கடந்த சீசன் மிகுந்த ஏமாற்றமும், வலியும் தந்த காரணத்தால் ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து விலகியதாக அஸ்வின் தெரிவித்துள்ளார். 39 வயதான அஸ்வின், கடந்த 2024-ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதன் பின்னர் கடந்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 9 ஆட்டங்களில் மட்டுமே விளையாடி இருந்தார். கடந்த சீசனில் 31 ஓவர்கள் வீசி 7 விக்கெட்டுகள் கைப்பற்றி இருந்தார். அவரது பவுலிங் எகானமி...
சிஎஸ்கே அணி ஐபிஎல் 2026 தொடரில் 3 போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது. ஆனால் இதில் சிக்கல் இல்லை. முன்பெல்லாம் இப்படி தோல்வி அடைந்தால் தோனி எப்படியும் அணியை மீட்டுக் கொண்டு வருவார் என்ற நம்பிக்கை சிஎஸ்கே ரசிகர்களுக்கு இருந்தது. இப்போது அந்த நம்பிக்கை வறண்டு போய் விட்டது. இந்நிலையில் சிஎஸ்கே பிரச்சினைகளை முன்னாள் இந்திய இடது கை வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான் அலசியுள்ளார். பந்து வீச்சில் அனுபவமின்மையும் சொதப்பலும்...
 பஞ்சாப் கிங்ஸ் அணியின் டாப் ஆர்டரில் விளையாடும் இளம் இந்திய வீரர்கள்தான் தங்கள் ஸ்பெஷல் என ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். கடந்த 2025 சீசனில் அணியை மீண்டும் கட்டமைத்தது பஞ்சாப் கிங்ஸ் அணி. புதிய கேப்டன், புதிய வீரர்கள் என அந்த அணி புதுப்பொலிவு பெற்றது. அதே பாய்ச்சலோடு உச்சமாக விளையாடிய அந்த அணி கடந்த சீசனில் இறுதிக்கு முன்னேறி அசத்தியது. நடப்பு சீசனிலும் முதல் இரண்டு ஆட்டங்களில் வென்று...
ஐபிஎல் 2026 தொடரின் 11-வது லீக் ஆட்டத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 43 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றியைப் பதிவு செய்தது.  பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி, ஐபிஎல் வரலாற்றில் சென்னைக்கு எதிராகத் தனது அதிகபட்ச ஸ்கோரான 250 ரன்களைக் குவித்து சாதனை படைத்தது. டாஸ் வென்ற சிஎஸ்கே அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு...
ஐபிஎல் தொடரில் நேற்று பெங்களூரு​வில் உள்ள சின்​ன​சாமி மைதானத்​தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் நடப்பு சாம்​பிய​னான ராயல் சாலஞ்​சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி), 5 முறை சாம்​பிய​னான சிஎஸ்​கேவுடன் மோதியது. டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்​டன் ருது​ராஜ் கெய்க்​வாட் பீல்​டிங்கை தேர்வு செய்​தார். இதனால் ஆர்​சிபி முதலில் பேட் செய்​தது. முதல் ஓவரின் 4-வது பந்​தில் ரன் ஏதும் எடுக்​காத நிலை​யில் ரன் அவுட் ஆவதில் இருந்து தப்​பித்த விராட் கோலி 7...
“நான் மெஷின் அல்ல. எனது கிரிக்கெட் சீசன் சார்ந்த செயல்பாட்டில் ஏற்றம், இறக்கம் இருக்கும்” என எல்எஸ்ஜி அணியின் பந்து வீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளார். நடப்பு ஐபிஎல் சீசனில் ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (எல்எஸ்ஜி) அணிகள் விளையாடின. இதில் எல்எஸ்ஜி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருதை ஷமி வென்றார். 4 ஓவர்கள் வீசி 9 ரன்கள்...
