுகளின் போட்டிகளில் 50 சதவீதமாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. ஒருநாள் கிரிக்கெட் போட்டி அணிகளுக்கான தரவரிசையில், 2023-ம் ஆண்டு...
ஐபிஎல் டி20 தொடரில் சிஎஸ்கே அணியில் இடம் பெற்றிருந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான வன்ஷ் பேடி இடது கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடரின் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். இதையடுத்து அவருக்கு பதிலாக குஜராத்தைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான உர்வில் படேல் சிஎஸ்கே அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
26 வயதான உர்வில் படேல் 2024-25-ம் ஆண்டு சையது முஸ்டாக் அலி டி 20 தொடரில் குஜராத் அணிக்காக களமிங்கி...
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கெதிரான ஆட்டத்தில் அடைந்த தோல்விக்கு நான் முழு பொறுப்பை ஏற்றுக் கொள்கிறேன் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் கேப்டன் எம்.எஸ். தோனி கூறினார்.
நேற்று முன்தினம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தியது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 5...
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா சாம்பியன் பட்டம் வென்றார்.
ஸ்பெயினிலுள்ள மாட்ரிட்டில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஒற்றையர் இறுதிப் போட்டியில் அரினா சபலென்காவும், அமெரிக்க வீராங்கனை கோகோ காப்பும் மோதினர். இதில் சபலென்கா 6-3, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரில் சபலென்கா 3-வது முறையாக சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார் என்பது...
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஹாக்கிப் போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து இந்திய மகளிர் ஹாக்கி அணி போட்டிகளில் விளையாடி வருகிறது. ஆஸ்திரேலிய ஏ, ஆஸ்திரேலிய சீனியர் அணிக்கெதிரான ஹாக்கிப் போட்டிகளில் இந்திய அணி தோல்வி கண்டிருந்தது.
இந்நிலையில், நேற்று பெர்த்தில் உள்ள ஹாக்கி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலிய மகளிர் அணியை வீழ்த்தியது. இந்திய அணியின் நவ்நீத்...
சிஎஸ்கே அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆயுஷ் மாத்ரே பதற்றமே இல்லாமல் விளையாடுகிறார் என்று அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது: ஆயுஷ் மாத்ரே மிகச் சிறப்பாக விளையாடுகிறார். அவரிடம் திறமை இருக்கிறது. மேலும், அவரது பேட்டிங்கில் ஒரு சில்க்கி ஸ்விங் உள்ளது. அதேபோல் ஆக்ரோஷமாகவும் விளையாடக் கூடியவராக உள்ளார். அழுத்தம் உள்ள போட்டிகளில் கூட அவர் பதற்றமின்றி விளையாடுகிறார். அது ஒரு பேட்ஸ்மேனுக்கு...










