மலேசி​யா​வில் உள்ள நெகிரி செம்​பிலான் பகு​தி​யில் துவாங்கு முஹ்ரிஸ் கோப்​பைக்​கான பிஎஸ்ஏ சாலஞ்​சர்ஸ் ஸ்கு​வாஷ் போட்டி நடை​பெற்​றது. இதன் இறு​திப் போட்​டி​யில் உலகத் தரவரிசை​யில் 24-வது இடத்​தில் உள்ள இந்​தி​யா​வின் அபய் சிங், 59-வது இடத்​தில் உள்ள ஹாங்​காங்​கின் ஹென்றி லியுங்​குடன் மோதி​னார். இதில் அபய் சிங் 11-7 6-11 3-11 11-5 12-10 என்ற செட் கணக்​கில் வெற்றி பெற்று சாம்​பியன் பட்​டம் வென்​றார்​.
துலீப் டிராபி தொடரின் அரை இறுதி ஆட்​டத்​தில் தெற்கு மண்​டலம் - வடக்கு மண்​டலம் அணி​கள் இடையி​லான ஆட்டம் பெங்​களூரு​வில் நேற்று தொடங்​கியது. முதலில் பேட் செய்த வடக்கு மண்​டலம் அணி 59.1 ஓவர்​களில் 195 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. அதி​கபட்​ச​மாக தொடக்க வீர​ரான கம்​ரான் இக்​பால் 182 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 10 பவுண்​டரி​களு​டன் 76 ரன்​கள் விளாசி​னார். கேப்​டன் கன்​ஹையா வதவான் 35, ஆயுஷ் டோசேஜா 23, அப்​துல்...
தென் ஆப்​பிரிக்கா - ஆஸ்​திரேலியா அணி​கள் இடையி​லான 3 ஆட்​டங்​கள் கொண்ட ஒரு​நாள் கிரிக்​கெட் போட்டி தொடர் வரும் செப்​டம்​பர் 24-ம் தேதி டர்​பன் நகரில் தொடங்​கு​கிறது. இந்​நிலை​யில் ரபா​டாவுக்கு ஒரு வாரத்​துக்கு முன்​னர் தொடை​யில் காயம் ஏற்​பட்​டது. அவர், முழு உடற்​தகு​தி​யைப் பெறு​வதற்கு குறைந்​தது நான்​கரை வாரங்​கள் ஓய்​வெடுக்க வேண்​டிய சூழல் உரு​வாகி​யுள்​ளது. இது குறித்து தென் ஆப்​பிரிக்க கிரிக்​கெட் வாரி​யம் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில், “காகிசோ ரபா​டாவுக்கு வலது தொடை​யில்...
அர்​ஜெண்டினா கால்​பந்து அணி​யின் நட்​சத்​திர கோல்​கீப்​பர் எமிலி​யானோ மார்ட்​டினெஸை இங்​கிலாந்​தின் முன்​னணி கிளப் அணி​யான செல்சி ஒப்​பந்​தம் செய்​துள்​ளது. 2022-ம் உலகக் கோப்பை கால்​பந்து சாம்​பிய​னான அர்​ஜெண்​டினா அணி​யின் 33 வயதாகும் கோல்​கீப்​ப​ரான எமிலி​யானோ மார்ட்​டினெஸ், ஆஸ்​டன் வில்லா கிளப் அணியி​லிருந்து வில​கி, இங்​கிலாந்​தின் முன்​னணி கிளப்​பான செல்சி அணி​யில் 3 ஆண்​டு​கள் ஒப்​பந்​தத்​தில் இணைந்​துள்​ளார். எமிலி​யானோ மார்ட்​டினெஸ் கூறும்​போது, “செல்சி அணி​யில் இணைவது எனக்​கும் எனது குடும்​பத்​தினருக்​கும் மிக எளி​தான...
இந்தியா யு-19 - ஆஸ்திரேலியா யு-19 அணிகள் இடையே 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டி, 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் வரும் செப்டம்பர் 18-ம் தேதி ராஜ்கோட்டில் தொடங்குகிறது. இந்த தொடர்களுக்கான இந்தியா யு-19 அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒருநாள் போட்டித் தொடருக்கான அணியில் இந்திய அணியின் முன்னாள் வீரர்களான ராகுல் திராவிட்டின் மகன் அன்வே திராவிட், சேவக்கின் மகன் ஆர்யாவிர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கிராண்ட் செஸ் டூர் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் ஆர். பிரக்ஞானந்தா - அமெரிக்காவின் பேபியானோ கருனா மோதி வருகின்றனர். 2 ஆட்டங்கள் கொண்ட கிளாசிக் போட்டியில் முதல் ஆட்டத்தில் பேபியானோ கருனா வெற்றி பெற்றிருந்தார். இந்நிலையில் நேற்று நடைபெற்ற 2-வது ஆட்டத்தை 95-வது நகர்த்தலின் போது பிரக்ஞானந்தா டிரா செய்தார். இதனால் பிரக்ஞானந்தா 3-9 என பின்தங்கி உள்ளார். கிளாசிக்கல் போட்டியை தொடர்ந்து இருவரும் ரேப்பிடு மற்றும் பிளிட்ஸ் போட்டிகளில்...
டிஎன்பிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மதுரை பேந்தர்ஸ், கோவை கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. மதுரை அணி தகுதி சுற்று 1-ல் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியை எதிர்கொண்டிருந்தது. இந்த ஆட்டம் மழை காரணமாக பாதியில் ரத்தாகியிருந்தது. எனினும் லீக் போட்டியில் அதிக வெற்றிகளை குவித்ததன் அடிப்படையில் மதுரை அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. கோவை கிங்ஸ் அணி எலிமினேட்டரில்...
நடப்பு கிராண்ட் செஸ் டூர் தொடரின் இறுதிப் ஆட்டங்கள் அமெரிக்​கா​வின் செயின்ட் லூயிஸ் செஸ் கிளப்​பில் நடை​பெற்றது. இதில் தமிழகத்தை சேர்ந்த இந்​திய கிராண்ட் மாஸ்ட​ரான பிரக்ஞானந்தா 15-13 புள்​ளி​கள் கணக்​கில் அமெரிக்காவின் பேபியானோ கருனாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் கிளாசிக்கல் பிரிவில் முதல் ஆட்டத்தில் பிரக்ஞானந்தா தோல்வியை தழுவினார். அடுத்த ஆட்டத்தை டிரா செய்தார். இதனால் கிளாசிக்கல் சுற்றின் முடிவில் 3-9 என்ற புள்ளிகள்...
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான் லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் இடையே பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மகன்களில் நேர்காணல் ஒளிபரப்பானது. இதையடுத்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணி களமாட மறுத்ததாக தகவல் வெளியானது. பாபர் அஸம் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி...
மகளிர் கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு டி 20 காட்சி போட்டி நடத்தப்பட்டது. இதில் டிஎன்சிஏ தலைவர் லெவன் - டிஎன்சிஏ செயலாளர் லெவன் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த டிஎன்சிஏ செயலாளர் லெவன் 20 ஓவா்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 132 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக நிதி 39 பந்துகளில் 34 ரன்களை எடுத்தார்....