அர்ஜெண்டினா கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான லயோனல் மெஸ்ஸி மற்றும் அவரது அணியினர் ‘கோட் இந்தியா டூர்’ எனும் பெயரில் இன்று (13-ம் தேதி) முதல் 3 நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளனர்.
மெஸ்ஸி, இந்தியாவுக்கு வருகை தருவது இது 2-வது முறையாகும். கடைசியாக அவர், கடந்த 2011-ம் ஆண்டு கொல்கத்தாவில் நடைபெற்ற சர்வதேச நட்புரீதியிலான கால்பந்து போட்டியில் பங்கேற்றிருந்தார்.
ஆனால் இம்முறை மெஸ்ஸி...
எஸ்டிஏடி உலகக் கோப்பை ஸ்குவாஷ் தொடர் சென்னையில் நடைபெற்று வருகிறது. 12 நாடுகள் கலந்துகொண்டுள்ள இந்தத் தொடரில் நேற்று கால் இறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவுடன் மோதியது. இந்த ஆட்டத்தில் இந்தியா 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது.
மகளிர் பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா, டீகன் ரஸ்ஸலுடன் மோதினார். அதில் ஜோஷ்னா 7-4, 7-4, 7-2...
மகளிர் ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடர் சிலி நாட்டின் சாண்டியாகோ நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் 9-வது இடத்துக்கான ஆட்டத்தில் இந்தியா - ஸ்பெயின் அணிகள் மோதின. இதில் இந்திய மகளிர் அணி 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்து தொடரை 10-வது இடத்துடன் நிறைவு செய்தது.
ஸ்பெயின் அணி சார்பில் நடாலியா விலனோவா (16-வது நிமிடம்), எஸ்தர் கேனல்ஸ் (36-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல்...
‘சரியான நேரத்தில் பார்முக்கு திரும்புவார்கள்’: கில், சூர்யகுமார் யாதவ் மீது இந்திய அணியின் துணை பயிற்சியாளர் நம்பிக்கை
admin - 0
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நேற்று முன்தினம் முலான்பூரில் நடைபெற்ற 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 214 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணி 19.1-வது ஓவரில் 162 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக திலக் வர்மா 62 ரன்கள் சேர்த்தார்.
தொடக்க வீரரான ஷுப்மன் சந்தித்த முதல் பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். கேப்டன் சூர்யகுமார் யாதவ் 5 ரன்களில்...
மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நியூஸிலாந்து - மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 205 ரன்களும், நியூஸிலாந்து அணி 278 ரன்களும் எடுத்தன.
73 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய மேற்கு...
‘கைதி 2’ அப்டேட் குறித்து கார்த்தி கூறியுள்ள பதிலால் நெட்டிசன்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஹைதராபாத்தில் ‘வா வாத்தியார்’ படத்தினை விளம்பரப்படுத்தி வந்தார் கார்த்தி. அப்போது எப்போதும் போலவே ‘கைதி 2’ குறித்து கார்த்தியிடம் கேள்வி எழுப்பினார்கள். அப்போது ‘விரைவில்.. விரைவில்’ என்று முதலில் பதிலளித்தார். பின்பு பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது ‘கைதி 2’ குறித்து கேள்வி எழுப்பினார்கள்.
அப்போது “’எனக்கு ஒரே ஒரு அப்டேட் பற்றி மட்டும் தெரியாது. அது ’கைதி 2”...
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி20 ஆட்டத்தில் இந்தியா தோல்வி அடைந்தது.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது ஆட்டம் இன்று முல்லன்பூரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி, பந்து வீச முடிவு செய்தது.
அதன்படி பேட்டிங் இறங்கிய தென் ஆப்பிரிக்க அணியின் ஓபனிங் வீரர்களாக குயின்டன் டிகாக், ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் ஆடினர். இதில் ரீஸா...
யு-19 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் இன்று (12-ம்தேதி) தொடங்குகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட 8 அணிகள் கலந்து கொள்கின்றன. இவை 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்திய அணி ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ளது.
இதே பிரிவில் மலேசியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம் அணிகளும் உள்ளன. யு-19 இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் இன்று ஐக்கிய அரபு அமீரகத்துடன் (யுஏஇ) மோதுகிறது. காலை 10.30 மணிக்கு நடைபெறும்...
டேக்வாண்டோ தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்திய வீராங்கனையான ரூபா பேயர் 8-வது இடத்தை பிடித்துள்ளார்.
இதன் மூலம் உலக தரவரிசையில் 8-வது இடத்தைப் பிடித்த இந்தியாவின் முதல் டேக்வாண்டோ வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றுள்ளார். மேலும் டேக்வாண்டோ உலக தரவரிசை பட்டியலில் அனைத்து பிரிவுகளிலும் முதல் 100 இடங்களுக்குள் உள்ள ஒரே இந்தியர் இவர்தான்.
ஆசிய போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ள 24 வயதான அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த ரூபா...
இந்திய மகளிர் லீக் (ஐடபிள்யூஎல்) கால்பந்து தொடர் வரும் டிசம்பர் 20-ம் தேதி கொல்கத்தாவில் தொடங்கும் என அகில இந்திய கால்பந்து சம்மேளனம் அறிவித்துள்ளது. இம்முறை போட்டி 2 கட்டங்களாக நடத்தப்படுகிறது.
முதல் கட்டம் டிசம்பர் 20 முதல் ஜனவரி 26 வரை நடைபெறும். இந்த காலக்கட்டத்தில் தொடரில் பங்கேற்கும் 8 அணிகளும் 28 ஆட்டங்களில் விளையாடும். போட்டிகள் அனைத்தும் நேஷனல் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் மற்றும் கல்யானியில் உள்ள...
