அதிரடியாக விளையாடினால் முதல் 6 ஓவரிலேயே போட்டியை வெல்ல சஞ்சு சாம்சனால் முடியும்: கவுதம் கம்பீர் புகழாரம்
admin - 0
சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடினால், அவரால் ஆட்டத்தின் முதல் 6 ஓவர்களிலேயே போட்டியை வென்று கொடுக்க முடியும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பாராட்டு தெரிவித்தார்.
கடந்த 8-ம் தேதி நடைபெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி, நியூஸிலாந்தை வென்று கோப்பையைக் கைப்பற்றியது. 3-வது முறையாக டி20 உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்திருந்தது.
டி20 உலகக் கோப்பையின் கடைசி 3...
மிர்பூரில் நேற்று நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டி கடைசி ஒவர் வரை சென்று கடைசியில் பாகிஸ்தான் தோல்வியில் முடிந்து தொடரையும் 1-2 என்று இழந்தது.
முதலில் பேட் செய்த வங்கதேசம் தன்சித் ஹசன் (107) சதத்துடன் 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 290 ரன்கள் எடுக்க பாகிஸ்தான் அணி சல்மான் அலி ஆகாவின் (106) அற்புதமான விரட்டல் சதத்துடன் நெருக்கமாக வந்து 279 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து...
எதிர்வரும் 2027 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை இந்தியா வெல்வதே இலக்கு என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். தற்போது இந்திய அணியை ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் வழிநடத்தி வருகிறார்.
“தேசத்துக்காக உலகக் கோப்பை வெல்வதே பிரதான இலக்கு. அது குறித்து நான் அடிக்கடி சிந்திப்பது உண்டு. கடந்த முறை உலகக் கோப்பை தொடரின் இறுதி வரை முன்னேறி இருந்தோம். அடுத்த முறை...
சுவிட்சர்லாந்தின் பாசல் நகரில் சுவிஸ் ஓபன் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று ஆடவருக்கான இரட்டையர் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடியானது டென்மார்க்கின் கிறிஸ்டியன் ஃபாஸ்ட் கேஜர், ராஸ்மஸ் கேஜர் ஜோடியுடன் மோதுவதாக இருந்தது.
ஆனால் போட்டிக்கு முன்னதாக சாட்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டிக்கு திடீரென வலது தோள்பட்டையில் வலி ஏற்பட்டது. இதனால் கால் இறுதி சுற்றில் இருந்து சாட்விக், ஷிராக்...
தாய்லாந்தின் பாங்காக் நகரில் உலக குத்துச்சண்டை ஃபியூச்சர்ஸ் கோப்பை நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான 48 கிலோ எடை பிரிவு கால் இறுதி சுற்றல் இந்தியாவின் கன்ஜன் 5-0 என்ற கணக்கில் அஜர்பைஜானின் குலார் ஹுசைனோவா வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினார்.
54 கிலோ எடைப் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் ஜாய் தேவி, ஜப்பானின் யூரா கனேமருவை தோற்கடித்து அரை இறுதி சுற்றில் நுழைந்தார். 50 கிலோ...
ஐபிஎல் 2026-ம் ஆண்டு சீசனையொட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ஜிம்பாப்வே அணியை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான பிளெசிங் முசரபானியை ஒப்பந்தம் செய்துள்ளது. ஐபிஎல் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், முசரபானி பாகிஸ்தான் சூப்பர் லீக் ஒப்பந்தத்தைக் கைவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் முடிவடைந்த டி 20 உலகக் கோப்பை தொடரில் முசரபானி சிறந்த செயல் திறனை வெளிப்படுத்தியிருந்தார். இந்தத் தொடரில் அவர், 13 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். 6 அடி 8...
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா வரும் 28-ம் தேதி பெங்களூருவில் கோலாகலமாக தொடங்குகிறது. இதையொட்டி இந்தத் தொடரில் கலந்து கொள்ளும் அனைத்து அணிகளும் கடந்த சில வாரங்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), ஐபிஎல் அணிகளுக்கான பயிற்சி வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அனைத்து அணிகளுக்கும் 5 பக்கங்கள் கொண்ட வழிகாட்டு நெறிமுறைகளை பிசிசிஐ அனுப்பிவத்துள்ளது. இதன்படி எதிரணிகள் தங்களது வலைப்பயிற்சியின் போது பயன்படுத்திய...
இந்திய அணிக்கு நடப்பாண்டில் ஏற்கெனவே போட்டிகள் நிறைந்த கால அட்டவணை உள்ளது. இந்நிலையில் வரும் 2027-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற உள்ள ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி உலகக் கோப்பைக்கு முன்னதாக, இருதரப்பு தொடர்களில் கூடுதல் ஒருநாள் போட்டிகளை சேர்க்குமாறு பல்வேறு கிரிக்கெட் வாரியங்கள் பிசிசிஐ-க்கு கோரிக்கை விடுத்துள்ளன.
இந்த வகையில் இந்திய அணி வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது இருதரப்பு ஒருநாள் போட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு இங்கிலாந்து, நியூஸிலாந்து,...
சமீபத்தில் நிறைவடைந்த ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்திருந்தது. இறுதிப் போட்டியில் இந்திய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணியை தோற்கடித்து இருந்தது.
இந்நிலையில் 24 அணிகள் கலந்து கொண்ட இந்தத் தொடரில் ஒவ்வொரு அணிக்கும் வழங்கப்பட்ட பரிசுத் தொகையை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு சுமார் ரூ.25...
அமெரிக்காவின் இந்தியன் வெல்ஸ் நகரில் இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் இரட்டையர் பிரிவில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் யுகி பாம்ப்ரி, சுவீடனின் ஆண்ட்ரே கோரன்சன் ஜோடி, செக்குடியரசின் ஜிரி லெஹெக்கா, நெதர்லாந்தின் சாண்டர் அரெண்ட்ஸ் ஜோடியை எதிர்த்து விளையாடியது.
ஒரு மணி நேரம் 14 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் யுகி பாம்ப்ரி, ஆண்ட்ரே கோரன்சன் ஜோடி 6-4, 6-4...