ஞாயிற்றுக்கிழமை அன்று சிஎஸ்கே அணியை 43 ரன்களில் வீழ்த்தியது ஆர்சிபி. இந்த தோல்விக்கு தானே காரணம் என பொறுப்பேற்றுள்ளார் சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட். நடப்பு ஐபிஎல் சாம்பியனான ஆர்சிபி உடன் பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் சிஎஸ்கே விளையாடியது. 251 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய சிஎஸ்கே, 207 ரன்கள் மட்டுமே எடுத்தது. இது இந்த சீசனில் அந்த அணிக்கு ஹாட்ரிக் தோல்வியாக அமைந்தது. கேப்டனாக ருதுராஜ்...
பணம் பெற்​றுக்​கொண்டு கேரளா​வுக்கு வந்து விளை​யா​டா​மல் அர்ஜெண்டினா கால்​பந்து அணி ஏமாற்​றி​விட்​ட​தாக கேரள விளை​யாட்​டுத்​துறை அமைச்​சர் வி.அப்துரஹி​மான் தெரி​வித்​துள்​ளார். அர்​ஜெண்​டினா கால்​பந்து அணி​யும் நட்​சத்​திர வீர​ரான லயோனல் மெஸ்​ஸி​யும் கடந்த மார்ச் மாதம் கேரளா​வுக்கு வருகை தரு​வார்​கள் என கேரள விளை​யாட்​டுத்​துறை அமைச்​சர் அப்​துரஹி​மான் கடந்த 2025-ம் ஆண்டு நவம்​பர் மாதம் தெரி​வித்​திருந்​தார். ஆனால் திட்​ட​மிட்​டபடி அர்​ஜெண்​டினா அணி கடந்த மாதம் கேரளா வரு​கை தரவில்லை. இந்​நிலை​யில் அப்​துரஹி​மான் நேற்று தொலைக்​காட்சி...
சைப்​ரஸ் நாட்​டில் உள்ள பாஃ​போஸ் நகரில் கேண்​டிடேட்ஸ் செஸ் தொடர் நடை​பெற்று வரு​கிறது. இதன் 4-வது சுற்​றில் இந்​திய கிராண்ட் மாஸ்​ட​ரான ஆர்.பிரக்ஞானந்தா, ஜெர்​மனி​யின் மத்​தி​யாஸ் ப்ளூபாமுடன் மோதி​னார். இதில் கருப்பு காய்​களு​டன் விளை​யாடிய பிரக்​ஞானந்தா 37-வது நகர்த்​தலின் போது டிரா செய்​தார். உஸ்​பெகிஸ்​தானின் ஜவோகிர் சிந்​தா​ரோவ், அமெரிக்​கா​வின் ஃபேபி​யானோ கரு​னா​வுடன் மோதி​னார். இதில் 36-வது நகர்த்​தலின் போது ஜவோகிர் சிந்​தா​ரோவ் வெற்றி பெற்​றார். இன்​னும் 10 சுற்​றுகள் உள்ள...
 ஐபிஎல் கிரிக்​கெட் போட்​டி​யில் விளையாடுவதற்​காக நீதி​மன்ற அனு​ம​தியை இலங்கை வீரர் நுவான் துஷாரா நாடி​யுள்​ளார். இலங்கை கிரிக்​கெட் அணி​யின் முன்​னணி வேகப்​பந்து வீச்​சாள​ராக இருப்​பவர் நுவான் துஷா​ரா. இந்​நிலை​யில் ஐபிஎல் போட்​டி​யில் விளை​யாட ராயல் சாலஞ்​சர்ஸ் பெங்களூரு (ஆர்​சிபி) அணி​யில் ஒப்​பந்​தம் செய்​யப்​பட்​டிருந்​தார் துஷா​ரா. ஆனால், அவர் உடற்​தகு​தித் தேர்​வில் தோல்வி அடைந்​த​தால் அவருக்கு ஆட்​சேபம் இல்​லாத சான்​றிதழ் ​(என்​ஓசி) வழங்​கப்​பட​வில்​லை. இந்த சான்​றிதழ் இருந்​தால்​தான் அவர் ஐபிஎல் போட்​டி​யில் பங்​கேற்க...