பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக பாபர் அசம் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இம்மாத இறுதியில் மேற்கு இந்தியத் தீவுகள் நாட்டில் அந்த அணிக்கெதிராக 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பாகிஸ்தான் அணி பங்கேற்று விளையாடவுள்ளது. இதைத் தொடர்ந்து டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் பாகிஸ்தான் அணியை, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) நேற்று அறிவித்தது. பாகிஸ்தான் அணிக்கு பாபர் அசம் மீண்டும் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்தத் தொடர்கள் ஐசிசி உலக...
விராட் கோலியிடம் டெஸ்ட் கிரிக்கெட்டில் பங்களிப்பு செய்ய இன்னும் கிரிக்கெட் திறமை மீதமிருக்கும்போது கோபத்தினால் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றிருக்கக் கூடாது என்று லெஜண்ட் கபில் தேவ் தெரிவித்துள்ளார். டி20 உலகக் கோப்பைத் தோல்விக்குப் பிறகே முகமது ஷமியை விஷமிகள் சிலர் ட்ரோல் செய்து கோபாவேசத்தையும் விஷத்தையும் கக்க, அதனை கோலி கடுமையாக எதிர்த்தார். ஷமிக்கு தன் முழு ஆதரவையும் தெரிவித்ததால் கோலி சில சக்திகளிடமிருந்து எதிர்ப்பை எதிர்கொள்ள...
மெக்சிகோ நகரில் நடைபெற்ற ஃபிபா உலகக் கோப்பை ரவுண்ட் -16 சுற்று ஆட்டத்தில் இன்று இங்கிலாந்து அணி மெக்சிகோ அணியை பரபரப்பான் ஆட்டத்தில் நெருக்கமாக 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதியில் நார்வேயை சந்திக்கிறது. பெல்லிங்காமின் அபாரமான இரட்டை கோல்களினால் முன்னிலை பெற்ற இங்கிலாந்து 54வது நிமிடத்தில் அதன் தடுப்பு வீரர் ஜாரெல் கான்சா என்ற வீரர் மெக்சிகோவின் ஜீசஸ் கல்லார்டோவை தடுத்தாட்கொள்ள முற்பட்ட போது முறையற்ற விதத்தில்...
இந்திய கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக வரும் ஆகஸ்ட் மாதம் இலங்கை செல்கிறது. இதன் முதல் போட்டி காலே மைதானத்தில் 15-ம் தேதியும், 2-வது போட்டி கொழும்பு நகரில் ஆகஸ்ட் 23-ம் தேதியும் தொடங்குகிறது. இந்த தொடர் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியின் அங்கமாக உள்ளது.
பிஃபா உலகக் கோப்பை கால்​பந்து தொடரில் நேற்று அமெரிக்​கா​வின் சியாட்டில் நகரில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் பெல்ஜியம் - செனகல் அணி​கள் பலப்​பரீட்சை நடத்​தின. 24-வது நிமிடத்​தில் செனகல் அணி முதல் கோலை அடித்​தது. செனகல் அணி​யின் நட்​சத்​திர வீர​ரான சடியோ மானே தனக்கு முன்​னால் இருந்த தடுப்​பாட்​டக்​காரரை நிலை​தடு​மாறச் செய்​து, பெனால்டி ஸ்பாட்டை நோக்கி பந்தை வேக​மாக கிராஸ் செய்​தார். அங்கே நின்ற இஸ்​மைலா சர்பந்தை தலை​யால் முட்டி கோல்...
டொராண்டோவில் நடைபெற்ற போர்ச்சுகல் மற்றும் குரேஷியா அணிகளுக்கும் இடையிலான ஆட்டத்தில் பரபரப்பான கடைசி நிமிடங்களும், VAR மூலம் நிராகரிக்கப்பட்ட சமநிலை கோல் சர்ச்சையிலும் குரோஷியாவை 2-1 என்ற கணக்கில் வீழ்த்திய போர்ச்சுகல், உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதி - 16 அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது. போட்டியின் கூடுதல் நேரத்தில் ரஃபேல் லியோ வழங்கிய பந்தை கோன்சாலோ ராமோஸ் தலையால் முட்டி கோலாக மாற்றினார். அந்த நேரத்தில் முன்பே...
இந்திய ஹாக்கி அணியின் சமீபத்திய செயல்பாடுகள் குறித்து முன்னாள் நட்சத்திர கோல் கீப்பரும், இருமுறை ஒலிம்பிக் பதக்க வெற்றியாளருமான பி.ஆர்.ஸ்ரீஜேஷ் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு சீசன்களாக எஃப்ஐஎச் (FIH) புரோ லீக்கில் இந்தியா எட்டாவது இடத்தில் முடித்திருப்பது அணியின் தரம் குறைந்து வருவதை வெளிப்படுத்துவதாக அவர் கூறியுள்ளார். சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் பதிவிட்ட ஸ்ரீஜேஷ், “நான் இந்திய ஹாக்கிக்கு எதிரானவன் அல்ல. நான் ஏமாற்றமடைந்திருக்கிறேன். ஏனெனில் இந்த...
நடப்பு ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ரவுண்ட் ஆப் 16 சுற்றுக்கு முன்னேறியுள்ளது போர்ச்சுகல். அந்த வெற்றியை கடந்த ஆண்டு காலமான சக வீரர் டியோகோ ஜோட்டாவுக்கு அந்த அணியினர் சமர்ப்பித்தனர். டொரண்டோவில் இந்திய நேரப்படி இந்த தொடரின் ரவுண்ட் ஆப் 32 சுற்று ஆட்டம் இன்று அதிகாலை 4.30 மணிக்கு தொடங்கியது. இதில் 2-1 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தியது போர்ச்சுகல். அந்த அணிக்காக ரொனால்டோ...
உலகக் கோப்பை நாக்-அவுட் சுற்றின் அழுத்தம் உச்சத்தில் இருந்தது. ஈக்வடாருக்கு எதிரான போட்டியில் மெக்சிகோ ரசிகர்களின் எதிர்பார்ப்பு முழுவதும் ஒரே வீரர் மீது குவிந்திருந்தது. 22-வது நிமிடத்தில் பந்தை பெற்ற ஜூலியன் குய்னோன்ஸ், எதிரணியின் டிஃபென்ஸை வேகமாக உடைத்துக் கொண்டு கோல் அடித்தார். சில நிமிடங்களுக்குப் பிறகு ரவுல் ஜிமெனஸின் கோலுக்கும் உதவினார். அந்த 2-0 வெற்றி மெக்சிகோவை உலகக் கோப்பையின் அடுத்தச் சுற்றுக்கு அழைத்துச் சென்றதோடு, பல...
அயர்லாந்து தொடருக்கு முன் 16 தொடர்களை தோல்வியே இல்லாமல் ஆடிவந்து டி20 கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி வந்த இந்திய அணி அயர்லாந்திடம் 2-0 என்று அதிர்ச்சித் தோல்வி தழுவியது எதனால் என்பது குறித்து கேப்டன் ஸ்ரேயஸ் அய்யர் மனம் திறந்துள்ளார். அயர்லாந்து இவ்வளவு நன்றாக ஆடும் என்று எதிர்பார்க்கவில்லை என்று ஒரு கேப்டனாக ஸ்ரேயஸ் அய்யர் கூறுகிறார் என்றால் இவ்வளவு அதி நம்பிக்கைத் தேவையா? ஒரு கேப்டன் இப்படி நினைக்கலாமா?...