ரூட், புரூக் கூட்டணியால் இங்கிலாந்து ஆதிக்கம்: மழையால் முதல் நாள் ஆட்டம் பாதிப்பு – சிட்னி டெஸ்ட்
admin - 0
இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி கிரிக்கெட் டெஸ்ட் போட்டி இன்று சிட்னி மைதானத்தில் தொடங்கியது. 4-வது போட்டியில் பெற்ற வெற்றியைத் தொடரும் உற்சாகத்தில் இங்கிலாந்து இதில் களமிறங்கியது.
நடப்பு ஆஷஸ் தொடரின் முதல் 3 போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றிவிட்டது. இந்நிலையில், மெல்பர்னில் நடந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. மெல்பர்னில் நடந்த முந்தைய டெஸ்ட் போட்டி 2 நாட்களிலேயே...
இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் டெஸ்ட் போட்டியில் 14 ஆயிரம் ரன்களை விரைவில் எட்டவுள்ளார்.
சிட்னியில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸ் ஜோ ரூட் 72 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் உள்ளார். இதன் மூலம் அவர் டெஸ்ட் போட்டிகளில் 13,849 ரன்களை குவித்துள்ளார். அவர் 14 ஆயிரம் ரன்களை எட்டுவதற்கு இன்னும் 151 ரன்கள் மட்டுமே தேவை.
இந்தப் போட்டியில் மேலும் ஓர் இன்னிங்ஸ்...
2036-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்த இந்தியா முழு பலத்துடன் தயாராகி வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் வாராணசியில் 72-வது தேசிய வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. போட்டியை பிரதமர் மோடி, காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.
பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது: இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்துக்கும் வாலிபால் போட்டிக்கும் இடையே பல தொடர்புகள் உள்ளன. வாலிபால் என்பது ஒரு...
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க உள்ள 15 பேர் கொண்ட வங்கதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அணிக்கு லிட்டன் தாஸ் கேப்டனாக இருப்பார் என்று வங்கதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டிகள் வரும் பிப்ரவரி 7-ம் முதல் மார்ச் 8-ம் தேதி வரை இந்தியா, இலங்கையில் நடைபெற இருக்கின்றன.
வங்கதேச அணி விவரம்: லிட்டன் தாஸ் (கேப்டன்), டான்சித் ஹாசன், பர்வேஸ் ஹொசைன் எமோன்,...
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) ஐபிஎல் அணியிலிருந்து முஸ்டாபிஸுர் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஐசிசி உலகக் கோப்பை போட்டியில் வங்கதேசம் பங்கேற்கும் போட்டிகளை இந்தியாவிலிருந்து இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்று வங்கதேச கிரிக்கெட் வாரியம் (பிசிபி) கோரிக்கை விடுத்துள்ளது.
வங்கதேசத்தில் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருவதால் கொல்கத்தா அணியில் இடம்பெற்றிருந்த முஸ்டாபிஸுரை நீக்கவேண்டும் என்று பாஜக, சிவசேனா, இந்து அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர். இவரை கடந்த மாதம் நடந்த ஐபிஎல் மினி ஏலத்தில் ரூ.9.20...
இந்திய கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக பணியாற்றும் வாய்ப்பு வந்தால் அதை ஏற்கமாட்டேன் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஜேசன் கில்லெஸ்பி தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி சர்வதேச ஒருநாள் போட்டி, டி 20 போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறது. ஆனால் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி கடந்த ஆண்டில் மோசமாக விளையாடி தோல்வி கண்டது.
இதையடுத்து இந்திய அணிக்கு டெஸ்ட் பயிற்சியாளர் பதவிக்கு தனியாக ஒருவரை நியமிக்க இந்திய கிரிக்கெட்...
இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டிக்கான டிக்கெட் விற்பனை 8 நிமிடங்களில் முடிந்துவிட்டது.
நியூஸிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. முதல் ஒருநாள் போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை நேற்று நடைபெற்றது. இந்த விற்பனை தொடங்கிய 8 நிமிடத்தில் அனைத்து டிக்கெட்களும் விற்று தீர்ந்து விட்டதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
2027-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்குப் பின்னர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கவலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இந்தி யுடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியதாவது: "தற்போது நாட்டின் பல நகரங்களில் விஜய் ஹசாரே கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ரோஹித் சர்மா, விராட் கோலி...
வரும் 4-ம் தேதி சிட்னியில் தொடங்கும் ஆஷஸ் தொடரின் 5-வது டெஸ்ட் போட்டிதான் தனது கடைசி போட்டி என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் உஸ்மான் கவாஜா அறிவித்துள்ளார்.
39 வயதான உஸ்மான் கவாஜா, பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் பிறந்தவர். அவரது குடும்பம் ஆஸ்திரேலியாவில் குடிபெயர்ந்தது. அப்போது அவருக்கு வயது 4. கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்ட கவாஜா, ஆஸ்திரேலியாவில் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி, தனது அபார ஆட்டத்திறனை வெளிப்படுத்தி தேசிய அணியில்...
2026-ம் ஆண்டில் 3 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளுடன் பல்வேறு கிரிக்கெட் தொடர்கள் நடைபெறவுள்ளன. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
புத்தாண்டு பிறந்துள்ள நிலையில் இந்த ஆண்டு முழுவதும் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் இந்தியா பங்கேற்கும் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ளன. ஆண்டின் தொடக்கத்திலேயே ஜனவரி 9-ம் தேதி முதல் மகளிருக்கான பிரீமியர் லீக் கிரிக்கெட் (டபிள்யூபிஎல்) இந்தியாவில் நடைபெறவுள்ளது. இதைத் தொடர்ந்து 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை...
