குஜராத் மாநிலம் அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று ஐசிசி டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணியை வீழ்த்தி டி20 கோப்பையை 3-வது முறையாகக் கைப்பற்றியது. இதன் மூலம் சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்ட முதல் அணி என்ற சாதனையையும், 3-வது முறையாக மகுடம் சூடிய முதல் அணி என்ற சாதனையையும், சொந்த மண்ணில் முதன்முறையாக கோப்பையை...
நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய வீரர் சஞ்சு சாம்சன், தொடர் நாயகன் விருதை வென்றுள்ளார். இந்நிலையில், மூன்றாவது முறையாக டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்ற பிறகு அவர் கூறியதாவது: “ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது எனக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்கவில்லை. பெஞ்சில் அமர்ந்திருந்தேன். அப்போது எனக்கு என்ன மாதிரியான மனநிலை தேவை என்பதை தேடினேன். அப்போது சச்சினை தொடர்பு...
இந்திய கிரிக்கெட் அணி மூன்றாவது முறையாக டி20 உலகக் கோப்பை பட்டம் வென்று வரலாறு படைத்துள்ளது. இந்த வெற்றியில் இந்திய வீரர் சஞ்சு சாம்சன் முக்கிய பங்காற்றினார். அவரது ஆட்டம் முக்கிய போட்டிகளில் இந்தியாவுக்கு உதவியது. 31 வயதான அவர், இந்த தொடரில் 5 ஆட்டங்களில் ஆடி 321 ரன்கள் சேர்த்தார் சஞ்சு சாம்சன். இதில் 27 பவுண்டரிகள் மற்றும் 24 சிக்ஸர்கள் அடங்கும். மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிராக...
தோனி, கோலி, ரோஹித் சர்மாவுக்குப் பிறகு இந்திய ரசிகர்கள் அதிகம் விரும்பக்கூடிய வீரராக சஞ்சு சாம்சன் இருக்கிறார் என்று தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். மே.இ.தீவுகளுக்கு எதிரான வாழ்வா சாவா போட்டியில் 97 ரன்களை அனாயசமாக எடுத்து வெற்றி பெற்றுக் கொடுத்ததையடுத்து சோஷியல் மீடியாவில் ரசிகர்களும் கிரிக்கெட் நிபுணர்களும் சஞ்சுவை விதந்தோதி வருகின்றனர். உலகக்கோப்பைக்கு முன்பு சஞ்சு சாம்சன் இந்திய அணியின் திட்டமிடல்களில் இல்லை. ஆனால் இந்திய அணியின் மேல் வரிசையில் இருந்த...
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் மற்றும் சானியா சந்தோக் திருமணம் மும்பையின் இன்று (மார்ச் 5) நடைபெற்றது. இதில் சச்சின் குடும்பத்தினருடன் விளையாட்டு, தொழில் துறையினர், அரசியல் பிரமுகர்கள் மற்றும் திரைத் துறையை சேர்ந்த பிரபலங்கள் பலர் பங்கேற்றனர். மும்பையின் தெற்கு பகுதியில் பிரத்யேக நிகழ்வாக இந்த திருமண விழா நடைபெற்றது. இதில் சச்சின் குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் பங்கேற்று சிறப்பித்தனர். கடந்த...
நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணிக்கு 254 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இந்திய அணி. இந்த ஆட்டத்தில் இந்திய வீரர் சஞ்சு சாம்சன், இங்கிலாந்து பவுலர்களின் பந்துவீச்சை துவம்சம் செய்தார். அவர் கொடுத்த சிறப்பான தொடக்கத்தை மற்ற இந்திய வீரர்கள் பயன்படுத்தி ரன் குவித்தனர். மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் இந்த ஆட்டம் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து...
ஐசிசி டி 20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரின் 2-வது அரை இறுதி ஆட்​டத்​தில் நேற்று மும்பை வான்​கடே மைதானத்​தில் நடப்பு சாம்​பிய​னான இந்​திய அணி, இங்​கிலாந்​துடன் பலப்​பரீட்சை நடத்​தி​யது. டாஸ் வென்ற இங்​கிலாந்து அணி​யின் கேப்​டன் ஹாரி புரூக் பீல்​டிங்கை தேர்வு செய்​தார். பேட்​டிங்கை தொடங்​கிய இந்​திய அணிக்கு சஞ்சு சாம்​சன் அதிரடி தொடக்​கம் கொடுத்​தார். ஜோப்ரா ஆர்ச்​சர் வீசிய முதல் ஓவரில் சஞ்சு சாம்​சன் மிட் ஆன் திசை​யில்...
மும்பையில் நேற்று நடைபெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் வீசப்பட்ட 40 ஓவர்களில் 499 ரன்கள் குவிக்கப்பட்டன. இத்தகைய மட்டரகமான மட்டைப் பிட்சில் பும்ரா நிகழ்த்தியது உண்மையில் மிகப்பெரிய அற்புதம் என்றுதான் கூற வேண்டும். அதே போல் அக்சர் படேலின் 2 ‘மேட்ச் டர்னிங்’ கேட்ச்களும் இந்திய வெற்றியில் மிக மிக முக்கியமானவை. சஞ்சு சாம்சன் இன்னிங்ஸ் பற்றி சொல்வதற்கில்லை, இனி அவர் அப்படித்தான் ஆடுவார். ஆடப்போகிறார்......
சென்னை கால்பந்து சங்​கம் சார்​பில் சீனியர் டிவிஷன் லீக் 2025-26 போட்​டிகள் இன்று (5-ம் தேதி) செனாய் நகரில் உள்ள பாவேந்​தர் பார​தி​தாசன் கால்​பந்து மைதானத்​தில் தொடங்​கு​கிறது. இதில் தளபதி ஸ்டா​லின் எஃப்​சி, வரு​மான வரித்​துறை ஆர்சி, மத்​திய கலால் துறை, ஆக்​டோபஸ் மரைன், ஐசிஎஃப், சென்னை நகர காவல்​துறை, இந்​தி​யன் வங்கி எஸ்​&ஆர்​சி, டிபிஒய்சி கீழ்ப்​பாக்​கம், சென்னை சுங்​கவரித்துறை, தமிழக காவல்​துறை,தாவூத் மெமோரியல் எஃப்​சி, ஏஜிஓஆர்சி ஆகிய 12...
இந்​திய கிரிக்​கெட் அணி​யின் முன்​னாள் கேப்​டனும் சிஎஸ்கே அணி​யின் சீனியர் நட்​சத்​திர​மு​மான எம்.எஸ்​.தோனியின் வீடு ஜார்க்​கண்ட் மாநிலம் ராஞ்​சி​யில் உள்ள சிமாலியா பகு​தி​யில் அமைந்​துள்​ளது. சமீபத்​தில் தோனி தனது வீட்​டின் அருகே அனு​ம​திக்​கப்​பட்ட வேகத்தை​விட கூடு​தல் வேகத்​தில் காரை ஓட்​டிச் சென்​றது காவல்​துறை​யின் தானி​யங்கி கேம​ரா​வில் பதிவாகி​யுள்​ளது. இதனைத் தொடர்ந்​து, மோட்​டார் வாக​னச் சட்​டத்​தின் பிரிவு 183-ன் கீழ், தோனிக்கு ரூ.1,000 அபராதம் விதிக்​கப்​பட்​டிருப்​ப​தாக ராஞ்சி போக்​கு​வரத்து காவல் துறை​யினர் தெரி​வித்​துள்​ளனர். தோனி...